சமூர்த்தி உத்தியோகத்தர்களின் நடவடிக்கையினை கண்டுகொள்ளுமா திணைக்களம்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் சில சமூர்த்தி உத்தியோகத்தர்களின் நடவடிக்கை மக்களின் பணத்தினை ஏமாற்றும் நடவடிக்கையாக காணப்படுகின்றது இவ்வாறான உத்தியோகத்தர்கள் மீது திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சமூர்த்தி திணைக்களத்தின் பதில்கடமை முகாமையாளர்கள் என பயிற்சி பெற்றவர்கள் 10 பேர் காணப்படுகின்றார்கள். இவர்கள் மக்களின் பணத்தினை துஸ்பிரயோகம் செய்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள் இது ஒருவகை மோசடியாகவே கருதக்கூடியதாக இருக்கின்றது இவ்வாறான நிலை மாவட்ட செயலத்தின் கீழ் இயங்கும் சமூர்த்தி திணைக்களத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் பதில் கடமை முகாமையாளர்கள் பலர் செயற்பட்டு வருகின்றமை புலனாய்வு தகவல்கள் ஊடாக அறியமுடிகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 10 வங்கிகள் காணப்படுகின்றது 6பிரதேச செயலகங்கள் காணப்படுகின்றது 185 வரையான சமூர்த்தி உத்தியோகத்தர்கள் பணியாற்றி வருகின்றார்கள் கடந்த காலங்களில் அண்ணளவாக 15 ஆயிரம் வரையான சமூர்த்தி பயனாளிகள் குடும்பங்கள் காணப்படுகின்றன.
அரச உத்தியோகத்தர் செய்யும் மோசடிகள்தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களிடம் எந்த கருத்தும் கேட்காமல் அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கையால் தொடர்ந்தும் மக்கள் பாதிக்கப்பட்டுகொண்டிருக்கின்றமை கவலையளிக்கின்ற விடையம்.
சில உத்தியோகத்தர்களை காப்பாற்ற துடிக்கும் சமூர்த்தி திணைக்கள அதிகாரிள் அரசியல் வாதிகளின் பின்னணியில் செயற்படுகின்றார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது?
குறிப்பாக செம்மலை சமூர்த்தி வங்கியில் அமீர்கான் என்பவர் நிதிமோசடி செய்த கிராம உத்தியோகத்தர் கொக்குத்தொடுவாய்மத்தி,கொக்கிளாய் கிராமத்தின் உத்தியோகத்தருக்கு ஆதரவாக செயற்பட்டுவருகின்றமை இதற்கு சமூர்த்தி பணிப்பாளரும் உடந்தையாக காணப்படுகின்றார். இவர் தொடச்சியாக 7 ஆண்டுகளாக செம்மலை சமூர்த்தி வங்கியில் கடமையாற்றுகின்றார் இவரின் மோசடி தொடர்பில் சரியான விசாரணை இடம்பெறவில்லை இவரை இடம்மாற்ற முடியாதவாறு அரசியல் வாதிகளின் செல்வாக்கு காணப்படுகின்றதா என்ற கேள்வியினை சமூர்த்தி திணைக்களம் நோக்கி கேட்கின்றோம்
இந்த கிராமத்தில் நிதிமோசடி இடம்பெற்றுள்ளமை அம்பலமாகியுள்ளது....
முள்ளியவளை சமூர்த்தி வங்கியில் 2013 தொடக்கம் 2017 வரையான காலப்பகுதியில் கடன்களை மக்களுக்கு வழங்கி மேசடி செய்த பதில்கடமை உத்தியோகத்தரை இன்று சிலாவத்தை வங்கியில் பதில்கடமை உத்தியோகத்தராக நியமித்துள்ளார்கள் இவர்களது ஊழல்கள் இன்னும் சரியாக விசாரிக்கப்படவில்லை
புதுக்கடியிருப்பு சமூர்த்திய வங்கியில் இடம்பெறும் நிதி மோசடிகளையும் கண்டுகொள்ளுமா மாவட்ட திணைக்களம்?
புதுக்குடியிருப்பு சமூர்த்தி வங்கியில் கோம்பாவில் பிரிவில் 25 இலட்சம் வரையான பணம் நிதி மோசடி ஏற்படுத்தியமை தெரிந்தும் அதற்கான கணக்காய்வு அறிக்கை விசாரணை அறிக்கை எடுத்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் குறித்த உத்தியோகத்தரை பாதுகாப்பதற்காக புதுக்குடியிருப்பு பிரதேச செயலத்தில் தற்காலிக இடம்மாற்றம் வழங்கி பாது காத்துவருகின்றார்கள் மேசடிசெய்த நபரை பாதுகாக்கும் திணைக்களமாக அரச திணைக்களங்கள் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது இவரின் மேசடி நடவடிக்கைக்கு எந்த நடவடிக்கையும்எடுக்காமல் கிராமத்தில் பணிசெய்த மோசடிக்காரணை திணைக்களத்திற்குள் உள்வாங்கியமையினால் 25 கடன்கள் அறவிடமுடியா கடனாக மாறியுள்ளது.
அரசாங்கத்தின் பணத்தினை உத்தியோகத்தர் எடுத்தார அல்லது சமூர்த்தி பயனாளி எடுத்தார என்பது கூட தெரியாத நிலைக்கு அறவிடமுடியாக்காடான இவரின் நிதி மோசடிகள் மாற்றப்பட்டுள்ளன.
புதுக்குடியிருப்பு சமூர்த்தி வங்கியில் மட்டும் 60 இலட்சத்திற்கும் அதிகமான கடன்கள் அறவிடமுடியாக்கடனாக மாற்றப்பட்டுள்ளது இது மக்கள் எடுத்தகடான அல்லது உத்தியோகத்தர்கள் எடுத்தகடான என்று கூட கண்டறியமுடியாத திணைக்களமாக சமூர்த்திணைக்களம் காணப்படுகின்றமை கவலையளிக்கின்றது.
இவ்வாறு சமூர்த்தி திணைக்களத்தின் கீழ் நடைபெறும் நிதிமோசடிகளை கண்டுகொள்ளாமல் இருப்பது இதற்கு பின்னால் அரசியல்வாதிகளின் செல்வாக்க காணப்படுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சமூர்த்தி என்பது ஒரு அசரியல்.... அன்றைய ஆட்சியாளர்களால் கொண்டுவரப்பட்டது அன்று ஆட்சியில் இருந்த அதிகாரிகளால் கொண்டுவரப்பட்ட சமூர்த்தி திட்டம்தில் கூட அந்த அதிகாரியான பசில்றாஜபக்க செய்த மோசடி உங்களுக்கு தெரியுமா சுனாமி அனர்த்ததின் போது சேகரிக்கப்பட் 83 மில்லியன் ரூபா பணத்தினை அவரது செந்த கணக்கிற்கு மாற்றிய குற்றச்சாட்டு ,திவிநெகும அபிவிருத்தி திணை;ககளத்திற்கு சொந்தமான 2991 மில்லியன் ரூபா பணத்தினை துஸ்பிரயோகம் செய்தகுற்றச்சாட்டு ஓய்வு பெற்ற 1067 சமூர்த்தி அதிகாரிகளுக்கு வழங்கப்படவிருந்த 1700 மில்லியன் ரூபாநிதிக்கொடுப்பனவில் நடந்த மோசடி குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு கிராமங்களில் ஆயிரக்கணக்கில் மோசடி செய்த உத்தியேகதத்தர்கள் மீதும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன சரியான அரச அதிகாரிகளே இவ்வாறன குற்றச்சாட்டுக்களை விசாரித்து நிதி குற்றம்புரிந்தவர்களுக்கு சரியான தண்டனையினை கொடுங்கள் இல்லையேல் உங்கள் படங்களும் செய்திகளில் வரலாம்...
0 கருத்துகள்