அதிமுக ஆட்சிக்கு வந்த 3 மாதத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். - சிவகாசியில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு. விருதுநகர் மாவட்டத்தில் ஈபிஎஸ் பரப்புரை விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கட்சி சார்பில் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி தொகுதி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், உலக புகழ் பெற்ற பகுதி சிவகாசி என்றும் இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் இந்தியா மட்டுமல்ல உலகளவில் விற்பனை செய்யப்படுகிறது. பட்டாசு தொழிலுக்கு நெருக்கடி வந்தபோது அப்போது அமைச்சராக இருந்த கே.டி ராஜேந்திர பாலாஜியின் மூலம் 20 எம்.பிக்களின் உதவியோடு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து தொழிலை பாதுகாக்க போராடிய இயக்கம் அதிமுக என்றும் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும் என்றார். அதே போல் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை காவேரி குண்டாறு திட்டத்தின் மூலமாக ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கால்வாய் மூலம் வெளியேற்றப்பட்டு விவசாய மற்றும் நிலத்தடி நீர் ஆதாரத்தை மேம்படுத்த முன் வந்தது ஆனால் இந்த திட்டத்தை திமுக அரசு வேண்டுமென்றே முடக்கியது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் காவேரி குண்டாறு திட்டம் நிறைவேற்றப்படும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது காவிரி குண்டாறு திட்டத்தை முடக்கி விவசாயிகளின் விரோதியாக திமுக அரசு இருக்கிறது. தமிழகத்தின் ஏழை மக்களுக்காக ஒரு திட்டத்தைக் கூட திமுக அரசு கொண்டுவரவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. குழந்தைகள் பெண்கள் பாட்டிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை என்றும் நிரந்தர சட்டம் ஒழுங்கு டிஜிபியை நியமிக்க முடியாத கையாளாகாத பொம்மை முதல்வராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார். நீதிமன்ற உத்தரவிட்டும் இதுவரை நிரந்தர டிஜிபி நியமிக்கவில்லை. தமிழகத்தில் கஞ்சா பல வடிவத்தில் வந்துவிட்டது. கஞ்சா புழகத்தால் பள்ளி கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி அவர்களது வாழ்க்கை சீரழிந்து வருகிறது இப்படிப்பட்ட மோசமான ஆட்சி தமிழகத்தில் தொடர வேண்டுமா?என கேள்வி எழுப்பினார். 1000 கோடி ஊழல் நடந்துள்ளது திமுக 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் தெரிவித்த 525 தேர்தல் வாக்குறுதியில் 4ல் 1 பங்கை கூட நிறைவேற்றவில்லை. ஏற்கனவே 2021 இல் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றாமல் தற்போது மீண்டும் பொய்யான தேர்தல் அறிக்கையை முதல்வர் அறிவித்துள்ளார். குப்பைக்கு வரி போட்ட திமுக அரசாங்கம் மக்களுக்கு மிகப்பெரிய வரி சுமையை கொடுத்துள்ளது. நகர்புற வளர்ச்சி குடிநீர் வளங்கள் உள்ளிட்ட துறைகளில் 1000 கோடி ஊழல் நடந்துள்ளது குறித்து அமலாக்கத்துறை உதரவிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் உரிய ஆதாரத்துடன் 1000 கோடி ஊழல் நடந்துள்ளது. குறித்து சம்பந்தப்பட்ட துறையில் உள்ள அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவிற்கே திமுக முதன்மையான ஆட்சி என முதல்வர் சொல்லி வருகிறார். ஊழல் செய்வதில் இந்திய அளவில் நம்பர் ஒன் ஆட்சி திமுக ஆட்சி. ஊழலுக்காகவே கலைக்கப்பட்ட அரசாங்கம் திமுக அரசாங்கம். இதுவரை எந்த அரசாங்கமும் ஊழலுக்காக கலைக்கப்படவில்லை ஊழலையும் திமுகவையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. புதிய திட்டத்தை எதுவும் கொண்டு வராமல் கடனை வாங்கிய ஆட்சி தேவையா? அந்த பணம் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்கிறது. மக்களின் பணத்தை அபகரிக்கும் ஆட்சி தேவையா? இதற்கெல்லாம் முடிவு கட்டும் தேர்தல் வரும் சட்டமன்ற தேர்தல் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். திமுக 28 மாதங்கள் கழித்து தான் உரிமைத்தொகை வழங்கியது. அதுவும் அதிமுக தான் வாங்கி வாதாடி போராடி கொடுத்தது. ஒவ்வொரு பொங்கலுக்கும் அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்றார்.
இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
