நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >💼 வணிகம்
  3. >டிரம்ப் போர் நிறுத்த அறிவிப்பு: மீண்டும் எகிறிய தங்கம் விலை- இன்று சவரனுக்கு ரூ.2,720 உயர்வு
💼 வணிகம்

டிரம்ப் போர் நிறுத்த அறிவிப்பு: மீண்டும் எகிறிய தங்கம் விலை- இன்று சவரனுக்கு ரூ.2,720 உயர்வு

புதன், ஏப்ரல் ௮, ௨௦௨௬|18 மணி நேரம் முன்|abi sudha m|The Indian Express
டிரம்ப் போர் நிறுத்த அறிவிப்பு: மீண்டும் எகிறிய தங்கம் விலை- இன்று சவரனுக்கு ரூ.2,720 உயர்வு

சேமிப்பின் முக்கிய அடையாளமாகத் திகழும் தங்கம் விலை, கடந்த சில நாட்களாக பெரும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. சமீபத்தில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1 லட்சத்தைத் தாண்டிய நிலையில், இன்று மீண்டும் விலை அதிரடியாக உயர்ந்து சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் தங்கம் விலையில் இருமுறை மாற்றங்கள் செய்யப்பட்டன. காலையில் குறைந்த விலை மாலையில் மீண்டும் உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து, நேற்றைய நிலவரப்படி (ஏப்ரல் 7), 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.130 குறைந்து ஒரு கிராம் ரூ.13,860-க்கும், சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ஒரு சவரன் ரூ.1,10,880-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்றைய அதிரடி உயர்வு (ஏப்ரல் 8): ஆனால், இன்று காலை நிலவரப்படி தங்கம் விலை மீண்டும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள போர்நிறுத்தம் குறித்த அறிவிப்புகளுக்கு இடையே இந்த விலையேற்றம் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) விலை கிராமுக்கு ரூ.340 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,200-க்கும், சவரனுக்கு ரூ.2,720 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் தங்கம் மற்றும் வெள்ளி விலை: ஆபரணத் தங்கம் மட்டுமல்லாது, 18 காரட் தங்கம் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,860-க்கும், சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.94,880-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையைப் பொறுத்தவரை, கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கும் தங்கம் மற்றும் வெள்ளி விலை நகை வாங்குவோரை கலக்கமடையச் செய்துள்ளது.

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

The Indian Express இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

எகிறிய HDFC வங்கியின் பங்குகள்.. ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறியது என்ன?
வணிகம்

எகிறிய HDFC வங்கியின் பங்குகள்.. ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறியது என்ன?

HDFC வங்கி குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் பேசியதைத் தொடர்ந்து அதன் பங்குகள் கணிசமாக உயர்ந்துள்ளன. இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
“சிட்டிக்கும் சரி.. மலைப்பாதைக்கும் கில்லி” - ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 'ரைடு ரிவியூ'
வணிகம்

“சிட்டிக்கும் சரி.. மலைப்பாதைக்கும் கில்லி” - ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 'ரைடு ரிவியூ'

மோட்டார் சைக்கிள் வகைகளிலேயே 'ரோட்ஸ்டர்' என்பது மிகவும் நடைமுறைக்கு ஏற்றது. குரூஸர், ஸ்போர்ட் பைக் அல்லது அட்வென்ச்சர் டூரர் போலன்றி, ரோட்ஸ்டர் என்பது புதிய ஓட்டுநர்கள், அலுவலகம் செல்வோர்கள், கல்லூரி மாணவர்கள் என அனைவருக்கும் ஏற்றது. ஆனால், ஒரு ரோட்ஸ்டர் நீண்ட தூரப் பயணங்களுக்கு ஏற்றதல்ல என்று ஒரு கருத்து உண்டு. அது சரியா? குவஹாத்தியிலிருந்து ஷில்லாங் வரை மேம்படுத்தப்பட்ட 2026 ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450-ல் நான் மேற்கொண்ட பயணம் என் எண்ணத்தை மாற்றியது. இது வளைவுகளில் துல்லியமாகத் திரும்புவதிலும், வசதியான நீண்ட தூரப் பயணத்திலும் இன்னும் ஈர்க்கிறது. ரோட்ஸ்டர் என்றால் என்ன? மிகக் குறைவான பாகங்களைக் கொண்ட (Minimalist) வடிவமைப்பு, லேசான எடை, எளிதாகக் கையாளும் வசதி மற்றும் நேரான, வசதியான அமரும் நிலையைத் தரும் பைக்கையே ரோட்ஸ்டர் என்போம். கொரில்லா 450 என்றால் என்ன? இதில் 452-சிசி, லிக்விட்-கூல்டு ஷெர்பா எஞ்சின் (40.02 PS பவர் மற்றும் 40.02 Nm டார்க்) பொருத்தப்பட்டுள்ளது. 2026-ம் ஆண்டிற்காக ராயல் என்ஃபீல்டு 'ஒரே மெஷின், இரண்டு சுவைகள்' என்ற அடிப்படையில் இதை மேம்படுத்தியுள்ளது. நீங்கள் வழக்கமான நேரான அமரும் நிலையையே தொடரலாம் அல்லது புதிய 'அபெக்ஸ்' (Apex) வேரியண்டைத் தேர்ந்தெடுக்கலாம் (இதில் அலுமினிய ஹேண்டில்பார் சற்றுத் தாழ்வாகவும், முன்னோக்கிச் சாய்ந்து ஓட்டும் வகையிலும் இருக்கும்). இது அதன் எளிமையான வடிவமைப்பைத் தக்கவைத்துக் கொண்டாலும், சிவப்பு, கருப்பு மற்றும் பச்சை போன்ற புதிய நிறங்கள் மற்றும் அழகிய ரியர் சீட் கௌல் (rear seat cowl) மூலம் கூடுதல் கவர்ச்சியைச் சேர்த்துள்ளது. ஓட்டுவதற்கு எப்படி இருக்கிறது? கொரில்லா 450-ன் எடை 185 கிலோ. 780 மிமீ என்ற குறைவான சீட் உயரம் இருப்பதால், குட்டையான ஓட்டுநர்கள் கூட எளிதாகக் கால்களைத் தரையில் வைக்க முடியும். இது போக்குவரத்து நெரிசலிலும், மலை வளைவுகளிலும் பைக்கை எளிதாகக் கையாள உதவுகிறது. இதில் மேம்படுத்தப்பட்ட 'ஸ்ட்ரீட்' (Street) மற்றும் 'ஸ்போர்ட்' (Sport) ரைடிங் மோட்கள் உள்ளன. இதில் 'மோட் ரிடென்ஷன்' (Mode Retention) வசதி இருப்பதால், நீங்கள் பைக்கை ஆஃப் செய்துவிட்டு மீண்டும் ஸ்டார்ட் செய்யும் போது, கடைசியாகப் பயன்படுத்திய மோடிலேயே பைக் இருக்கும். ஸ்போர்ட் (Sport): எஞ்சினின் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தும். வேகமான மற்றும் த்ரில்லான பயணத்திற்கு இது சிறந்தது. ஸ்ட்ரீட் (Street): ஆற்றல் சீராக வெளிப்படும். அன்றாட நகரப் பயன்பாட்டிற்கு இது மிகவும் பொருத்தமானது. 2026 மாடலில் முக்கியமான அப்டேட் அதன் டயர்கள். அபெக்ஸ் வேரியண்டில் சிறந்த கிரிப் தரும் வ்ரெடெஸ்டைன் சென்டாரோ எஸ்டி (Vredestein Centauro ST) டயர்கள் உள்ளன. டேஷ் (Dash) மற்றும் பிளாஷ் (Flash) வேரியண்ட்களில் மேம்படுத்தப்பட்ட சியட் கிரிப் எக்ஸ்எல் (Ceat Gripp XL RE) டயர்கள் உள்ளன. 320 மிமீ பிரண்ட் டிஸ்க் மற்றும் 270 மிமீ ரியர் டிஸ்க் பிரேக்குகள், டூயல் சேனல் ஏபிஎஸ் (ABS) வசதியுடன் வலுவான நிறுத்தக் கட்டுப்பாட்டைத் தருகின்றன. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 150 கிமீ. மைலேஜ் லிட்டருக்கு சுமார் 35 கிமீ கிடைக்கிறது. ஹார்லிக்கு இது சிறந்ததா? ட்ரையம்ப் ஸ்பீட் 400 மற்றும் ஹார்லி-டேவிட்சன் X440 ஆகியவை இதற்குப் போட்டியாளர்கள். ஆனால் கொரில்லா 450 அதிக ஆற்றல் வாய்ந்ததாகவும், நிலையானதாகவும் உணரப்படுகிறது. ட்ரையம்ப் தனது ஸ்பீட் 400-ஐ நிறுத்திவிட்டு 350-சிசி எஞ்சினைக் கொண்டுவந்தால், ஹார்லி மட்டுமே இதற்குப் போட்டியாக இருக்கும். ஆனால் கொரில்லா 450 தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்டதாகத் தெரிகிறது. இதன் 4-இன்ச் டிஎஃப்டி (TFT) டிஸ்ப்ளே கூகுள் மேப்ஸ் வசதியைக் கொண்டது. இது ஹார்லியை விடச் சிறந்த கனெக்டிவிட்டி அனுபவத்தைத் தருகிறது. உங்களுக்குத் தேவையான ஒரே பைக் இதுதானா? இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள்: அபெக்ஸ் (ரூ. 2,49,194 முதல் ரூ. 2,56,387), டேஷ் (ரூ. 2,49,194 முதல் ரூ. 2,67,116), மற்றும் பிளாஷ் (ரூ. 2,72,479). கொரில்லா வரிசையில் 7 ஆண்டு நீட்டிக்கப்பட்ட வாரண்டி மற்றும் ரோட்சைடு அசிஸ்டன்ஸ் (Roadside assistance) வழங்கப்படுவது கூடுதல் நிம்மதியைத் தருகிறது. நீங்கள் குறுகிய சந்துகளில் நுழைந்தாலும் சரி அல்லது குவஹாத்தியிலிருந்து ஷில்லாங் வரை சாலைப் பயணம் மேற்கொண்டாலும் சரி, கொரில்லா 450 உங்களுக்குத் தேவையான அனைத்தையும் வழங்குகிறது. இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
தமிழ்நாட்டில் முதல்முறை வாக்காளர்கள் 34% உயர்வு! 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பின்!!
வணிகம்

தமிழ்நாட்டில் முதல்முறை வாக்காளர்கள் 34% உயர்வு! 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பின்!!

கடந்த மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிடும்போது முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 34 சதவிகிதம் உயர்ந்துள்ளதைப் பற்றி... இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்