நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🎬 சினிமா
  3. >அவள் வாய் ஒரு மலர், பற்கள் மல்லிகை மொட்டு; இளையராஜாவுடன் இணைந்த கடைசி பட பாட்டுக்கு வைரமுத்து விளக்கம்
🎬 சினிமா

அவள் வாய் ஒரு மலர், பற்கள் மல்லிகை மொட்டு; இளையராஜாவுடன் இணைந்த கடைசி பட பாட்டுக்கு வைரமுத்து விளக்கம்

திங்கள், ஏப்ரல் ௨௦, ௨௦௨௬|14 மணி நேரம் முன்|d. elayaraja|The Indian Express
அவள் வாய் ஒரு மலர், பற்கள் மல்லிகை மொட்டு; இளையராஜாவுடன் இணைந்த கடைசி பட பாட்டுக்கு வைரமுத்து விளக்கம்

தமிழ் சினிமாவில் குறைந்த படங்களே இணைந்து பணியாற்றி இருந்தாலும், இளையராஜா வைரமுத்து கூட்டணியில் வநத பாடல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று காலம் கடந்து இன்றும் நிலைத்திருக்கிறது. அந்த வகையில் இவர்கள் கூட்டணியில் வெளியான கடைசி படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் குறித்து விளக்கம் அளித்துள்ளார் வைரமுத்து. தமிழ் சினிமாவில் கவிப்பேரரசு என்று போற்றப்படுவர் வைரமுத்து பல இசையமைப்பாளர்களுடன் இணைந்து பல ஹிட் பாடல்கை கொடுத்துள்ள இவர், 1980-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக காளி என்ற படத்தின் மூலம் பாடல் ஆசிரியராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். இந்த படத்திற்கு இளையராஜா தான் இசையமைத்திருந்தார். அதன்பிறகு 1986-ம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் புன்னகை மன்னன் திரைப்படம் தான் இவர்கள் கூட்டணியில் வெளியாக கடைசி படம் என்று சொல்லலாம். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியாக இந்த படத்தில், அனைத்து பாடல்களையுமே வைரமுத்து தான் எழுதியிருந்தார். கமல்ஹாசன், ரேவதி, ரேகா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தில் கமல்ஹாசன் 2 வேடங்களில் நடித்திருந்தார். படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக கமல்ஹாசன் ரேகா இருவரும் படத்தின் ஆரம்பத்தில் தற்கொலை செய்துகொள்ள போகும் முன், என்ன சத்தம் இந்த நேரம் என்ற பாடல் வரும். காதலர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற இந்த பாடல் இன்றைக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலில் வரும் ஒரு குறிப்பிட்ட வரி குறித்து பேசிய வைரமுத்து அதற்கு விளக்கம் அளித்துள்ளார். இந்த பாடலில் உள்ளே, மங்கை அவள் வாய் திறந்தாள் மல்லிகைப்பூ வாசம் என்ற வரிகள் குறித்து கேட்டபோது, அவள் வாய் ஒரு மலர், அவள் பற்கள் மல்லிகை மொட்டுக்கள், அவள் வாய் திறந்தவுடன் மொட்டுக்கள் மலர்ந்துவிடுவதால், மல்லிகைப்பூ வாசம் காதலனுக்கு தெரியும். ஆனால் சராசரி மனிதனுக்கு தெரியாது. காதலன் எப்படி கற்பித்துக்கொள்கிறானே அந்த உலகம் அவனுக்குள் உற்பத்தியாகும் என்று வைரமுத்து கூறியுள்ளார். இந்த பாடல் இன்றைக்கும் ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் ஒரு பாடலாக இருக்கிறது.

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

ரத்னகுமார் பட ரிலீஸை முடிவு செய்த லோகேஷ்! | 29 | Rathna Kumar | Lokesh Kanagaraj
சினிமா

ரத்னகுமார் பட ரிலீஸை முடிவு செய்த லோகேஷ்! | 29 | Rathna Kumar | Lokesh Kanagaraj

Rathnakumar's 29 movie release date announced | ரத்னகுமார் பட ரிலீஸை முடிவு செய்த லோகேஷ்! இந்தச் செய்தி Puthiyathalaimurai ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்
ஜெயித்துவிடலாம் என எதிர்கட்சிகள் பகல் கனவு காண்கின்றன: ஆலந்துார் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் சரவணன்
சினிமா

ஜெயித்துவிடலாம் என எதிர்கட்சிகள் பகல் கனவு காண்கின்றன: ஆலந்துார் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் சரவணன்

ஆலந்துார்:ஜெயித்து விடலாம் என, எதிர்கட்சியினர் பகல் கனவு காண்கின்றனர். ஆனால், கள நிலரவம் வேறு மாதிரி உள்ளது, இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்
தரமான சாலையால் தடுக்கப்பட்ட விபத்துகள்; காங்., வேட்பாளர் ஹசன் மவுலானா பிரசாரம்
சினிமா

தரமான சாலையால் தடுக்கப்பட்ட விபத்துகள்; காங்., வேட்பாளர் ஹசன் மவுலானா பிரசாரம்

சென்னை:தொகுதியில் அனைத்து தெருக்களிலும், தரமான சாலைகளை அமைத்ததால் விபத்துகள் தடுக்கப்பட்டுள்ளன, என, இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்