தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட்டில் கொடி கட்டி பறந்து வரும் இவர், நேற்று வியாழக்கிழமை தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி வாக்கு செலுத்து வந்தார். அதன்பிறகு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்நிலையில், நடிகை திரிஷா வாக்கு செலுத்த வந்த போது அணிந்திருந்த உடை தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நடிகை திரிஷா அணிந்திருந்த உடை "யாம் இந்தியா" என்ற இந்தியன் க்ளோதிங் பிராண்டின் ஷார்ட் குர்தா செட் ஆகும். இந்த பிராண்டின் ஸ்டைலைப் பொறுத்தவரை கலர்ஃபுல் டிசைன், பூக்கள் பிரிண்ட், லைட் வெயிட் பேப்ரிக், தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற கம்ஃபர்டபிள் அவுட்ஃபிட்டாக இருக்கிறது. குறிப்பாக வெளுத்து வாங்கும் இந்த வெயிலுக்கு ஏற்ற வகையில் அந்த உடை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பலரது கவனத்தையும் ஈர்க்கும் வகையிலும் அமைந்துள்ளது. இந்நிலையில், நடிகை திரிஷா அணிந்திருந்த அந்த உடையின் விலை குறித்த பேச்சும் எழுந்துள்ளது. அதனை பகிர்ந்துள்ள இணையவாசிகள் குர்தா செட்டின் விலை சுமார் 14 ஆயிரம் ரூபாய் என்று கூறுகிறார்கள். 'பிராண்டு என்றாலே விலை அதிகம்தான், கம்ஃபர்ட்டுக்காக வாங்குறது தவறில்லை' என்றும் சிலர் கூறியிருக்கிறார்கள். அதேநேரத்தில், இன்னும் சிலர், இந்த மாதிரியான டிசைன் உடையை ரூ. 300, 400-க்கே வாங்கலாம் என்றும் கூறுகிறார்கள். இப்படியாக நடிகை திரிஷா அணிந்திருந்த உடை பற்றிய பேச்சுக்கள் இணையத்தை கலக்கி வருகிறது. அத்துடன், நடிகை திரிஷா வாக்கு அளித்த பிறகு எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



