கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் தேரோட்டம் தொடர்பாக...
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் தேரோட்டம் தொடர்பாக...
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

நடிகர் தனுஷின் பட்டாஸ் படத்தில் நாயகியாக நடித்த மெஹ்ரின் பிர்சாதாவுக்குத் திருமணம் நடைபெற்றது. இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
சூர்யாவின் கருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்... | Actor Suriya's Karuppu Audio Launch இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

தமிழ் சினிமாவில் நடிப்பு, நடனம், பாடல்கள் என அனைத்திரும் தனது தனித்திறமையை நிரூபித்து சூப்பர் ஸ்டார் நடிகராக திகழ்ந்தவர் பழம்பெரும் நடிகர் பி.யு.சின்னப்பா, புகழின் உச்சியில் இருந்தபோது கோடீஸ்வரராக வாழ்ந்தும், அவரது மனைவி வறுமையில் வாடி இறந்த துயரச் சம்பவம் குறித்த தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. 1916-ல் திருச்சி மாவட்டம் உத்தமபாளையத்தில் பிறந்த பி.யு.சின்னப்பா, தனது 5-வது வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பாடும் திறமையாலும், உணர்ச்சிபூர்வமான நடிப்பாலும் வெகு விரைவில் பிரபலமானார். 1930 மற்றும் 40-களில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்த இவர், தமிழ் சினிமாவில் முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடித்த முதல் நடிகர் என்ற பெருமையை பெற்றவர். 1936-ல் "சந்திரகாந்தா" திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்த அவர், 1940-ல் வெளியான "உத்தமபுத்திரன்" திரைப்படத்தின் மூலம் இரட்டை வேடத்தில் நடித்து, தமிழ் சினிமா வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதினார். ஆர்யமாலா, கண்ணகி, மங்கம்மா சபதம், மனோன்மணி போன்ற வெற்றிப் படங்களில் நடித்த சின்னப்பாவின் பாடல்கள் இன்றும் ரசிக்கப்படுகின்றன. திரையுலகில் கொடிகட்டிப் பறந்த சின்னப்பா, புகழுடன் சேர்ந்து பெருமளவில் செல்வத்தையும் குவித்தார். புதுக்கோட்டையில் மட்டும் 46 வீடுகளை வாங்கியிருந்ததால், அப்போதைய புதுக்கோட்டை மன்னர், அவர் இனி வீடு வாங்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். அந்த அளவிற்கு பெரிய செல்வந்தாராக இருந்த பி.யு.சின்னப்பா, 1951-ல் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்த நிலையில், தனது 35-வது வயதிலேயே மரணமடைந்தார். அளவுக்கு அதிகமான குடி மற்றும் புகைப்பழக்கமே அவரது திடீர் மரணத்திற்குக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. ஆச்சரியமளிக்கும் விதமாக, இவ்வளவு பெரிய நடிகர் இறந்த பின், அவரது மனைவி சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு புறம்போக்கு நிலத்தில் 10 அடிக்கு 10 அடி குடிசையில் வறுமையில் வாழ்ந்து வந்திருக்கிறார். இந்த தகவல் எம்.ஜி.ஆருக்குத் தெரியவர, அவர் அந்த நிலத்தை அந்தப் பெண் பெயருக்கு மாற்ற முயன்றிருக்கிறார். ஆனால் அதற்குள்ளாகவே சின்னப்பாவின் மனைவி மரணமடைந்தார். தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த ஒருவரின் குடும்பம் சந்தித்த இத்தகைய துயரம், திரையுலகில் யாரும் எதிர்பாராத ஒரு சோக நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. பழம்பெரும் நடிகர்களில் முதல் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்த்தை பெற்ற தியாகராஜபாகவதர் கூட தனது கடைசி காலத்தில் வறுமையில் அவதிப்பட்டு உயிரிழந்தார். அதேபோல் பி.யு.சின்னப்பா புதுக்கோட்டையில் 46 வீடுகளுக்கு சொந்தக்காரராக இருந்தாலும், அவரது மரணத்திற்கு பிறகு அவரது குடும்பமே வறுமையில் வாடியது அதிர்ச்சியின் உச்சக்கட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.