தமிழக அரசியலில் 'விஜய்' அதிரடி: 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி - தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ல் முதன்முறையாகக் களம் காணும் தமிழக வெற்றிக் கழகம் (TVK), மாநிலத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என அறிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்வில், கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். வேட்பாளர்களை "மக்களுக்கான காப்பாளர்கள்" என அவர் பெருமிதத்துடன் அறிமுகம் செய்து வைத்தார். இரட்டைத் தொகுதியில் களம் காணும் 'தளபதி' விஜய்கட்சியின் தலைவர் விஜய், வட தமிழகம் மற்றும் மத்திய தமிழகத்தை ஒருங்கிணைக்கும் வகையில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளார் இரண்டு தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டி பெரம்பூர் (சென்னை) திருச்சி கிழக்கு சாதாரணக் குடும்பப் பின்னணியைக் கொண்டவர்களுக்குப் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட விஜய், முக்கிய நிர்வாகிகளுக்கும் புதுமுகங்களுக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கியுள்ளார். முக்கிய வேட்பாளர்கள் நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியல்ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களை எதிர்த்துப் போட்டியிட தவெக வலுவான வேட்பாளர்களைக் களம் இறக்கியுள்ளது. கொளத்தூர்: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து வி.எஸ். பாபு போட்டியிடுகிறார். எடப்பாடி: எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ்-ஐ எதிர்த்து எம். அருண்குமார் களம் காண்கிறார். தியாகராய நகர் (T.Nagar): கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் போட்டியிடுகிறார். வில்லிவாக்கம்: ஆதவ் ஆர்ஜுனா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கோபிசெட்டிபாளையம்: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெக சார்பில் போட்டியிடுகிறார். ஆயிரம் விளக்கு: ஜே.சி.டி பிரபாகர் களம் காண்கிறார். போட்டியிடும் தொகுதிகள்- வேட்பாளர் பெயர்கள்: பெரம்பூர்:விஜய் திருச்சி கிழக்கு: விஜய் கோபி செட்டி பாளையம்: செங்கோட்டையன், வில்லிவாக்கம்:ஆதவ் ஆர்ஜுனா தி.நகர்: புஸ்சி ஆனந்த் திருச்செங்கோடு: அருண்ராஜ் ஆயிரம் விளக்கு: ஜேசிடி பிரபாகர் கொளத்தூர்: விஎஸ் பாபு லால்குடி: கு.பகிருஷ்ணன் பூந்தமல்லி (தனி) : ஆர்.பிரகாசம் திருப்பூர் வடக்கு: சத்யபாமா மதுரவாயல்: ரேவந்த் சரண் அம்பத்தூர்: பாலமுருகன் மாதவரம்: எம்.எல்.விஜய் பிரபு வால்பாறை: ஸ்ரீதரன் மயிலாப்பூர்: வெங்கட்ராமன், செய்யூர் (தனி): மோகன் ராஜா சேப்பாக்கம்: செல்வம் மதுராந்தகம் (தனி): எழில் கேத்ரின் ஓமலூர்: அதியமான் காங்கேயம்: மணி கோவை வடக்கு: வி சம்பத்குமார் கோவை தெற்கு: வி செந்தில்குமார் பர்கூர்; முரளிதரன் விருதாச்சலம்: எஸ்.விஜய் பண்ருட்டி: என்.மணிகண்டன் கடலூர்: வி ராஜ்குமார் குறிஞ்சிப்பாடி: ராஜ்குமார் புவனகிரி: மகாலிங்கம் முதுகுளத்தூர்: மலர்விழி சிதம்பரம்: என்.பாரி காட்டு மன்னார் கோவில் (தனி) : என் சீனிவாசன் பூம்பூகார்: ஜெ.விஜயாலயன் நாகை: என்.சுகுமார் வேதாரண்யம்: கிங்ஸ்லி ஜெரல்டு மன்னார்குடி: யுவிம் ராஜராஜன் திருவாரூர்: வி.வீரமணி போடி: பிரகாஷ் கம்பம்: ஜெகன்நாத் மிஸ்ரா ராஜபாளையம்: ஜெகதீஸ்வரி கும்பகோணம்; ஆர். வினோத் சிவகாசி: கீர்த்தனா சாத்தூர்: அஜித் ஸ்ரீவல்லிப்புத்தூர்: கார்த்திக் திருவையாறு: மணிகண்டன் விருதுநகர்: செல்வம் தஞ்சை: விஜய் சரவணன் ஒரத்த நாடு: கே அரவிந்த் காரைக்குடி: பிரபு பட்டுக்கோட்டை : மதன் பேராவூரணி: டி சந்திர காண்டீபன் விளாத்திகுளம்: காசிராம் தூத்துக்குடி: ஸ்ரீநாத் ஸ்ரீவைகுண்டம்: சரவணன் ஒட்டப்பிடாரம்: மதன்ராஜா விராலிமலை: முருகேசன் அறந்தாங்கி: முகம்மது பர்வேஷ் திருப்பத்தூர் - ஸ்ரீனிவாச சேதுபதி சிவகங்கை - குழந்தை ராணி நாச்சியார் கரூர்: மதியழகன் மானாமதுரை (தனி): டி இளங்கோவன் மேலூர்: ஏ மதுரை வீரன் மதுரை கிழக்கு: கார்த்திகேயன் சோழவந்தான் (தனி): எம். வி கருப்பையா மதுரை வடக்கு: ஏ கல்லாணை ஓமலூர்: அதியமான் மேட்டூர்: கே. செல்வம் எடப்பாடி: எம்.அருண்குமார் தாராபுரம் - தனி: கவுரி சித்ரா காங்கேயம்: டி மணி வேப்பனஹல்லி: சம்பங்கி ஓசூர்: எம்.அம்ரீஷ் பென்னகாரம்: ஜி கதெந்திரன் தர்மபுரி: சிவன் அரூர் (தனி) : கே ராக்கேஷ் செங்கம்: கே. பாரதிதாசன் விக்கிரவாண்டி: விஜய் வடிவேல் திருக்கோவிலூர்: பரணி பாலாஜி உளூந்தூர் பேட்டை: சுதாகர் ரிஷிவந்தியம்: அசோகுமார் சங்கராபுரம்: ஜெகதீஷன் கள்ளக்குறிச்சி (தனி) : அருள் விக்னேஷ் தமிழக அரசியலில் 'மாற்றத்திற்கான சக்தியாக' உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், தனது முதல் தேர்தலிலேயே 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. "மக்களுக்கான ஆட்சி மாற்றம்" எனும் முழக்கத்துடன் களம் காணும் விஜய்யின் இந்த வியூகம், தேர்தல் களத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மே மாதம் தெரியவரும்.
இந்தச் செய்தி Ipd Tamil - Latest Tamil News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


