Mumbai Dhobi Ghat: வெறும் துணி துவைக்கும் காட்சியில்லை! - வாழ்வியலை எடுத்துக்காட்டும் புகைப்படங்கள்!
இந்தச் செய்தி Vikatan ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

Mumbai Dhobi Ghat: வெறும் துணி துவைக்கும் காட்சியில்லை! - வாழ்வியலை எடுத்துக்காட்டும் புகைப்படங்கள்!
இந்தச் செய்தி Vikatan ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

ஜாய் கிரிசில்டாவுக்கு பிறந்த குழந்தைக்கு அப்பா மாதம்பட்டி ரங்கராஜ் தான் என்று டி.என்.ஏ சோதனையில் நிரூபணம் ஆகியுள்ள நிலையில், இதை பற்றி கிரிசில்டா வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதே சமயம், அவர்கள் குழந்தையின் புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல நடிகரும், சமையல் கலைஞருமான, மாதம்பட்டி ரங்கராஜ் கடந்த ஆண்டு தன்னிடம் காஸ்டியூம் டிசைனராக வேலை செய்த ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்துகொண்டதாக புகைப்படங்கள் வெளியானது. தொடர்ந்து ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாகவும், தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாகவும், கூறிய கிரிசில்டா, இது குறித்து காவல்நிலையம், மகளிர் ஆணையம் என பல இடங்களில் புகார் கூறியிருந்தார். நீதிமன்றத்திலும் வழங்கு தொடர்ந்திருந்த நிலையில், கர்ப்பமாக இருந்த அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து இவர், ரங்கராஜ் மீது தொடர்ந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற நிலையில், சுமுகமான தீர்வை எட்ட, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் அவர்களை நீதிமன்றம் முன்னதாக ஒரு சமரச அதிகாரியாக நியமித்திருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது, ஜாய் கிரிஸில்டா தரப்பு வழக்கறிஞர், தனது குழந்தையின் உயிரியல் தந்தை (Biological Father) ரங்கராஜ் தான் என்பதை நிரூபிக்க டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று வாதிட்டார். இதற்கு ரங்கராஜ் தரப்பு வழக்கறிஞர், தனது கட்சிக்காரர் அத்தகையப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில், இரு தரப்பினரும் டிஎன்ஏ பரிசோதனை கோரி மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மாதம்பட்டி ரங்கராஜுக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்த அனுமதி அளித்தார். மேலும், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள தடய அறிவியல் துறை மற்றும் ஆய்வகத்துடன் ஒருங்கிணைந்து, டிஎன்ஏ பரிசோதனைக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஒரு வக்கீல் கமிஷனரை (Advocate Commissioner) நீதிமன்றம் நியமித்து, பரிசோதனை முடிந்ததும் அதன் அறிக்கையைப் பெற்று சமரச அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று வக்கீல் கமிஷனருக்கு உத்தரவிட்டது. அதன்படி கிரிசில்டாவின் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை என்று, மரபணு சோதனையில் உறுதியாகி உள்ளதாக நீதிபதி செந்தில்குமார், தெரிவித்திருந்தார். View this post on Instagram A post shared by J Joy (@joycrizildaa) இது குறித்து பதிவிட்டிருந்த ஜாய் கிரிசில்டா கோவிலில் சாமி கும்பிடுவது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு இது ஒரு தாயின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவு வைரலாகி வரும் நிலையில், கடந்த மார்ச் 12-ந் தேதி கிரிசில்டா வெளியிட்ட குழந்தையின் புகைப்படம் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது. குழந்தைக்கு மாதம்பட்டி ராஹா ரங்கராஜ் என்று பெயரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
ஈரோட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் | In Erode Tamil Nadu Chief Minister Stalin campaigned for DMK alliance candidate இந்தச் செய்தி Vikatan ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

கோவையில் பிளாஸ்டிக் கழிவுகளில் பறவை இரை தேடும் நிலைமை வந்துவிட்டதாக கூறி சுற்றுச்சூழலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் பதிவிட்ட வீடியோ வைரலா போயிட்டு இருக்கு. கோவை மாவட்டம், உக்கடம் பகுதியில் பதிவான அந்த ஒரு நிமிட வீடியோ, ஒட்டுமொத்த கோவைவாசிகளின் மனசாட்சியையும் உலுக்கி எடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. இரை தேடி வந்த பறவைகள், பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாட்டில்களுக்கு இடையே உணவு கிடைக்காமல் தவிப்பதும், பிளாஸ்டிக் கழிவுகளையே கொத்திப் பார்ப்பதுமான அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிளாஸ்டிக் குப்பையில் உணவு தேடும் பறவைகள் "நாம் வீசும் ஒரு பை, ஒரு ஜீவனின் உயிரைப் பறிக்கிறது" என சமூக ஆர்வலரின் எடுத்த அந்த வீடியோ பதிவு திடக்கழிவுகளால் சுற்று சூழலியல் முற்றிலும் சீர்குலைந்துள்ளதை எடுத்து காட்டுவதாக உள்ளதாக அமைந்துள்ளது. இது வெறும் வீடியோ பதிவு மட்டுமல்ல ஒட்டு மொத்த மனிதசமூகத்திற்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி என சமூக அர்வலர் தெரிவித்துள்ளார். மாநகராட்சி நிர்வாகம் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாத வரை இந்த மக்களின் மரண ஓலங்களை தடுக்க முடியாது என்பதே கசப்பான உண்மை எனவும் வீடியோ சமூக ஆர்வலர் வேதனை தெரிவித்தார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, உக்கடம் பகுதியைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்து உள்ளது. இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.