நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🎬 சினிமா
  3. >OTT: சீனுக்கு சீன் ட்விஸ்ட்... குழம்ப வைக்கும் கிளைமாக்ஸ்; வாழ்க்கையில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய திரில்லர் படங்கள்!
🎬 சினிமா

OTT: சீனுக்கு சீன் ட்விஸ்ட்... குழம்ப வைக்கும் கிளைமாக்ஸ்; வாழ்க்கையில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய திரில்லர் படங்கள்!

ஞாயிறு, ஏப்ரல் ௧௯, ௨௦௨௬|14 மணி நேரம் முன்|d. elayaraja|The Indian Express
OTT: சீனுக்கு சீன் ட்விஸ்ட்... குழம்ப வைக்கும் கிளைமாக்ஸ்; வாழ்க்கையில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய திரில்லர் படங்கள்!

ஒடிடி தளங்களில் பயன்பாடு அதிகரிப்பின் காரணமாக பல மொழிகளில் வெளியாகும் படங்களுக்கும் இந்தியாவில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக பரபரபான ஆக்ஷன் த்ரில்லர், ட்விஸ்ட், அட்வஞ்சர் என எதிர்பார்ப்பை எகிற வைக்கும் படங்கள், கடைசியில் என்ன நடக்குமோ என்று சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்கும் வகையில், உலக நாடுகளில் வெளியான படங்கள் இந்தியாவிலும் ஒடிடி தளங்களில் பார்க்க கிடைக்கிறது. அந்த வரிசையில் உங்களை கடுமையாக யோசிக்க வைக்கும் படங்களை கொடுத்துள்ள பிரபல ஸ்பானிஷ் இயக்குனர் ஓரியோல் பாலோ இயக்கிய 4 முக்கிய படங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். தி பாடி (The Body) ஒரு பிணவறையில் (Mortuary) இருந்து ஒரு பெண்ணின் உடல் மர்மமான முறையில் காணாமல் போகிறது. கதவு உடைக்கப்படவில்லை, யாராவது உள்ளே வந்ததற்கான அடையாளமும் இல்லை. அப்படியென்றால் அந்த உடல் எப்படி காணாமல் போனது? இதை கண்டுபிடிப்பது தான் இந்த படத்தின் கதை. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை, இதை யார் செய்திருப்பார்கள் என்று நம்மை மாற்றி மாற்றி யோசிக்க வைக்கும். எது உண்மை, எது பொய் என்று ஒன்றுமே புரியாது. கிளைமாக்ஸில் நீங்கள் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்டுடன் படத்தை முடித்திருப்பார்கள். அமேசான் ப்ரைமில் இந்த படத்தை பார்க்கலாம். தி இன்விசிபிள் கெஸ்ட் (The Invisible Guest) ஒரு வெற்றிகரமான தொழிலதிபர், ஒரு மூடிய அறைக்குள் தனது காதலியின் பிணத்துடன் சிக்கிக்கொள்கிறார். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருக்கிறது, அவரைத் தவிர வேறு யாரும் வெளியே செல்லவும் முடியாது. அவரும் தான் கொலை செய்யவில்லை என்று கூறுகிறார். அப்படியென்றால் கொலை செய்தது யார்? எப்படி செய்தார்கள்? இந்த வழக்கிலிருந்து தப்பிக்க அவர் ஒரு வழக்கறிஞரை (Lawyer) நாடுகிறார். அந்த வழக்கறிஞர் கேட்கும் கேள்விகளுக்கு அவர் சொல்லும் பதில்கள் மாறிக்கொண்டே இருக்கிறது. படம் முழுவதும் திருப்பங்கள் நிறைந்திருக்கும், கிளைமாக்ஸ் உங்களை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு செல்லும். இந்த படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் கிடைக்கும். மிராஜ் (Mirage) ஒரு பெண் ஒரு நாள் இரவு தனது வீட்டில் உள்ள பழைய வீடியோ ரெக்கார்டர் மற்றும் டிவி மூலம், 25 ஆண்டுகளுக்கு முன்னால் அதே வீட்டில் வாழ்ந்த ஒரு சிறுவனிடம் பேசுகிறாள். அந்தச் சிறுவனுக்கு நடக்கப்போகும் ஆபத்தை முன்கூட்டியே அறிந்து, அவனை அவள் காப்பாற்றுகிறாள். ஆனால், அந்த ஒரு செயலால் அடுத்த நாள் அவளுடைய வாழ்க்கை முற்றிலுமாக மாறுகிறது. அவளுடைய மகளைக் காணவில்லை, கணவனுக்கு இவளைத் தெரியவில்லை, யாருக்குமே இவளுடைய பழைய வாழ்க்கையைப் பற்றி நினைவில்லை. ஒரு சின்ன முடிவு எப்படி வாழ்க்கையை மாற்றுகிறது என்பதும், இழந்த வாழ்க்கையை அவள் மீட்டெடுத்தாளா என்பதும் தான் கதை. இந்த படம் நெட்ஃபிளிக்ஸில் கிடைக்கும். காட்ஸ் க்ரூக்கட் லைன்ஸ் (God's Crooked Lines) ஒரு பெண் ஒரு மனநல மருத்துவமனையில் நடந்த கொலையைப் பற்றி விசாரிக்க வந்ததாகக் கூறுகிறாள். அங்கு இருப்பவர்கள் யாரும் முதலில் அவளை நம்பவில்லை. ஆனால் அவள் சொல்லும் ஆதாரங்களைக் கேட்டு சில மருத்துவர்கள் அவளை நம்பத் தொடங்குகிறார்கள். அங்கிருக்கும் மூத்த மருத்துவரைத் தவிர மற்ற அனைவரும் குழப்பத்தில் இருக்கிறார்கள். அவளுக்கு உண்மையில் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதை கிளைமாக்ஸ் வரை நம்மைச் சுத்தலில் விடுவார்கள். இந்த படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் கிடைக்கும்.

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

கச்சா எண்ணெய் விலையேற்றம்.. ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கான தடையை தளர்த்திய அமெரிக்கா!
சினிமா

கச்சா எண்ணெய் விலையேற்றம்.. ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கான தடையை தளர்த்திய அமெரிக்கா!

US Renews Sanctions Waiver for Russian Oil / ரஷ்ய எண்ணெய் இறக்குமதி தடை .... தளர்த்திய அமெரிக்கா இந்தச் செய்தி Puthiyathalaimurai ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்
அன்புமணி ஒன்னாம் நம்பர் சோம்பேறி.. புடவை எடுக்க ABC பிளான் போடும் சௌமியா! போட்டு தாக்கிய ஸ்ரீகாந்தி
சினிமா

அன்புமணி ஒன்னாம் நம்பர் சோம்பேறி.. புடவை எடுக்க ABC பிளான் போடும் சௌமியா! போட்டு தாக்கிய ஸ்ரீகாந்தி

Anbumani very Lazy.. Sowmiya Plans Even For a Saree!" Dr Ramadoss Daughter Sreegandhi Explodes. இந்தச் செய்தி One India ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்
‘விசில்’ சின்னத்துக்குப் பதில் ‘நோட்டா’: குழப்பத்துக்கு விடை
சினிமா

‘விசில்’ சின்னத்துக்குப் பதில் ‘நோட்டா’: குழப்பத்துக்கு விடை

சென்னை: பெரம்பூர் தொகுதி வேட்பாளர் பட்டியலில் விஜய்யின் பெயருக்கு எதிரில் நோட்டா (யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை) சின்னம் இடம்பெற்றிருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. இந்தச் செய்தி Tamil Murasu ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்