பொறியியல் படிப்புகளுக்கான மேனேஜ்மெண்ட் சேர்க்கை செயல்முறை பல்வேறு கல்லூரிகளில் தொடங்கியுள்ள நிலையில், எதிர்காலத்தில் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கக் கூடிய டாப் இன்ஜினியரிங் கோர்ஸ்கள் எவை என்பதை இப்போது பார்ப்போம். தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு விரைவில் தொடங்க உள்ளது. இருப்பினும் பல்வேறு தனியார் கல்லூரிகளில் மேனேஜ்மெண்ட் கோட்டாவுக்கான சேர்க்கை தொடங்கியுள்ளது. இதனிடையே புதுப்புது தொழில்நுட்பங்கள், உயர் சம்பள தொகுப்பு, அதிக வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான ஆர்வம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதேநேரம் பொறியியல் படிப்பை பொறுத்தவரை சிறந்த கல்லூரியில் படிப்பது முக்கியம். அதேபோல் சிறந்த கோர்ஸ்களை தேர்வு செய்து படிப்பதும் முக்கியம். இந்தநிலையில், எதிர்காலத்தில் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கக் கூடிய டாப் இன்ஜினியரிங் கோர்ஸ்கள் எவை என்பதை இப்போது பார்ப்போம். இதுதொடர்பாக கல்வி ஆலோசகர் விவேக் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், நல்ல கல்லூரிகளை தேர்வு செய்வது மிக முக்கியம். அதேநேரம் 100க்கும் மேற்பட்ட கோர்ஸ்கள் இருந்தாலும், இந்த ஆண்டில் அதிக டிமாண்ட் உள்ள கோர்ஸ்களாக சில உள்ளன. இந்த கோர்ஸ்கள் அதிக சம்பள தொகுப்புடன் வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருகின்றன. இவை மாணவர்கள் அதிகம் விரும்பிய கோர்ஸ்களாகவும் உள்ளன. 1). கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் 2). ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ் 3). ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் அண்ட் மெசின் லேர்னிங் 4). எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் இன்ஜினியரிங்/ வி.எல்.எஸ்.ஐ 5). இன்பர்மேசன் டெக்னாலஜி 6). கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் பிசினஸ் சிஸ்டம்/ கம்ப்யூட்டர் கம்யூனிகேசன் இன்ஜினியரிங் 7). சைபர் செக்யூரிட்டி 8). எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் 9). மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 10). சிவில் இன்ஜினியரிங்
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
