தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனமான தமிழ்நாடு உப்பு நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.03.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். Deputy Manager (Operation & Maintenance) காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: B.E/ B.TECH (Electrical) படித்திருக்க வேண்டும். மேலும் 6 – 7 வருட பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். வயதுத் தகுதி: 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 50,000 Deputy Manager (Technical) காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: B.E/ B.TECH (Mechanical) படித்திருக்க வேண்டும். மேலும் 6 – 7 வருட பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். வயதுத் தகுதி: 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 50,000 Deputy Manager (Production) காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: B.E/ B.TECH (Chemical Engineering) படித்திருக்க வேண்டும். மேலும் 6 – 7 வருட பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். வயதுத் தகுதி: 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 50,000 Assistant Engineer (Civil) காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: B.E/ B.TECH (Civil) படித்திருக்க வேண்டும். மேலும் 6 – 7 வருட பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். வயதுத் தகுதி: 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 50,000 Supervisors காலியிடங்களின் எண்ணிக்கை: 2 கல்வித் தகுதி: ITI fitter with Any PG/ UG degree படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். வயதுத் தகுதி: 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 35,000 தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://tnsalt.com/uploads/advertisement/5/Recruitment%20notification1.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மின்னஞ்சல் முகவரி: recruitment@tnsalt.com விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.03.2026 இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
