தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழத்தில் உதவி பேராசிரியர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 13.04.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். Assistant Professor காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: B.F.Sc (Bachelor of Fisheries Science) படித்திருக்க வேண்டும். மேலும் தொடர்புடைய துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் நெட் தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 57,700 – 1,82,400 Assistant காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 35,400 – 1,12,400 வயதுத் தகுதி: 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு. தேர்வு செய்யப்படும் முறை: மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://tnjfu.ac.in/careers என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். முகவரி: Registrar, Tamil Nadu Dr. J. Jayalalithaa Fisheries University, Vettar River View Campus, Nagapattinam-611 002 விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.04.2026 இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://tnjfu.ac.in/careers என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



