பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கியில் (Bank of Baroda) துணை மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 104 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 16.04.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். AVP II - Group Head காலியிடங்களின் எண்ணிக்கை: 4 கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் 10 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். வயதுத் தகுதி: 31 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப வழங்கப்படும். AVP II - Territory Head காலியிடங்களின் எண்ணிக்கை: 17 கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் 6 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். வயதுத் தகுதி: 27 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப வழங்கப்படும். Deputy Manager - Senior Relationship Manager காலியிடங்களின் எண்ணிக்கை: 70 கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். வயதுத் தகுதி: 24 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப வழங்கப்படும். Deputy Manager - Wealth Strategist (Investment & Insurance) காலியிடங்களின் எண்ணிக்கை: 13 கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். வயதுத் தகுதி: 24 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப வழங்கப்படும். வயது வரம்பு தளர்வு: மத்திய அரசு விதிகளின்படி ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.bankofbaroda.bank.in என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.04.2026 விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.850. எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.175 இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
