தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி எனப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 16 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 02.04.2026 கடைசி தேதியாகும். Health Inspector காலியிடங்களின் எண்ணிக்கை: 16 கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் Diploma in Sanitary Inspector / Diploma in Health Inspector படித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். சம்பளம்: ரூ. 38,000 வயது தகுதி: 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் மத்திய அரசு விதிகளின்படி ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் பொது அறிவு, கணிதம் மற்றும் திறனறி பகுதிகளில் இருந்து 20 கேள்விகளும், சுகாதார ஆய்வாளர் பாடம் சம்பந்தப்பட்ட பகுதியில் இருந்து 80 கேள்விகளும் என 100 கேள்விகள் 100 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.nlcindia.in/website/en/careers/jobs/currentopenings.html என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பித்து கொள்ள வேண்டும். விண்ணப்பக்க கட்டணம்: ரூ. 486, எஸ்.சி/ எஸ்.டி/ மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ. 236 விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.04.2026 இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டு அறிவிப்பினை பார்வையிடவும்.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
