Mar 29 - Apr 4 This Week's Release | லீடர், காளிதாஸ் 2, கார்மேனி செல்வம்... இந்த வார ஓடிடி, தியேட்டர் ரிலீஸ்!
லீடர், காளிதாஸ் 2, கார்மேனி செல்வம்.. இந்த வார ஓடிடி, தியேட்டர் ரிலீஸ்! | Leader | Kaalidas 2

தொடர்புடைய செய்திகள்

சுந்தர் சி-க்கு சீட் கொடுத்ததால் எதிர்ப்பு... அதிமுக ex கவுன்சிலர் வேதனை ! - காரணம் என்ன?
மதுரையைச் சேராத இயக்குனரும், நடிகரும் தயாரிப்பாளருமான சுந்தர் சி யை இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளராக அறிவித்திருப்பது திமுக அமைச்சருக்கான வெற்றியை இலகு ஆகிவிட்டது. - முன்னாள் அதிமுக பெண் கவுன்சிலர் வேதனை. கொந்தளிக்கும் பெண் கவுன்சிலர் 2026-ல் நடைபெறக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வகித்துள்ள ஜனநாயக கூட்டணிக் கட்சி சார்பில் புதிய நீதிக் கட்சியின் சார்பில் சுந்தர் சி இரட்டை இலையில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நேற்று மாலை முதல் மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சங்கங்கள் அமைப்பினர் உள்ளிட்ட அவர்களை சுந்தர் சி மற்றும் ஏ சி சண்முகம் குழுவினர் நேரில் சென்று தங்களது ஆதரவை தருமாறு கேட்டு வருகின்றனர். மதுரை மத்திய தொகுதியில் தற்போது பாஜக மண்டல் உறுப்பினராகவும் முன்னாள் அதிமுக மாமன்ற உறுப்பினராகவும் இருக்கக்கூடிய பெண் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக இன்று செய்தியாளர்களை சந்தித்தால் அப்போது அவர் கூறும் போது...,” நான்கு திசைகளிலும் திக்கு விஜயம் செய்து சிவபெருமானையே வென்று ஆட்சியைப் பிடித்தவர் மீனாட்சி. அவர் குடி கொண்டிருக்கக்கூடிய இந்த மதுரையின் மத்திய பகுதியில் கூடலழகர் பெருமாள், இம்மையிலும் நன்மை தருவார் கோயில் இப்படியாக திருத்தலங்கள் நிறைந்துள்ளது. அழகிரி ஆதரவாளர்களுக்கு சீட் இல்லை இந்த மத்திய தொகுதியில் மதுரையில் மைந்தனாக இருக்கக்கூடியவர் தான் போட்டியிட வேண்டும். மதுரை மத்திய தொகுதியில் எவர் ஒருவர் வெற்றி பெறுகிறாரோ அந்தக் கட்சி குறிப்பாக தமிழக அளவில் ஆட்சியைப் பிடிக்கும் என்கின்ற ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அமைச்சராக உள்ள அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சமீபத்தில் இணைந்த திமுகவைச் சேர்ந்த எஸ்.ஆர் கோபி மன்னன் உள்ளிட்டவர்களுடைய நிலையை பார்த்து எங்கே அவர்கள் தொகுதியை கேட்டு விடுவார்களோ என்ற ஒரு எண்ணத்தில் மயிலாப்பூர் தொகுதியை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேட்டதாகவும் கூறப்பட்டுகிறது. திமுக அமைச்சருக்கான வெற்றியை இலகு ஆகிவிட்டது. தற்போது மதுரையைச் சேராத இயக்குனரும், நடிகரும் தயாரிப்பாளருமான சுந்தர் சி யை இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளராக அறிவித்திருப்பது திமுக அமைச்சருக்கான வெற்றியை இலகு ஆகிவிட்டது. என்பது போல தான் தோன்றுகிறது. ஏனென்றால் முதலில் தான் தேர்தலில் வெற்றி பெற்று விடுவோமா என்ற எண்ணத்தில் இருந்து திமுக அமைச்சருக்கு தற்போது எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்கின்ற ஒரு நிலையை இவர்கள் உருவாக்கி விட்டார்கள் காரணம் மதுரை மக்களோடு பழகி மதுரை மக்களின் எண்ணம் நிலைப்பாடு சூழ்நிலை உள்ளிட்டவைகளை அறிந்த அவர் ஒருபுறம் இருக்க மதுரைக்கு சம்பந்தம் இல்லாத ஒருவரை வேட்பாளராக நியமித்திருக்கும் பட்சத்தில் மதுரை மக்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள் உள்ளூர் வேட்பாளர் வேண்டும் சுந்தர்ச்சியை பொறுத்தவரை அவர் ஒரு நல்ல நடிகர் தயாரிப்பாளர் அவர் மீது நாங்கள் குற்றம் கூற விரும்பவில்லை. ஆனால் அவரை வேட்பாளராக நியமித்து இருப்பது எங்களுக்கு வேதனை அளிக்கிறது. என் டி ஏ கூட்டணியில் பாஜக அதிமுக இப்படியாக கூட்டணி கட்சிகள் இருந்தாலும் அந்த கூட்டணி கட்சியை சேர்ந்த மதுரையில் இருப்பவரை தான் வேட்பாளராக நிறுத்தி இருக்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. கட்சித் தலைமைக்கு இதை கவனத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எங்களது நோக்கம். சுந்தர் சி வேட்பாளராக நிற்பது எங்களுக்கு பிரச்னை இல்லை. மக்கள் எளிதில் அணுக கூடியவராக மக்களுக்கான பிரச்னையையும் மக்களுடைய வாழ்வியல் நிலையையும் தெரிந்து கொண்டவர் தான் மதுரை மத்திய தொகுதியில் வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும், என்பதுதான் எங்களது கோரிக்கை என்றார். இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

