நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🏛️ அரசியல்
  3. >2019, 2021, 2024... ஹாட்ரிக் சக்சஸ்: 2026-லும் தொடருமா கொடைக்கானல் சென்டிமென்ட்? ஓய்வில் ஸ்டாலின்
🏛️ அரசியல்

2019, 2021, 2024... ஹாட்ரிக் சக்சஸ்: 2026-லும் தொடருமா கொடைக்கானல் சென்டிமென்ட்? ஓய்வில் ஸ்டாலின்

சனி, ஏப்ரல் ௨௫, ௨௦௨௬|16 மணி நேரம் முன்|webdesk|The Indian Express
2019, 2021, 2024... ஹாட்ரிக் சக்சஸ்: 2026-லும் தொடருமா கொடைக்கானல் சென்டிமென்ட்? ஓய்வில் ஸ்டாலின்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தீவிரப் பிரசாரப் பணிகளை முடித்துக்கொண்டு, ஓய்வெடுப்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று கொடைக்கானல் சென்றடைந்தார். தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, தி.மு.க. தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடந்த ஒரு மாத காலமாகத் தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டார். தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஓய்வின்றி களப்பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் வாக்குப்பதிவு வெற்றிகரமாக நிறைவடைந்தது. தேர்தல் பரபரப்புகளுக்குப் பிறகு ஓய்வெடுப்பதற்காக, ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து தனது குடும்பத்தினருடன் தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். செய்தியாளர்கள், சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது" என்று கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த முதல்வர், தனது கட்டை விரலை உயர்த்தி (Thumbs Up) காட்டி, "சூப்பராக உள்ளது, வெற்றி வாய்ப்பு எங்களுக்குத் தான்" என மிகுந்த தன்னம்பிக்கையுடன் தெரிவித்துவிட்டு கார் மூலம் கொடைக்கானல் புறப்பட்டார். முதல்வர் ஸ்டாலின் கொடைக்கானல் பாம்பர்புரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்குகிறார். இதற்குப் பின்னால் சுவாரசியமான தேர்தல் 'சென்டிமென்ட்' இருப்பதாகக் கருதப்படுகிறது. 2019 மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவிற்குப் பின் இதே பாம்பர்புரம் விடுதியில் தங்கியிருந்தார். அந்தத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 2021 சட்டமன்றத் தேர்தல் போதும் கொடைக்கானலில் தங்கியிருந்த நிலையில், வெற்றி பெற்று முதல்முறையாகத் தமிழக முதல்வரானார். 2024 மக்களவைத் இந்தத் தேர்தலின் போதும் கொடைக்கானலில் தங்கியிருந்த நிலையில், தி.மு.க. கூட்டணி பெரும் வெற்றியைப் பதிவு செய்தது. தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அதே பாணியில், தான் முன்பு தங்கியிருந்த அதே விடுதி அறையிலேயே தங்கி முதல்வர் ஓய்வெடுக்கத் திட்டமிட்டுள்ளார். மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக மாலை கொடைக்கானல் சென்றடைந்த முதல்வர், அங்கு சுமார் 3 முதல் 4 நாட்கள் தங்கி ஓய்வெடுப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

சத்யசாயி சேவா சமிதியில் ஆராதனை பெருவிழா
அரசியல்

சத்யசாயி சேவா சமிதியில் ஆராதனை பெருவிழா

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ராஜா நகர் சத்யசாயி சேவா சமிதியில் ஆராதனை பெருவிழா நடந்தது. சத்ய இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்
‘இணை’ குழுவின் செயல்பாடுகள்
அரசியல்

‘இணை’ குழுவின் செயல்பாடுகள்

‘இணை’ குழு, சமயக் குழுக்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு; சமூக பொருளியல் வாய்ப்புகள்; கலாசாரம், விளையாட்டு; மொழி, பாரம்பரியம் ஆகிய நான்கு துறைகளிலும் செயல்பாடுகளை ஊக்குவிக்கும். இந்தச் செய்தி Tamil Murasu ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்
காலியாகும் கூடாரம்... ‘ஆம் ஆத்மி’யில் நடப்பது என்ன? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ
அரசியல்

காலியாகும் கூடாரம்... ‘ஆம் ஆத்மி’யில் நடப்பது என்ன? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

ஆம் ஆத்மி கட்​சிக்கு பெரும் பின்​னடை​வாக கருதப்​படு​கிறது. தற்​போது மூன்றில் 2 பங்கு உறுப்​பினர்​கள் ஒரே நேரத்​தில் விலகியுள்ள​தால், அவர்​கள் மீது கட்​சித் தாவல் தடைச் சட்டம் பாயாது. இது குறித்து தெளிவுபடுத்தும் சுருக்கமான எக்ஸ்ப்ளைனர் வீடியோ இது. இந்தச் செய்தி Hindu Tamil News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்