நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🏛️ அரசியல்
  3. >Tamil Nadu Election 2026: மயிலாடுதுறை தேர்தல் 2026: 3 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு - கலெக்டர், எம்பி, எஸ்பி மற்றும் வேட்பாளர்கள் வாக்களிப்பு!
🏛️ அரசியல்

Tamil Nadu Election 2026: மயிலாடுதுறை தேர்தல் 2026: 3 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு - கலெக்டர், எம்பி, எஸ்பி மற்றும் வேட்பாளர்கள் வாக்களிப்பு!

வியாழன், ஏப்ரல் ௨௩, ௨௦௨௬|17 மணி நேரம் முன்|மயிலாடுதுறை, எஸ்.ஜெகநாதன்|Abp News
Tamil Nadu Election 2026: மயிலாடுதுறை தேர்தல் 2026: 3 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு - கலெக்டர், எம்பி, எஸ்பி மற்றும் வேட்பாளர்கள் வாக்களிப்பு!

மயிலாடுதுறை: தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் இன்று (23.04.2026) தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் இன்று காலை 7:00 மணிக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாகத் தொடங்கியது. காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். வாக்காளர் விவரம் மற்றும் முன்னேற்பாடுகள் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறை, பூம்புகார் மற்றும் சீர்காழி ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 7,35,135 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3,62,939 ஆண் வாக்காளர்களும், 3,72,149 பெண் வாக்காளர்களும், 47 மூன்றாம் பாலினத்தவர்களும் அடங்குவர். வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக மாவட்டம் முழுவதும் 951 வாக்குப்பதிவு மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதில் 54 வாக்குச்சாவடி மையங்கள் 'பதற்றமானவை' எனக் கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பாதுகாப்பு தேர்தல் பணிகளுக்காக 1504 வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM), 1140 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் (Control Units) மற்றும் 1235 விவிபேட் (VVPAT) இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் 216 மத்திய துணை ராணுவப் படையினர், வெளிமாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட 256 ஊர்க்காவல் படையினர் உட்பட மொத்தம் 1668 போலீஸார் மாவட்டம் முழுவதும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 4564 தேர்தல் பணியாளர்கள் வாக்குப்பதிவு பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர். இயந்திரக் கோளாறால் சிறு தாமதம் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மாவட்டத்தின் சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்குவதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. பின்னர் தேர்தல் பொறியாளர்கள் மூலம் பழுதுகள் சரிசெய்யப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு தடையின்றித் தொடர்ந்தது. முக்கியப் பிரமுகர்கள் வாக்குப்பதிவு மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதியில் மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஸ்ரீகாந்த், தருமபுரம் ஸ்ரீ குருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், டிஎல்சி அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில் வாக்களித்தார். மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் வழக்கறிஞர் ஆர். சுதா, வரதாச்சாரியார் பூங்கா அரசு தொடக்கப்பள்ளியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த இவர், கடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தனது வாக்கினை மயிலாடுதுறைக்கு மாற்றிக்கொண்டார். வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்" எனத் தன்னம்பிக்கை தெரிவித்தார். வேட்பாளர்கள் வாக்களிப்பு சீர்காழி: திமுக கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் செந்தில் செல்வன், தனது சொந்த ஊரான பெருந்தோட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் முதல் ஆளாக வந்து குடும்பத்துடன் வாக்களித்தார். அதேபோல், அதிமுக வேட்பாளர் சக்தி அவர்கள் தனது சொந்த ஊரான எருக்கூரில் வாக்கினைப் பதிவு செய்தார். பூம்புகார்: தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் விஜயாலயன், பொறையார் ஜமாலியா பள்ளியில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். வேட்பாளர்களின் நிலவரம் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 43 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மயிலாடுதுறை: 20 வேட்பாளர்கள் பூம்புகார்: 13 வேட்பாளர்கள் சீர்காழி: 10 வேட்பாளர்கள் காலை நேர வாக்குப்பதிவு நிலவரம் மாவட்டத்தில் காலை 9:00 மணி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 16.43 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தொகுதி வாரியான விவரம்: மயிலாடுதுறை: 15.94% சீர்காழி: 16.14% பூம்புகார்: 17.15% வெப்பம் அதிகரிக்கும் முன்பே வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில் அதிகாலையிலேயே முதியவர்கள், இளைஞர்கள் எனப் பலரும் உற்சாகமாக வாக்குச்சாவடிகளில் திரண்டு வருகின்றனர். தேர்தல் அமைதியான முறையில் நடைபெறுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! நாமக்கல் முதலிடம்! மாவட்டவாரியாக விவரம்...
அரசியல்

தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! நாமக்கல் முதலிடம்! மாவட்டவாரியாக விவரம்...

தமிழகத்தில் வாக்குப்பதிவு நிலவரம் பற்றி... 70 percent voter turnout in tamilnadu election till 3 pm இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்
Aadhav Arjuna: மக்கள் ஓட்டுப்போட முடியாமல் போனதற்கு 3 பேர்தான் தான் காரணம்.. ஆதவ் அர்ஜுனா சொல்வது யாரை?
அரசியல்

Aadhav Arjuna: மக்கள் ஓட்டுப்போட முடியாமல் போனதற்கு 3 பேர்தான் தான் காரணம்.. ஆதவ் அர்ஜுனா சொல்வது யாரை?

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாக்குப்பதிவிற்காக வெளியூரில் உள்ள பல்வேறு மக்களும் கடந்த ஓரிரு தினங்களாகவே வெளியூரில் இருந்து சொந்த ஊர்களுக்குச் சென்று வருகின்றனர். வாக்களிக்க செல்ல முடியாமல் அவதி: ஆனால், போதுமான அளவு பேருந்துகள் இல்லாததால் பல்லாயிரக்கணக்கான வாக்காளர்கள் பேருந்துகள் கிடைக்காமலும், கடுமையான போக்குவரத்து நெரிசலாலும் தங்களது சொந்த ஊர்களுக்கு வாக்களிக்கச் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்தை அவதிப்பட்டு வருகின்றனர். வாக்களிக்கச் செல்ல முடியாமல் அவதிப்பட்ட பலரும் இணையதளங்களில் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். தேர்தல் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக தேர்தல் அதிகாரிகளிடம் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தவெக-வின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்து புகார் அளித்தனர். பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஆதவ் அர்ஜுனா கூறியதாவது, பேருந்து வசதி இல்லை: கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர் ஆகிய அனைத்து இடங்களிலும் மக்கள் அணி திரண்டு ஒரு விரல் புரட்சியாக இருக்கக்கூடிய கிட்டத்தட்ட இன்று 90 சதவீதத்திற்கும் மேல் வாக்காளர்கள் தங்கள் வாக்கை செலுத்துவதற்கு தமிழ்நாடே திரண்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் உலகெங்கும் உள்ள தமிழர்கள் இங்கு வந்து வாக்கு செலுத்துகிறார்கள். ஆனால், நேற்று மாலை முதலே சென்னையின் பேருந்து நிலையங்கள் முடக்கப்பட்டுள்ளது. இரவு குடும்பம், குடும்பமாக கைக்குழந்தைகளுடன் பெண்களுக்கு பேருந்து வசதி கூட செய்து தர முடியவில்லை. 3 ஐஏஎஸ் அதிகாரிகள்: இத்தனைக்கும் ஒரு வாரத்திற்கு முன்பே அர்ச்சனா பட்நாயக் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்கள். பொங்கலுக்கும், தீபாவளிக்கும் செய்து கொடுப்பது போல இதற்கும் செய்து கொடுத்திருக்க வேண்டும். போக்குவரத்து துறை முதன்மை செயலாளர்சிரு ஐஏஎஸ், மேலாண்மை இயக்குனர் பிரபு சங்கர், ஆர்.மோகன் உள்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகளுமே மக்களுக்கு சேவை செய்யும் இடத்தில் உள்ளனர். இன்றும் காபந்து முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின் பேச்சைக் கேட்கும் அதிகாரிகளாக உள்ளனர். தேர்தல் ஆணையத்தின் பேச்சை அவர்கள் கேட்பதில்லை. நேற்று இரவு லட்சக்கணக்கான மக்கள் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக 7 மணி நேரம், 8 மணி நேரம் இப்போதும் காத்துக்கொண்டிருக்கின்றனர். சென்றவர்களும் பாதி பேர் திரும்பி வந்துக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. காவல்துறையினர் எந்த இடத்திலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவில்லை. மு.க.ஸ்டாலினின் பயம்: மு.க.ஸ்டாலினின் பயம் என்னவென்றால் மக்கள் அதிகளவு சதவீதத்தில் வாக்களித்தால் படுதோல்வி அடைவோம் என்று காபந்து முதலமைச்சராக இருந்து கொண்டு இன்றும் சில ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டுப்படுத்துகின்றார். ஒரு ஐஏஎஸ் அதிகாரி கிட்டத்தட்ட 1 லட்சம் பேர், 50 ஆயிரம் பேர் உட்கார்ந்து இருக்கும்போது அவர் என்ன தூங்கிக் கொண்டு இருந்தாரா? நாங்கள் வேட்பாளர்கள் என்பதால் போக முடியாது. வீட்டில் உட்கார்ந்து தூங்குவதற்காகவா அவர்கள் 3 பேரும் வந்தனர்? லட்சக்கணக்கான மக்கள் குடும்பம், குடும்பமாக தன்னெழுச்சியாக ஜனநாயக கடமையாற்ற செல்லும்போது பேருந்து வசதி கூட செய்து தர முடியவில்லை. இந்த செயலாளர்கள் அனைவரும் 2 வருடத்திற்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டவர்கள். அதிகாரிகளுக்கு உத்தரவாதம் கொடுத்து வேண்டுமென்றே பேருந்துகளை செயல்படவிடாமல் தடுத்துள்ளனர். தனியார் உரிமையாளர்களிடம் நாங்கள் பேசினாேம். பேருந்துகளை முடக்கிவிட்டதாக கூறினார்கள். தமிழக மக்களுக்கு 3 அதிகாரிகள் சொல்ல வேண்டும். 2 மணி நேரம் நீட்டிக்க வேண்டும்: காலையில் சிலர் பேருந்து ஏறி இப்போதுதான் செல்கின்றனர். 2 மணி நேரம் வாக்குப்பதிவை நீட்டிக்க வேண்டும். டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எங்கள் தலைவர் ( விஜய் ) மனு கொடுத்துள்ளார். நாங்களும் இங்கு மனு கொடுத்துள்ளோம். அவர்களுக்கு மேலும் 2 மணி நேரம் வாக்களிக்க நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளோம். மு.க.ஸ்டாலின் மக்கள் ஓட்டுப்போடுவதை தடுத்து நிறுத்தியுள்ளார். அந்த 3 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்
Tamil Nadu Elections Poll Percentage: ஜனநாயக திருவிழா.. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70% வாக்குப்பதிவு..
அரசியல்

Tamil Nadu Elections Poll Percentage: ஜனநாயக திருவிழா.. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70% வாக்குப்பதிவு..

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் காலை 7:00 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 3:00 மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது ஒரு பெரிய ஆச்சரியமான விஷயம் என கூறப்படுகிறது. இதுவரை கிட்டத்தட்ட 4 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இந்தச் செய்தி Tv9 Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்