நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🏏 விளையாட்டு
  3. >“என்னால் காங்கிரஸ் கட்சிக்கு சிரமம் வரக்கூடாது” - தேர்தல் பொறுப்பில் இருந்து விலகியது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்
🏏 விளையாட்டு

“என்னால் காங்கிரஸ் கட்சிக்கு சிரமம் வரக்கூடாது” - தேர்தல் பொறுப்பில் இருந்து விலகியது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்

வியாழன், ஏப்ரல் ௨, ௨௦௨௬|17 மணி நேரம் முன்|balaji e|The Indian Express
“என்னால் காங்கிரஸ் கட்சிக்கு சிரமம் வரக்கூடாது” - தேர்தல் பொறுப்பில் இருந்து விலகியது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்

தி.மு.க கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டின்போது சலசலப்பை ஏற்படுத்திய காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் கட்சியின் 'தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழு'வில் இருந்து விலகியது சர்ச்சையான நிலையில், அவர் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். மேலும், “என்னால் எந்த சிரமமும் வரக் கூடாது என்று நினைப்பவன் நான். விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 தொகுதிகளையும் வெற்றி பெற வைப்பதற்காக எனது உழைப்பு தொடரும்” மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. தி.மு.க தலைமையிலான கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் அனைத்தும் தொகுதிகளைப் பகிர்ந்து, வேட்பாளர்களை அறிவித்து, வாக்கு சேகரிப்பில் தீவிரமாக இறங்கிவிட்டன. ஆனால், காங்கிரஸ் கட்சியில் மட்டும் இன்னும் வேட்பாளர் பட்டியலே முடிவாகாத நிலையில், அக்கட்சியின் மாணிக்கம் தாகூர் எம்.பி தேர்தல் பொறுப்பில் இருந்து விலகியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சியின் மிக முக்கியமான பொறுப்பான 'தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழு' தலைவராக மாணிக்கம் தாகூர் செயல்பட்டு வந்தார். கே.சி. வேணுகோபாலால் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட அவர், ப.சிதம்பரம், செல்லகுமார் போன்ற மூத்த தலைவர்களுடன் இணைந்து செயல்பட்டு வந்தார். ஆனால், அவர் திடீரென இந்தப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்து தனது ராஜினாமா கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு அனுப்பி வைத்தார். தேர்தல் நேரத்தில் ஒரு முக்கிய நிர்வாகி விலகுவது காங்கிரஸார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தி.மு.க-வுடன் தொகுதி உடன்பாடு தொடங்கியதில் இருந்தே காங்கிரஸில் சிக்கல்கள் தொடங்கிவிட்டன. ஸ்கிரீனிங் கமிட்டி பலமுறை கூடி ஆலோசித்தும், முதல் வேட்பாளர் பட்டியலைக் கூட வெளியிட முடியாத அளவுக்குத் தலைவர்களிடையே முரண்பாடுகள் நீடிக்கின்றன. கரூர் எம்.பி ஜோதிமணி, வேட்பாளர் தேர்வு முறையாக நடைபெறவில்லை என்று தனது குமுறலைப் பொதுவெளியிலேயே வெளிப்படுத்தியிருந்தார். இருப்பினும், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று இரவுக்குள் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தான் ஏன் 'தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழு'-வில் இருந்து விலகினேன் என்று வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். வீடியோவில் மாணிக்கம் தாகூர் கூறியிருப்பதாவது: “நேற்றிலிருந்து ஒரு தேவையில்லாத ஒரு குழப்பம் உருவாகிக்கொண்டு இருக்கிறது. என்னை பொருத்த மட்டிலும், காங்கிரஸ் கட்சிக்கு என்னால் ஒரு சிரமம் வரக்கூடாது என்று நினைப்பவன் நான். அதனால் சில பொறுப்புகள் எனக்கு கொடுக்கப்பட்டிருந்தது, தேர்தல் சம்மந்தப்பட்டானாலும் மாநில அளவிலான பொறுப்பு அது. அந்த பொறுப்பைப் பொறுத்தவரைக்கும் அந்த பொறுப்பில் நான் தொடர விரும்பவில்லை என்பதை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் தலைவர் கார்கேவிடம் தெரிவித்துவிட்டேன். இது ஒரு 4-5 நாட்களுக்கு முன்னாள் 28-ம் தேதி இரவு நடைபெற்றது. அதனால், அதை பற்றிய மீண்டும் விவாதங்கள் தேவை இல்லாதது. என்னை பொருத்தமட்டில், மதசார்பற்ற கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்காக ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றுவேன். விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினராக கொரடாவின் பணி முடிந்த அந்த பணியாற்றுவதற்காக மதுரை, என்னுடைய திருமங்கலம் திருப்பரங்குன்றம் மற்றும் விருதுநகர் சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை இந்த 6 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற கூட்டணி மாபெரும் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக என்னுடைய உழைப்பு தொடரும். காங்கிரஸ் நண்பர்களும் மதச்சார்பற்ற கூட்டணி தோழர்களுடனும் இணைந்து பணியாற்றி 6 தொகுதிகளிலும் வெற்றி பெற வைப்பதற்காக நானும்தான் வந்து சேருவேன்.” என்று கூறியுள்ளார்.

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

The Indian Express இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

IPL 2026: முதலில் பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.. பந்துவீச்சில் கட்டுப்படுத்துமா கொல்கத்தா?
விளையாட்டு

IPL 2026: முதலில் பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.. பந்துவீச்சில் கட்டுப்படுத்துமா கொல்கத்தா?

ஐபிஎல் 2026 சீசனின் 6வது போட்டியில் இன்று அதாவது 2026 ஏப்ரல் 2ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்தச் செய்தி Tv9 Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்
Argentina Messi : "அர்ஜென்டினா அணி எங்களை ஏமாற்றிவிட்டது" – 250 கோடி ரூபாய் மோசடிப் புகாரில் கேரள அமைச்சர் அதிரடி!
விளையாட்டு

Argentina Messi : "அர்ஜென்டினா அணி எங்களை ஏமாற்றிவிட்டது" – 250 கோடி ரூபாய் மோசடிப் புகாரில் கேரள அமைச்சர் அதிரடி!

விளையாட்டுத் துறையில் ஏற்பட்ட இந்த பின்னடைவு மற்றும் அமைச்சரின் தொகுதி மாற்றம் ஆகியவை தற்போது கேரள அரசியலில் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளன. இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

16 மணி நேரம் முன்
IPL 2026: முதல் பந்திலேயே அதிக விக்கெட்டுகள்.. கே.எல்.ராகுலுக்கு எதிராக 2வது முறை.. முகமது ஷமி புதிய வரலாறு!
விளையாட்டு

IPL 2026: முதல் பந்திலேயே அதிக விக்கெட்டுகள்.. கே.எல்.ராகுலுக்கு எதிராக 2வது முறை.. முகமது ஷமி புதிய வரலாறு!

Mohammed Shami First Ball Wicket: ஒரு போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட் எடுப்பது முகமது ஷமிக்கு இது முதல் முறையல்ல. ஐபிஎல் தொடரில் இது அவரது 5வது முறையாகும். இதற்கு முன்பும் பலமுறை ஒரு இன்னிங்ஸின் தொடக்கப் பந்திலேயே ஷமி பல பேட்ஸ்மேனை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். குறிப்பாக, ஒரு இன்னிங்ஸின் முதல் பந்திலேயே கே.எல். ராகுலை ஷமி ஆட்டமிழக்கச் செய்வது இது இரண்டாவது முறையாகும். இந்தச் செய்தி Tv9 Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

16 மணி நேரம் முன்