நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🏏 விளையாட்டு
  3. >திரையில் பார்த்தது போதும்... நிஜத்தில் பார்க்கலாம்; உங்கள் பாஸ்போர்டில் இடம்பிடிக்க காத்திருக்கும் ஸ்பாட்
🏏 விளையாட்டு

திரையில் பார்த்தது போதும்... நிஜத்தில் பார்க்கலாம்; உங்கள் பாஸ்போர்டில் இடம்பிடிக்க காத்திருக்கும் ஸ்பாட்

வெள்ளி, ஏப்ரல் ௩, ௨௦௨௬|14 மணி நேரம் முன்|nagalekshmi rajasekar|The Indian Express
திரையில் பார்த்தது போதும்... நிஜத்தில் பார்க்கலாம்; உங்கள் பாஸ்போர்டில் இடம்பிடிக்க காத்திருக்கும் ஸ்பாட்

இந்த உலகம் மிகவும் அழகான ஒன்று. இங்கு பிரம்மிக்க வைக்கும் நாடுகள் அவற்றின் பிரமிக்க வைக்கும் காட்சிகள், துடிப்பான கலாச்சாரம் மற்றும் பலதரப்பட்ட இயற்கை ஈர்ப்புகளால் தனித்து நிற்கின்றன. ஒரு நாட்டின் அழகு என்பது, அந்தந்த அரசாங்கங்களும் குடிமக்களும் இணைந்து தங்கள் நாட்டின் அமைதியான நிலப்பரப்புகளைப் பராமரிக்க எடுக்கும் கூட்டு முயற்சியைப் பொறுத்தும் அமைகிறது. அடுத்த சிக்கலில் சிக்கிய விஜய்... பெரம்பூர் தொகுதி வேட்புமனு நிராகரிக்க வாய்ப்பு? இருப்பினும், அழகு என்பது ஒரு தனிப்பட்ட உணர்வு, அது பார்ப்பவரின் கண்ணோட்டத்தைப் பொறுத்தது. World Population Review அறிக்கையின் சமீபத்திய தரவரிசைப்படி, உலகின் மிக அழகான இடங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அது எந்தெந்த இடங்கள் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். கிரீஸ் உலகிலேயே மிக அழகான இடமாக கிரீஸ் திகழ்கிறது. இந்த நாடு அதன் பழங்கால வரலாறு, செழுமையான கலாச்சாரம் மற்றும் கண்கவர் இயற்கை காட்சிகளுக்கு பெயர் பெற்றது. சாண்டோரினி தீவின் பாரம்பரிய வெள்ளை நிற வீடுகள் மற்றும் ஏஜியன் கடலின் வசீகரிக்கும் நீல நிற நீர் ஆகியவை இங்குள்ள முக்கிய ஈர்ப்புகளாகும். கிளாசிக் மத்திய தரைக்கடல் அழகிற்கு கிரீஸ் ஒரு சிறந்த உதாரணமாகும். அதன் பாரம்பரியம், சுவையான உணவு மற்றும் அழகான தீவுகள் உலகெங்கிலும் உள்ள பயணிகளின் விருப்பமான இடங்களில் ஒன்றாக இதை மாற்றியுள்ளது. நியூசிலாந்து நியூசிலாந்து அதன் பிரம்மிக்க வைக்கும் இயற்கை அழகிற்காக உலகளவில் அறியப்படுகிறது. குறிப்பாக மில்ஃபோர்ட் சவுண்ட் நீரிணைகள், ரோட்டோருவாவின் புவிவெப்ப செயல்பாடுகள் மற்றும் ஹாபிட்டனின் அமைதியான பசுமைப் பள்ளத்தாக்குகள் ஆகியவை மிகவும் பிரபலமானவை. தனது பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதில் அந்த நாடு காட்டும் அர்ப்பணிப்பும், செழுமையான மாவோரி கலாச்சாரமும் அதன் மகத்தான அழகிற்கு மேலும் பெருமை சேர்க்கின்றன. இத்தாலி இத்தாலி என்பது வரலாறு, கலை மற்றும் இயற்கை ஆகியவற்றின் ஒரு கச்சிதமான கலவையாகும். அமால்பி கடற்கரையின் அமைதியான குன்றுகள், டஸ்கனியின் அழகான திராட்சைத் தோட்டங்கள் மற்றும் இத்தாலியின் புகழ்பெற்ற நகரங்களான ரோம் மற்றும் வெனிஸ் ஆகியவை உலகெங்கிலும் உள்ள பயணிகளுக்கு ஒரு சிறந்த அனுபவத்தைத் தருகின்றன. நவீன ஃபேஷன் மற்றும் சுவையான உணவு முதல் அன்பான மக்கள் வரை, இத்தாலி உங்கள் மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். சுவிட்சர்லாந்து சுவிட்சர்லாந்து என்றாலே நம் நினைவுக்கு வருவது பனி படர்ந்த ஆல்ப்ஸ் மலைத்தொடர்கள், கண்ணைக் கவரும் ஏரிகள் மற்றும் அழகியல் நிறைந்த இடைக்கால கிராமங்கள் தான். மலையேற்றம், பனிச்சறுக்கு மற்றும் தூய்மையான இயற்கையை ரசிப்பது போன்ற வெளிப்புற சாகசங்களை விரும்புவோருக்கு இந்த நாடு ஒரு சொர்க்கமாகும். இந்த பட்டியலில் ஸ்பெயின், தாய்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளும் அடங்கும்.

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

The Indian Express இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

IPL 2026 | அபிஷேக் சர்மாவை பிசிசிஐ தண்டித்தது ஏன்? - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டியில் நடந்தது என்ன?
விளையாட்டு

IPL 2026 | அபிஷேக் சர்மாவை பிசிசிஐ தண்டித்தது ஏன்? - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டியில் நடந்தது என்ன?

Abhishek Sharma | சொந்த மண்ணில் விளையாடியும் கொல்கத்தா அணி இந்தப் போட்டியில் படுதோல்வியைச் சந்தித்தது அதன் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்
ஐபிஎல் ஏலத்துல யாரும் கண்டுக்கல.. இப்போ டாப் பவுலர்.. சாதித்த பிளெஸ்ஸிங் முசராபானி!
விளையாட்டு

ஐபிஎல் ஏலத்துல யாரும் கண்டுக்கல.. இப்போ டாப் பவுலர்.. சாதித்த பிளெஸ்ஸிங் முசராபானி!

Blessing Muzarabani : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 226 ரன்கள் என்ற பிரம்மாண்டமான ஸ்கோரை பதிவு செய்தது. இருப்பினும், இந்த இன்னிங்ஸின் போது, ​​கேகேஆர் அணியின் ஒரு பந்துவீச்சாளர் முக்கிய பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்து, மிகச் சிறப்பாகச் செயல்பட்டார். இந்தச் செய்தி Tv9 Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்
சுட்டு வீழ்த்தப்பட்ட அடுத்த F-35 ரக போர் விமானம்...! அதிரடி காட்டும் ஈரான்
விளையாட்டு

சுட்டு வீழ்த்தப்பட்ட அடுத்த F-35 ரக போர் விமானம்...! அதிரடி காட்டும் ஈரான்

இரண்டாவது அமெரிக்க F-35 ரக போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் உரிமை கோரியுள்ளது. மத்திய ஈரானின் வான்வெளியில் அமெரிக்க F-35 ரக போர் விமானம் அழிக்கப்பட்டதாக இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) பத்திரிக்கைச் சேவை ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது என சர்வதேச ஊடகம் செய்தி தெரிவித்துள்ளது. அந்தப் போர் விமானம் முற்றிலுமாகச் சேதமடைந்து நொறுங்கி விழுந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சுட்டு வீழ்த்தப்பட்ட இரண்டாவது விமானம் கடந்த சில... இந்தச் செய்தி Ibc Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்