வைத்தீஸ்வரன்கோயில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு பற்றி..
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

வைத்தீஸ்வரன்கோயில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு பற்றி..
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

பாஸ்போர்ட் என்பது வெறும் பயண ஆவணம் மட்டுமல்ல அது ஒரு நாட்டின் உலகளாவிய நகர்வுத் திறன், வசதி மற்றும் ஒரு குடிமகன் உலகெங்கும் எவ்வளவு எளிதாகப் பயணம் செய்ய முடியும் என்பதற்கான அமைதியான அளவுகோலாகும். 2026-ஆம் ஆண்டின், உலகின் வலிமையான பாஸ்போர்ட்டுகள் மீண்டும் ஒருமுறை அந்த பாஸ்போர்ட்களை வைத்திருப்பவர்கள் முன்கூட்டியே விசா தேவையின்றி எத்தனை இடங்களுக்குச் செல்ல முடியும் என்பதை தீர்மானிக்கின்றன. ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஏறுமுகத்தில் தங்கம் விலை: நினைத்து பார்க்க முடியாத கம்மி விலையில் இந்த நாட்டில் கோல்ட் வாங்கலாம்; உடனே கிளம்புங்க! சிங்கப்பூர் இந்த பட்டியலில் சிங்கப்பூர் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 192 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்யலாம். இது அந்நாட்டை உலகளாவிய தரவரிசையில் அசைக்க முடியாத உயரத்தில் வைத்துள்ளது. சிங்கப்பூரின் வலுவான சர்வதேச உறவுகள், திறமையான நிர்வாகம் மற்றும் உலகெங்கிலும் தடையின்றி இணைக்கப்பட்ட அதன் பயண ஆவணம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, இது பெரிய ஆச்சரியத்தைத் தரவில்லை. அடிக்கடி பயணம் செய்பவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் உலகளாவிய குடிமக்களுக்கு இது இன்றும் ஒரு கனவுப் பாஸ்போர்ட்டாகவே நீடிக்கிறது. ஜப்பான் - தென் கொரியா 2026-ஆம் ஆண்டில், ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய இரு நாடுகளும் தலா 188 என்ற விசா இல்லாத பயண மதிப்பீட்டுடன் இரண்டாம் இடத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. நிலையான தூதரக உறவுகள், நம்பகமான அரசு நிறுவனங்கள் மற்றும் பரஸ்பர பயண ஒப்பந்தங்கள் காரணமாகவே இந்த இரு நாடுகளின் பாஸ்போர்ட்டுகளும் எப்போதும் வலிமையாகக் கருதப்படுகின்றன. உலகளாவிய நகர்வுத் திறனில் இந்த நாடுகள் எவ்வளவு செல்வாக்கு மிக்கவை என்பதையும், சர்வதேச சமூகத்துடன் எவ்வளவு ஆழமாக இணைந்துள்ளன என்பதையும் இந்தத் தரவரிசை பிரதிபலிக்கிறது. டென்மார்க், லக்சம்பர்க், ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து 2026-ஆம் ஆண்டின் தரவரிசையில் டென்மார்க், லக்சம்பர்க், ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் தலா 186 என்ற விசா இல்லாத பயண மதிப்பீட்டுடன் மூன்றாவது இடத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. இங்கிருந்துதான் உலகப் பாஸ்போர்ட் சந்தையில் ஐரோப்பாவின் ஆதிக்கம் மிகத் தெளிவாகத் தெரியத் தொடங்குகிறது. இந்த நாடுகள் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் வலுவாக இருப்பது மட்டுமின்றி, தடையற்ற பயணத்தை ஊக்குவிக்கும் ஐரோப்பிய மற்றும் சர்வதேச கூட்டமைப்புகளுடன் ஆழமாக இணைந்துள்ளன. ஆஸ்திரியா, பெல்ஜியம், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, நார்வே மற்றும் நெதர்லாந்து 2026-ஆம் ஆண்டின் தரவரிசையில் நான்காவது இடம் ஒரு மிகப்பெரிய கூட்டமைப்பைக் கொண்டுள்ளது. ஆஸ்திரியா, பெல்ஜியம், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, நார்வே மற்றும் நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் தலா 185 என்ற விசா இல்லாத பயண மதிப்பீட்டுடன் இந்த இடத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்தத் தரவரிசையில் இத்தனை ஐரோப்பிய நாடுகள் வரிசையாக இடம் பெற்றிருப்பது, பாஸ்போர்ட் வலிமையில் ஐரோப்பாக் கண்டம் எவ்வளவு வலுவாகத் திகழ்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது. இந்த நாடுகள் தங்களின் வலுவான தூதரக உறவுகள், நம்பகமான பாஸ்போர்ட் முறைகள் மற்றும் நீண்டகாலமாக நிலைநாட்டப்பட்ட சர்வதேச பயண அணுகல் ஆகியவற்றால் பெரும் பலன் பெறுகின்றன. இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

சென்னையில் அரவிந்த் கேஜரிவால் செய்தியாளர்கள் சந்திப்பு பற்றி... | Do not give importance to the BJP, which has no presence in Tamil Nadu! — Kejriwal இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, வெளியூர்களில் தங்கிப் பணியாற்றுவோர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்கத் தயாராகி வரும் நிலையில், தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டண உயர்வு பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி அன்றைய தினம் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னையில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் நாளை முதலே தங்கள் ஊர்களுக்குப் படையெடுக்கத் திட்டமிட்டுள்ளனர். பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்க அரசு போக்குவரத்துத் துறை சார்பில் 10,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ள போதிலும், தனியார் ஆம்னி பேருந்துகளின் முன்பதிவு விண்ணை முட்டும் விலைக்கு விற்பனையாகி வருகிறது. வழக்கமாக பண்டிகை காலங்களில் மட்டுமே காணப்படும் இந்தக் கட்டணக் கொள்ளை, தற்போது ஜனநாயகக் கடமையாற்றச் செல்லும் வாக்காளர்களையும் விட்டுவைக்கவில்லை. குறிப்பாக, சென்னையில் இருந்து மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்குச் செல்லும் பேருந்துகளில் கட்டணம் இரண்டு முதல் மூன்று மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண நாட்களில் 1,000 ரூபாய் வரை வசூலிக்கப்பட்ட இடங்களுக்கு, தற்போது 2,500 முதல் 3,500 ரூபாய் வரை கேட்கப்படுகிறது. திருநெல்வேலிக்கு குளிர்சாதன வசதி இல்லாத படுக்கை பேருந்துகளில் கூட 3,000 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதால் நடுத்தர வர்க்கத்தினர் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர். அதேபோல், தூத்துக்குடி மற்றும் மதுரை போன்ற ஊர்களுக்குச் செல்லும் குளிர்சாதனப் பேருந்துகளின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட பல நூறு ரூபாய்கள் கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருகிறது. "பண்டிகைக் காலங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை லாப நோக்கமாகக் கருதினாலும், தேர்தலில் வாக்களிக்கச் செல்லும் மக்களை இலக்காக வைத்து இவ்வளவு பெரிய சுமையை ஏற்றுவது வேதனை அளிக்கிறது" என பயணிகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை எனும் நிலையில், அந்த உரிமையை நிலைநாட்டச் செல்வோரின் பாக்கெட்டைக் காலி செய்யும் இத்தகைய கட்டண உயர்வைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.