IPL 2026 CSK vs KKR Live Cricket Score, Chennai Super Kings vs Kolkata Knight Riders Today Match Playing 11 Live Updates: 10 அணிகள் களமாடும் 19-வது ஐ.பி.எல். தொடர் மார்ச் 28-ம் தேதி முதல் கோலாகலாமாக தொடங்கியது. மே 31-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கும் இத்தொடரில், இன்று செவ்வாய்க்கிழமை இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானதில் அரங்கேறும் 22-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மல்லுக்கட்டுகிறது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும் 3 தொடர் தோல்விகளுக்குப் பிறகு, டெல்லி அணிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் வெற்றிக் கணக்கை தொடங்கி சென்னை அதே உத்வேகத்தில் களமிறங்கும். இதுவரை நடந்த 4 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறாத கொல்கத்தா முதல் வெற்றிக்கு முயலும். எனவே, இந்த இரு அணிகள் மோதும் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இரு அணிகளின் உத்தேச பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), ஃபின் ஆலன், கேமரூன் கிரீன், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், ரோவ்மன் பவல், ரமன்தீப் சிங், அனுகுல் ராய், சுனில் நரைன், நவ்தீப் சைனி, கார்த்திக் தியாகி, வைபவ் அரோரா சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஆயுஷ் மத்ரே, சர்ஃபராஸ் கான், டெவால்ட் ப்ரீவிஸ், ஷிவம் துபே, ஜேமி ஓவர்டன், அகேல் ஹொசைன், நூர் அகமது, கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ், குர்ஜப்னீத் சிங்
CSK vs KKR Live Score: வெற்றியை தொடருமா சி.எஸ்.கே? கொல்கத்தா அணியுடன் இன்று மோதல்
|16 மணி நேரம் முன்|martin jeyaraj


