IPL Live Score 2026, Chennai Super Kings (CSK) vs Punjab Kings (PBKS) Live Cricket Score Updates: 10 அணிகள் களமாடும் 19-வது ஐ.பி.எல். தொடர் மார்ச் 28-ம் தேதி முதல் கோலாகலாமாக தொடங்கியது. மே 31-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கும் இத்தொடரில், இன்று வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் அரங்கேறும் 7-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும் நடப்பு தொடரில் தொடக்க ஆட்டத்தில் தோல்வியடைந்த சென்னை அணி சொந்த மண்ணில் வெற்றி பெற்று வெற்றிக் கணக்கை தொடங்கிட ஆவலுடன் இருக்கும். அதேநேரத்தில் தொடக்க ஆட்டத்தில் வெற்றியை ருசித்த பஞ்சாப் ஆதிக்கம் செலுத்த முயலும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. இரு அணிகளின் உத்தேச பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்: சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஆயுஷ் மத்ரே, கார்த்திக் ஷர்மா, டெவால்ட் ப்ரீவிஸ், ஷிவம் துபே, பிரசாந்த் வீர், ஜேமி ஓவர்டன், நூர் அகமது, கலீல் அகமது, அன்ஷுல் காம்போஜ், மாட் ஹென்றி பஞ்சாப் கிங்ஸ் : பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), பிரியான்ஷ் ஆர்யா, கூப்பர் கோனோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், மார்கோ ஜான்சன், சேவியர் பார்ட்லெட், அர்ஷ்தீப் சிங், விஜய்குமார் வைஷாக்/ஹர்பிரீத் பிரார், யுஸ்வேந்திர சாஹல்
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



