ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த சில வருடங்களாகவே ஐபிஎல் தொடர் ரன்மழை பொழியும் தொடராக மாறியுள்ள நிலையில், இந்த தொடரும் அதற்கு விதிவிலக்கு இல்லாமல் ரன் மழையை ஒவ்வொரு அணிகளும் பொழிந்து வருகின்றனர். அதிக ரன்கள்: இந்த சூழலில், நேற்று ஒரே நாளில் மட்டும் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பி நான்கு பேரிடம் மாறியுள்ளது. குஜராத் அணிக்கு எதிராக 81 ரன்கள் விளாசியதன் மூலமாக விராட் கோலியிடம் நேற்று முன்தினம் ஆரஞ்சு தொப்பி சென்றது. நேற்று காலை விராட் கோலியிடம் 328 ரன்களுடன் ஆரஞ்சு நிற தொப்பி இருந்த நிலையில், நேற்று டெல்லி அணி - பஞ்சாப் அணி மோதிய போட்டியின்போது டெல்லி அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 152 ரன்களை அந்த ஒரே போட்டியில் விளாச ஆரஞ்சு தொப்பி 357 ரன்களுடன் அவர் வசம் சென்றது. இதையடுத்து, மாலை நடந்த ராஜஸ்தான் - சன்ரைசர்ஸ் போட்டியில் முதலில் பேட் செய்த சூர்யவன்ஷி 100 ரன்களை விளாச 357 ரன்களுடன் அவர் ஆரஞ்சு தொப்பியை தன்வசப்படுத்தினார். அந்த போட்டி முடிவதற்குள் சன்ரைசர்ஸ் அணியின் அபிஷேக் சர்மா ஆரஞ்சு தொப்பியை தன்வசப்படுத்தினார். அவர் 29 பந்துகளில் 11 பவுண்டரி 1 சிக்ஸருடன் 57 ரன்கள் எடுத்தார். இதனால், இந்த தொடரில் இதுவரை 380 ரன்கள் விளாசி அதிக ரன் விளாசிய வீரருக்கான ஆரஞ்சு தொப்பியை தன்வசப்படுத்தினார். ஆரஞ்சு தொப்பி: நேற்று ஒரே நாளில் ஆரஞ்சு நிற தொப்பி நான்கு வீரர்கள் வசம் கை மாறியுள்ளது. ஐபிஎல் வரலாற்றிலே இதுபோன்று நிகழ்வது இதுவே முதன்முறை என்று கருதப்படுகிறது. தற்போது வரை அதிக ரன்கள் எடுத்தவர்கள் விவரம்: 1. அபிஷேக் சர்மா - 380 ரன்கள் 2. சூர்யவன்ஷி - 357 ரன்கள் 3. கே.எல்.ராகுல் - 357 ரன்கள் 4. கிளாசென் - 349 ரன்கள் 5. விராட் கோலி - 328 ரன்கள் காத்திருக்கும் ரன்மழை: இந்த தொடரில் தற்போது வரை 36 போட்டிகள் மட்டுமே முடிந்துள்ள நிலையில், இனி வரும் நாட்களில் ஆரஞ்சு நிற தொப்பி அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். இனி வரும் நாட்களிலும் வீரர்கள் அதிகளவு ரன் மழை பொழிவார்கள் என்று கருதப்படுகிறது. ஆரஞ்சு தொப்பியை தன்வசப்படுத்த போட்டி போடும் முதல் 5 வீரர்களில் கிளாசென் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி ஆடி வருகின்றனர். இவர்களில் சூர்யவன்ஷிக்கு 15 வயது மட்டுமே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கிளாசென், கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்கள் ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Sooryavanshi: அடிச்சா செஞ்சுரிதான் அடிப்பேன்! 15 வயதிலே 3வது சதத்தை விளாசிய சூர்யவன்ஷி!
இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


