10 அணிகள் களமாடும் 19-வது ஐ.பி.எல். தொடர் மார்ச் 28-ம் தேதி முதல் கோலாகலாமாக தொடங்கியது. மே 31-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கும் இத்தொடரில், இன்று திங்கள் கிழமை இரவு 7:30 மணிக்கு கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் 12-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, அந்த அணியில் தொடக்க வீரர்களாக ரஹானே மற்றும் பின் ஆலன் ஜோடி களமிறங்கினர். 2-வது ஓவரில் பின் ஆலன் 6 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேமரூன் கிரீனும் 4 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இந்த நிலையில், 3.4 ஓவர்களில் கொல்கத்தா அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்தது. இதனால் கொல்கத்தா -பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பாதிக்கப்பட்டது. ரஹானே 8 ரன்களுடனும், ரகுவன்ஷி 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
