நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🏏 விளையாட்டு
  3. >KL Rahul: அடியா இல்ல இடியா! மிரட்டிவிட்ட ராகுல்... தோனியின் ரெக்கார்ட் முறியடிப்பு
🏏 விளையாட்டு

KL Rahul: அடியா இல்ல இடியா! மிரட்டிவிட்ட ராகுல்... தோனியின் ரெக்கார்ட் முறியடிப்பு

சனி, ஏப்ரல் ௨௫, ௨௦௨௬|20 மணி நேரம் முன்|ஜேம்ஸ்|Abp News
KL Rahul: அடியா இல்ல இடியா! மிரட்டிவிட்ட ராகுல்... தோனியின் ரெக்கார்ட் முறியடிப்பு

ஐபிஎல் 2026 லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் அதிரடி சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணியின் பலமான பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த ராகுல், வெறும் 47 பந்துகளில் தனது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். சிக்ஸர் மழை.. தெறிக்கவிட்ட ராகுல்! ஆட்டத்தின் 15-வது ஓவரில் மார்கோ யான்சன் வீசிய பந்தை நேர்த்தியாக பவுண்டரிக்கு விரட்டியதன் மூலம், ஐபிஎல் தொடரில் தனது 6-வது சதத்தை ராகுல் பூர்த்தி செய்தார். பவர்பிளே ஓவர்களில் ராகுலின் ஸ்டிரைக் ரேட் குறித்து விமர்சித்தவர்களுக்கு, தனது மட்டையாலேயே அவர் பதிலடி கொடுத்துள்ளார். தொழில்நுட்ப ரீதியாகவும், அதிரடியாகவும் ராகுல் ஆடிய விதம் டெல்லி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. Kl Rahul Century Celebration 🥶 #DCvsPBKS pic.twitter.com/1Svt9CWOrW — Cricket IN (@Viha_tweetX) April 25, 2026 தோனியின் சாதனையை முறியடித்த ராகுல்! இந்த அதிரடி இன்னிங்ஸின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில், எம்.எஸ்.தோனியை முந்தினார் ராகுல். இதன் மூலம் அதிக ரன்கள் எடுத்த டாப்-6 வீரர்களின் பட்டியலில் அவர் இணைந்துள்ளார். ராகுல் 12 ரன்களில் இருந்தபோது ஷஷாங்க் சிங் கொடுத்த கேட்ச் வாய்ப்பை நழுவவிட்டார். அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய ராகுல், அர்ஷ்தீப் சிங் மற்றும் மார்கோ யான்சன் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். இதையும் படிங்க: யார்க்கர் கிங்கின் கார் கலெக்‌ஷன்! வெர்னா டூ மேபேக் வரை..பும்ராவின் கேரேஜில் இருக்கும் மிரட்டலான கார்கள்!" ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, இந்த சீசனில் இதுவரை தோல்வியே சந்திக்காமல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அவர்களின் வெற்றி நடைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் ராகுலின் ஆட்டம் அமைந்தது. 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 2 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் குவித்தது, ராகுல் ஆட்டமிழக்காமல் 152 ரன்கள் குவித்தார். இதுமட்டுமில்லாமல் ஐபிஎல் வரலாற்றிலே இந்திய வீரர் ஒருவர் விளாசிய அதிகபட்ச ரன் இதுவே ஆகும். 19 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் ஒரே போட்டியிட்டால் 150 ரன்களை கடந்த முதல் இந்தியரும் இவரே ஆவார்.

இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

பிரெஞ்சு ஓபன் டென்னிசில் இருந்து கார்லஸ் அல்காரஸ் விலகல்
விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் டென்னிசில் இருந்து கார்லஸ் அல்காரஸ் விலகல்

Carlos Alcaraz is out of the French Open after failing to recover from an injury| கார்லஸ் அல்காரஸ் காயத்தில் இருந்து குணமடையாததால் பிரெஞ்சு ஓபன் டென்னிசில் இருந்து விலகி இருக்கிறார். இந்தச் செய்தி Dailythanthi ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்
சென்னையை வென்றது ஜாம்ஷெட்பூா்
விளையாட்டு

சென்னையை வென்றது ஜாம்ஷெட்பூா்

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூா் எஃப்சி 4-1 கோல் கணக்கில் சென்னையின் எஃப்சியை சனிக்கிழமை வென்றது. இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்
சூப்பர் சீனியருக்கு புத்துணர்வு அளித்த 'வாக்கிங்' கால்பந்து
விளையாட்டு

சூப்பர் சீனியருக்கு புத்துணர்வு அளித்த 'வாக்கிங்' கால்பந்து

சென்னை: சென்னை கால்பந்து கிளப் சார்பில், ஷெனாய் நகரில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் விளையாட்டு திடலில், ஆண்கள் இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்