நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >💻 தொழில்நுட்பம்
  3. >இந்த வாரம் வெளியாகும் புதிய டாப் ஸ்மார்ட்போன்கள்: முழு பட்டியல் இங்கே
💻 தொழில்நுட்பம்

இந்த வாரம் வெளியாகும் புதிய டாப் ஸ்மார்ட்போன்கள்: முழு பட்டியல் இங்கே

ஞாயிறு, ஏப்ரல் ௫, ௨௦௨௬|23 மணி நேரம் முன்|vijaya lakshmi|Zee News
இந்த வாரம் வெளியாகும் புதிய டாப் ஸ்மார்ட்போன்கள்: முழு பட்டியல் இங்கே

Upcoming Smartphones This Week : ஏப்ரல் 2026இன் இரண்டாம் வாரம், இந்தியாவில் ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு மிகவும் அற்புதமான வாய்ப்பாக இருக்கப்போகிறது. OnePlus மற்றும் AI+ போன்ற பிராண்டுகள் தங்கள் புதிய போன்களின் மாடல்களை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகின்றன. எனவே ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 11, 2026 வரையில் அறிமுகமாகவுள்ள புதிய ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இங்கே காணலாம்.

இந்தச் செய்தி Zee News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

Zee News இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

ஒளியின் வேகத்தை மிஞ்சிய இருள்... ஐன்ஸ்டீன் விதியை மீறாமல் நிகழ்ந்த அதிசயம்!
தொழில்நுட்பம்

ஒளியின் வேகத்தை மிஞ்சிய இருள்... ஐன்ஸ்டீன் விதியை மீறாமல் நிகழ்ந்த அதிசயம்!

ஒளியின் வேகத்தை விட உலகில் எதுவுமே வேகமாகச் செல்ல முடியாது. இதுதான் ஐன்ஸ்டீன் வகுத்த உலகறிந்த விதி. ஆனால், ஒளியின் அலைகளுக்குள்ளேயே ஒளிந்து கொண்டு, ஒளியையே முந்தும் ஒரு 'இருள் புள்ளி' இருப்பதை விஞ்ஞானிகள் இப்போது நிரூபித்துள்ளனர். இஸ்ரேலின் டெக்னியான் தொழில்நுட்ப நிறுவனம், ஹார்வர்ட் மற்றும் எம்.ஐ.டி விஞ்ஞானிகளுடன் இணைந்து நடத்திய இந்த மெய்சிலிர்க்க வைக்கும் ஆய்வு முடிவுகள் புகழ்பெற்ற 'நேச்சர்' (Nature) இதழில் வெளியாகியுள்ளன. ஒளி அலைகள் ஒன்றையொன்று ரத்து செய்துகொள்ளும் போது அந்த இடத்தில் வெளிச்சம் மறைந்து முழுமையான இருள் உருவாகிறது. இதை விஞ்ஞானிகள் 'ஃபேஸ் சிங்குலாரிட்டிஸ்' (Phase Singularities) என்கிறார்கள். இந்த இருள் புள்ளிகள் ஒளியை விட வேகமாக நகரக்கூடியவை. இவை ஒளியை விட வேகமாகச் சென்றாலும், எந்தத் தகவலையும் அல்லது ஆற்றலையும் கடத்தாததால் இயற்பியல் விதிகளை இவை சிதைப்பதில்லை. இது வெறும் ஒரு 'நிழல் ஆட்டம்' போன்றது. எப்படிப் படம்பிடித்தார்கள்? இந்த இருள் புள்ளிகள் ஒரு நொடியின் பல கோடி கோடியில் ஒரு பங்கான 'ஃபெம்டோசெகண்ட்' (Femtosecond) நேரத்தில் தோன்றி மறையக்கூடியவை. இதைத் துல்லியமாகப் பார்க்க, விஞ்ஞானிகள் ஒரு விசேஷமான எலக்ட்ரான் நுண்ணோக்கியைப் பயன்படுத்தினர். 'ஹெக்சகோனல் போரான் நைட்ரைடு' எனும் ஒரு வகை படிகத்தைப் பயன்படுத்தி, ஒளியின் வேகத்தை 100 மடங்கு குறைத்து, அந்த இருள் புள்ளிகளின் ஓட்டத்தை வெற்றிகரமாகப் படம்பிடித்துள்ளனர். இந்த இருள் புள்ளிகளில் 2 வகைகள் உள்ளன. ஒன்று நேர்மறை (+), மற்றொன்று எதிர்மறை (-). இந்த 2 புள்ளிகளும் ஒன்றையொன்று நோக்கி வரும்போது, அவற்றின் வேகம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு (Infinity) அதிகரிக்கும். இறுதியில் இவை மோதிக் கொள்ளும்போது அப்படியே மறைந்துவிடும். இந்த அசாத்தியமான நிகழ்வை விஞ்ஞானிகள் இப்போது நேரடியாகக் கண்டுள்ளனர். இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
காஷ்மீராக மாறிய தார் பாலைவனம்... ராஜஸ்தானை உரைய வைத்த ஆலங்கட்டி மழை!
தொழில்நுட்பம்

காஷ்மீராக மாறிய தார் பாலைவனம்... ராஜஸ்தானை உரைய வைத்த ஆலங்கட்டி மழை!

மணல் எங்கு பார்த்தாலும் பொன்னிறமாக ஜொலிக்கும் இதுதான் ராஜஸ்தான் தார் பாலைவனத்தின் அடையாளம். ஆனால், கடந்த ஏப்.3 அன்று இந்த அடையாளம் தலைகீழாக மாறியது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை மணலுக்குப் பதில் 'வெள்ளைப்போர்வை' போர்த்தியது போல ஐஸ் கட்டிகள் குவிந்து கிடந்ததைக் கண்டு உள்ளூர் மக்கள் மிரண்டு போயினர். பிகானேர் மாவட்டத்தின் அர்ஜுன்சர் மற்றும் ராஜியாசர் பகுதிகளில் நிகழ்ந்த இந்த அபூர்வ வானிலை மாற்றத்தால், வெப்பம் தடாலடியாகக் குறைந்தது. சாலைகள் அனைத்தும் தடிமனான ஐஸ் கட்டிகளால் மூடப்பட்டதால், பாலைவனப் பிரதேசம் அப்படியே காஷ்மீரின் பனி படர்ந்த பள்ளத்தாக்குகளைப் போலக் காட்சியளித்தது. வனத்துறை அதிகாரி (IFS) பர்வீன் கஸ்வான் பகிர்ந்த இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது பார்ப்பதற்குப் பனிப்பொழிவு (Snowfall) போலத் தெரிந்தாலும், உண்மையில் இது மிகத்தீவிரமான ஆலங்கட்டி மழை (Hailstorm) ஆகும். மத்திய தரைக்கடல் பகுதியில் உருவாகி வரும் குளிர்ந்த காற்று, பாலைவனத்தின் சுட்டெரிக்கும் வெப்பக் காற்றுடன் மோதியதே இதற்குக் காரணம். இந்த மோதலால் உருவான வலுவான காற்றோட்டம், நீர்த்துளிகளை வளிமண்டலத்தின் மிக உயரமான உறைநிலைப் பகுதிக்குத் தள்ளியது. அங்கு அவை சிறு சிறு ஐஸ் பந்துகளாக (ஆலங்கட்டிகள்) மாறி, எடை தாங்க முடியாமல் தரையில் கொட்டித் தீர்த்தன. இந்தக் காட்சி பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், உள்ளூர் விவசாயிகளுக்கு இது பெரும் துயரத்தைத் தந்துவிட்டது. கோதுமை, இசப்கோல் (Isabgol) போன்ற 'ரபி' பருவப் பயிர்களை அறுவடை செய்ய விவசாயிகள் காத்திருந்தனர். பளிங்குக்கல் அளவிலான ஆலங்கட்டிகள் பயிர்களைச் சிதைத்ததில் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குப் பயிர் காப்பீடு மூலம் நிவாரணம் வழங்க நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். ராஜஸ்தானில் ஏப்ரல் மாதத்தில் இவ்வளவு அதிகப்படியான ஆலங்கட்டி மழை பெய்வது மிகவும் அரிதானது. இது மாறிவரும் காலநிலை மாற்றத்தின் அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தகவல்படி, ஜெய்ப்பூர் மற்றும் ஜோத்பூர் பகுதிகளில் ஏப்.7-ம் தேதி வரை இதேபோன்ற சீரற்ற வானிலை நீடிக்கும் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்
மணிக்கு 40,000 கி.மீ வேகம்... நிலவு பயணத்தில் பாதி தூரத்தைக் கடந்த ஆர்டெமிஸ்-2 விண்கலம்!
தொழில்நுட்பம்

மணிக்கு 40,000 கி.மீ வேகம்... நிலவு பயணத்தில் பாதி தூரத்தைக் கடந்த ஆர்டெமிஸ்-2 விண்கலம்!

அரை நூற்றாண்டு கால அமைதிக்குப் பிறகு, நிலவின் தளம் மீண்டும் மனிதக் குரல்களைக் கேட்கத் தயாராகிவிட்டது. சரியாக ஏப்.2-ஆம் தேதி, அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து எஸ்.எல்.எஸ் எனும் பிரமாண்ட ராக்கெட், தீப்பிழம்புகளை கக்கி கொண்டு விண்ணில் சீறிப் பாய்ந்தது. 4 விண்வெளி வீரர்கள் பயணிக்கும் இந்த 'ஓரியன்' விண்கலம், நிலவை நோக்கி நேர்க்கோட்டில் செல்லப் போவதில்லை. மாறாக, நிலவின் ஈர்ப்பு விசையையே ஒரு 'கவண்' போலப் பயன்படுத்தி, நிலவைச் சுற்றி வளைந்து மீண்டும் பூமிக்குத் திரும்பும். இதற்கு 'Free-return trajectory' என்று பெயர். விண்கலத்தைத் திருப்புவதற்குத் தனியாக எரிபொருள் செலவிடத் தேவையில்லை என்பதே இதன் ஸ்பெஷல். நிலவைச் சுற்றும் ஆர்டெமிஸ் 2 விண்கலத்தில் பயணிக்கும் நாசா வீரர்கள், Orientale basin என்ற நிலவின் பிரம்மாண்ட பள்ளத் தாக்கைத் முழுமையாகப் படம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இப்பகுதியை மனிதக் கண்கள் நேரடியாகவும் முழுமையாகவும் காண்பது வரலாற்றிலேயே இதுவே முதல்முறை. 3.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு விண்கல் மோதியதால் உருவான இந்த 965 கி.மீ. அகலம் கொண்ட பள்ளம், நிலவின் மேற்குப் பகுதியின் விளிம்பில் அமைந்துள்ளது. இந்தப் பயணம் நிலவின் மேற்பரப்பிலிருந்து சுமார் 7,600 கி.மீ தொலைவிற்கு அப்பால் வரை செல்லவிருக்கிறது. மனித வரலாற்றிலேயே பூமியிலிருந்து இவ்வளவு தொலைவிற்கு மனிதர்கள் பயணிப்பது இதுவே முதல்முறை. இதுவரை எட்டாத தூரத்தைத் தொட்டு ஆர்டெமிஸ்-II புதிய சாதனை படைக்கப்போகிறது. இந்த 4 பேர் கொண்ட குழுவில் இருப்பவர்கள் சாதாரண வீரர்கள் மட்டுமல்ல, வரலாற்றை மாற்றி எழுதுபவர்கள், விக்டர் குளோவர், ஆழமான விண்வெளிக்குப் பயணிக்கும் முதல் கறுப்பினத்தவர். கிறிஸ்டினா கோச், நிலவை நோக்கிப் பயணிக்கும் முதல் பெண்மணி. ஜெரமி ஹேன்சன், அமெரிக்கர் அல்லாத (கனடா நாட்டைச் சேர்ந்த) முதல் விண்வெளி வீரர். பயணத்தின் முடிவில் பூமிக்குத் திரும்பும்போதுதான் உண்மையான 'த்ரில்' இருக்கிறது. பூமியின் வளிமண்டலத்திற்குள் ஓரியன் விண்கலம் நுழையும்போது அதன் வேகம் மணிக்கு 40,000 கிலோமீட்டர். மனிதர்கள் பயணிக்கும் ஒரு விண்கலம் மேற்கொள்ளும் அதிவேகப் பயணம் இதுதான். இறுதியில் பசிபிக் பெருங்கடலில் பாதுகாப்பாகத் தரையிறங்கும். இந்த ஆர்டெமிஸ்-II நிலவில் தரை இறங்காது; மாறாக, மனிதர்கள் அங்கு தங்குவதற்கான தொழில்நுட்பங்களைச் சோதித்துப் பார்க்கும். இது வெற்றிகரமாக முடிந்தால், அடுத்ததாக 2028-ல் திட்டமிடப்பட்டுள்ள ஆர்டெமிஸ்-III மூலம் மனிதர்கள் நிலவில் கால் பதிப்பார்கள். 2030-க்குள் நிலவில் தடம் பதிக்கத் துடிக்கும் சீனாவுக்கும், 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டத் துடிக்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான இந்த 'விண்வெளிப் போட்டி' இப்போது சூடுபிடித்துள்ளது. இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

16 மணி நேரம் முன்