மதுரை: பழையவர்களின் வாரிசுகள்; அதில் என்ன புதிது இருக்கிறது என திமுக வேட்பாளர்கள் குறித்து நிருபர்கள்
இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
ஏற்றுகிறது...

மதுரை: பழையவர்களின் வாரிசுகள்; அதில் என்ன புதிது இருக்கிறது என திமுக வேட்பாளர்கள் குறித்து நிருபர்கள்
இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

ராணுவத்தில் செவிலியர் உதவியாளர் (தொழில்நுட்பம்) மற்றும் கால்நடை மருத்துவத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து... Indian Army Nursing Assistant job Notification 2026 இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய பட்ஜெட் சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியது. ஏ சீரிசில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட்போன் ஒப்போ ஏ6எஸ் 5ஜி என அழைக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர், டூயல் 50 எம்.பி பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது. இத்துடன் சமீபத்திய பட்ஜெட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை போன்றே புதிய ஒப்போ ஸ்மார்ட்போனிலும் சற்றே அதிக திறன் கொண்ட பேட்டரி யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி ஒப்போ ஏ6எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 7,000 எம்.ஏ.எச் பேட்டரி மற்றும் 80 வாட் சூப்பர் வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. இதில் உள்ள ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனை 1-இல் இருந்து 41 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வெறும் 30 நிமிடங்களையே எடுத்துக் கொள்ளும். ஒப்போ ஏ6எஸ் 5ஜி சிறப்பம்சங்கள் என்ன? 6.75 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 1570x720 பிக்சல் ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 6300 சிப்செட், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, ஆண்ட்ராய்டு சார்ந்த கலர் ஓ.எஸ். 15, பக்கவாட்டில் கைரேகை சென்சார், டூயல் சிம் ஸ்லாட், 50MP பிரைமரி கேமரா, 2MP இரண்டாவது லென்ஸ், 16MP செல்ஃபி கேமரா, 5ஜி, ப்ளூடூத், ஜி.பி.எஸ்., வைபை, யு.எஸ்.பி. டைப் சி போர்ட், 7000mAh பேட்டரி, 80 வாட் சூப்பர் வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளன. புதிய ஒப்போ A6s 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 18,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 20,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான், ப்ளிப்கார்ட், ஒப்போ ஸ்டோர் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் கேப்புசினோ பிரவுன் மற்றும் ஐஸ் வைட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. அறிமுக சலுகையாக ஒப்போ A6s 5ஜி ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ. 1,000 உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இத்துடன் எஸ்.பி.ஐ. கார்டுகள், கோடக் மஹிந்திரா வங்கி, ஐ.டி.எஃப்.சி. ஃபர்ஸ்ட் பேங்க், பி.ஓ.பி. கார்டுகள், யெஸ் வங்கி, ஃபெடரல் வங்கி மற்றும் டி.பி.எஸ். பயன்படுத்தும் போது 3 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

இது ஏதோ திரைப்படத்தின் காட்சியோ அல்லது மொபைல் போன் 'ஃபில்டர்'களோ அல்ல; நிஜமாகவே நடந்த ஒரு அறிவியல் அதிசயம். மேற்கு ஆஸ்திரேலியாவின் வானம் திடீரென அடர் சிவப்பு நிறத்திற்கு மாறிய வீடியோ இணையதளங்களில் தீயாய் பரவி உலகையே அதிர வைத்து உள்ளது. நடந்தது என்ன? விரிவாகப் பார்க்கலாம். மேற்கு ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் பகல் வெளிச்சம் மறைந்து, ஒட்டுமொத்த வான்பரப்பும் ரத்தச் சிவப்பாக மாறியது. கட்டிடங்கள், சாலைகள் மற்றும் சுற்றியுள்ள காற்று என அனைத்தும் சிவப்பு நிறத்தில் காட்சியளித்ததால், அந்த இடமே ஒரு மாயலோகம் போலவும், ஏதோ ஒரு பேரழிவு (Apocalypse) நெருங்குவது போன்றும் மர்மமாகத் தென்பட்டது. சிவப்பு வானம் ஆபத்தானதா? பொதுவாக சிவப்பு நிற வானம் ஆபத்தானது அல்ல. ஆனால், இது காற்றின் தரம் மிகவும் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. காற்றில் அதிகப்படியான தூசு படிந்திருப்பதால் பார்வைத் திறன் (Visibility) குறையும், இது பயணங்களைப் பாதிக்கலாம். மேலும், இது மோசமான வானிலை வரப்போவதற்கான ஒரு முன்னெச்சரிக்கை அறிகுறியாகும். NO, that's not a filter! ☁️🔴 The sky turned an eerie shade of red in Western Australia as dust filled the air ahead of Tropical Cyclone Narelle. pic.twitter.com/dCQ2hjFluI — AccuWeather (@accuweather) March 28, 2026 வானம் சிவப்பாக மாறியதற்குப் பின்னால் ஒரு எளிய அறிவியல் உண்மை உள்ளது. சூரிய ஒளியானது பல்வேறு வண்ண அலைநீளங்களைக் கொண்டது. வளிமண்டலத்தில் உள்ள தூசு துகள்கள், நீல நிறம் போன்ற குறைந்த அலைநீளம் கொண்ட வண்ணங்களைச் சிதறடித்து விட்டு, சிவப்பு மற்றும் ஆரஞ்சு போன்ற நீண்ட அலைநீளம் கொண்ட வண்ணங்களை மட்டும் ஊடுருவ அனுமதிக்கின்றன. காற்றில் தூசு அதிகரிக்க அதிகரிக்க, வானத்தின் சிவப்பு நிறம் இன்னும் அடர்த்தியாகத் தெரியும். 'நரேல்' என்ற சக்திவாய்ந்த புயலும், மணல் புயலும் ஒன்றிணைந்ததே இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம். ஆஸ்திரேலியாவின் வறண்ட நிலப்பகுதியில் உள்ள இரும்புச்சத்து நிறைந்த சிவப்பு மண்ணை பலத்த காற்று வாரிச் சுருட்டி வளிமண்டலத்தில் ஏவியது. இந்தத் துகள்கள் சூரிய ஒளியை வடிகட்டியதால் வானம் ரத்தச் சிவப்பாகக் காட்சியளித்தது. இந்த வீடியோ வைரலானதும், பலரும் இது 'உலக அழிவின் அறிகுறி' என்றும், 'கடவுளின் கோபம்' என்றும் கருத்து தெரிவித்தனர். இன்னும் சிலர் பருவநிலை மாற்றத்தின் விளைவு இது எனக் கூறினர். ஆனால், விஞ்ஞானிகள் இது ஒரு இயற்கையான வானிலை நிகழ்வுதான் என்று தெளிவுபடுத்தினர். இது அரிதான நிகழ்வா? ஆஸ்திரேலியா போன்ற வறண்ட மற்றும் இரும்புச்சத்து நிறைந்த மண் கொண்ட பகுதிகளில் மணல் புயல்கள் சாதாரணமானவைதான். ஆனால், இந்த வீடியோவில் காணப்பட்டதைப் போன்ற அடர்த்தியான சிவப்பு நிறம் மிகவும் அரிதானது. அதன் தீவிரத் தன்மை காரணமாகவே இது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.