சைபீரியாவின் உறைபனிப் பிரதேசத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பனிபடர்ந்த நிலப்பரப்புக்கு நடுவே, பூமியின் இதயம் பிளந்தது போல பிரம்மாண்ட பள்ளம் விரிவடைந்து வருகிறது. பார்ப்பதற்கே அச்சமூட்டும் வகையில் இருக்கும் இந்தப் பள்ளத்தை உள்ளூர் மக்கள் பாதாளத்தின் கதவு என்றழைக்கிறார்கள். ஆனால் இது வெறும் மர்மம் மட்டுமல்ல, பூமியின் கடந்த காலத்தைப் பாதுகாத்து வைத்திருக்கும் 'காலப் பெட்டகம்' பொதுவாக விண்கல் விழுந்தாலோ, எரிமலை வெடித்தாலோ தான் இவ்வளவு பெரிய பள்ளங்கள் உருவாகும். ஆனால், இந்த 'படகைக்கா பள்ளம்' மனிதர்களின் ஒரு சிறிய தவறால் உருவானது. 1960-களில் இங்கு காடுகள் அழிக்கப்பட்டபோது, நிலத்தின் அடியில் இருந்த பனிப்பரப்பைப் பாதுகாத்து வந்த மரங்களின் நிழல் மறைந்தது. நேரடி சூரிய வெப்பத்தால் பல ஆயிரம் ஆண்டுகளாக உறைந்திருந்த நிலம் உருகத் தொடங்கி, தரைப்பரப்பு அப்படியே உள்வாங்க ஆரம்பித்தது. இன்று ஒரு கிலோமீட்டர் நீளம், 100 மீட்டர் ஆழம் (1,640 அடி) என ராட்சத வடிவில் வளர்ந்து நிற்கும் இது தான் உலகின் மிகப்பெரிய 'பனி உருகு பள்ளம்'. இந்தப் பள்ளத்தின் விளிம்புகள் பெரிய காயம் போலக் கோணல் மாணலாகக் காட்சியளிக்கின்றன. குறிப்பாக வெயில் காலங்களில் பனி உருகி மண் சரிந்து விழும்போது, இங்கிருந்து பயங்கரமான வெடிப்புச் சத்தங்கள் மற்றும் முழக்கங்கள் கேட்கும். பூமிக்கு அடியில் ஏதோ நடக்கிறது என உள்ளூர் மக்கள் அஞ்சும் அளவுக்கு இதன் சத்தம் திகிலூட்டும் என்பதால் இதற்கு 'பாதாளத்தின் கதவு' என்று பெயர் வந்தது. இந்தப் பள்ளம் ஆழமாகச் செல்லச் செல்ல, விஞ்ஞானிகளுக்கு அது ஒரு புதையலாக மாறி வருகிறது. உறைந்த மண்ணுக்கு அடியில் இருந்து பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கம்பளி யானைகள் பழங்காலக் குதிரைகள் மற்றும் காட்டெருதுகளின் உடல் பாகங்கள் அப்படியே சிதையாமல் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பூமியில் 6.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு காலநிலை எப்படி இருந்தது என்பதற்கான தகவல்கள் இந்த மண்ணின் அடுக்குகளில் உறைந்து கிடக்கின்றன. பள்ளம் விரிவடைவது வெறும் செய்தி மட்டுமல்ல, அது அபாயச் சங்கு. பனி உருகும்போது அதற்குள் சிறைப்பட்டிருக்கும் பல கோடி டன் 'மீத்தேன்' போன்ற நச்சு வாயுக்கள் வெளியேறுகின்றன. இது புவி வெப்பமடைதலை இன்னும் மோசமாக்குகிறது.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



