நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >💻 தொழில்நுட்பம்
  3. >மனிதக் கண்கள் காணாத நிலவின் மர்மமான மறுபக்கம்... முதல்முறையாக படம்பிடித்து நாசா சாதனை!
💻 தொழில்நுட்பம்

மனிதக் கண்கள் காணாத நிலவின் மர்மமான மறுபக்கம்... முதல்முறையாக படம்பிடித்து நாசா சாதனை!

ஞாயிறு, ஏப்ரல் ௫, ௨௦௨௬|18 மணி நேரம் முன்|meenakshi sundaram s|The Indian Express
மனிதக் கண்கள் காணாத நிலவின் மர்மமான மறுபக்கம்... முதல்முறையாக படம்பிடித்து நாசா சாதனை!

அரை நூற்றாண்டிற்குப் பிறகு நிலவை நோக்கி மனிதர்கள் சென்றுள்ள ஆர்டெமிஸ் II விண்கலப் பயணம், தற்போது உலகையே உற்று நோக்க வைத்துள்ளது. ஒருபுறம் பிரம்மாண்ட சாதனைகளை நிகழ்த்தி வரும் இந்த விண்கலத்தில், மறுபுறம் வீரர்களுக்கு ஒரு சிறிய 'தர்மசங்கடமான' சிக்கலும் ஏற்பட்டுள்ளது. அது என்ன? விரிவாகப் பார்ப்போம். 1972-ல் அப்பல்லோ 17 விண்கலத்திற்குப் பிறகு, நிலவைச் சுற்றி வர மனிதர்கள் சென்றிருப்பது இதுவே முதல் முறை. இந்த வரலாற்றுப் பயணத்தில் 3 அமெரிக்கர்களும் ஒரு கனடியரும் பயணித்து வருகின்றனர். இதில் சிறப்பம்சமாக, நிலவுக்குச் செல்லும் முதல் பெண்மணி என்ற பெருமையை கிறிஸ்டினா கோச்சும், முதல் கறுப்பின விண்வெளி வீரர் என்ற பெருமையை விக்டர் குளோவரும் பெறுகின்றனர். இவர்களுடன் ரீட் வைஸ்மேன் மற்றும் ஜெர்மி ஹேன்சன் ஆகியோரும் நிலவின் மர்மங்களை ஆராயப் புறப்பட்டுள்ளனர். History in the making In this new image from our @NASAArtemis II crew, you can see Orientale basin on the right edge of the lunar disk. This mission marks the first time the entire basin has been seen with human eyes. pic.twitter.com/iqjod6gqgz — NASA (@NASA) April 5, 2026 பூமியிலிருந்து சுமார் 4 லட்சம் கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து, அப்பல்லோ 13 விண்கலத்தின் சாதனையை முறியடித்துப் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது ஓரியன் விண்கலம். இந்த பயணத்தின்போது, நிலவின் விளிம்பில் அமைந்துள்ள 'ஓரியண்டல் பேசின்' என்ற பிரம்மாண்ட பள்ளத் தாக்கை வீரர்கள் படம் பிடித்துள்ளனர். நிலவின் இந்தப் பகுதியை மனிதக் கண்கள் இவ்வளவு முழுமையாகப் பார்ப்பது வரலாற்றிலேயே இது தான் முதல் முறை என நாசா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. விண்கலம் வெற்றிகரமாகப் பயணித்துக் கொண்டிருந்தாலும், இடையில் ஒரு வினோதமான சிக்கல் எழுந்தது. விண்கலத்தில் உள்ள கழிப்பறை திடீரெனச் சரியாகச் செயல்படவில்லை. கழிப்பறை அமைப்பில் பனிக்கட்டிகள் அடைத்துக் கொண்டிருக்கலாம் எனப் பொறியாளர்கள் சந்தேகிக்கின்றனர். கழிப்பறை முழுமையாகச் சரிசெய்யப்படும் வரை, திரவக் கழிவுகளை (சிறுநீர்) வெளியேற்ற மாற்று ஏற்பாடாக 'யூரினை சேகரிக்கும் பைகளை' பயன்படுத்துமாறு நாசா கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தியுள்ளது. இந்தச் சிக்கல் இருந்தாலும் விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாகவும், உற்சாகமாகவும் உள்ளனர்; மிஷனுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை" எனத் திட்ட மேலாளர் ஜான் ஹனிகட் தெரிவித்துள்ளார். இந்த 10 நாள் பயணம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி பசிபிக் பெருங்கடலில் விண்கலம் வந்து இறங்குவதுடன் நிறைவடையும். இது வெறும் ஆரம்பம் தான். 2028-ஆம் ஆண்டு நிலவின் தென்துருவத்தில் மனிதர்களைத் தரை இறக்கி, அங்கு மனிதக் குடியிருப்புகளை அமைப்பதற்கான நாசாவின் நீண்ட காலத் திட்டத்தின் மிக முக்கியமான முதல் படிதான் இந்த ஆர்டெமிஸ் II மிஷன்.

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

The Indian Express இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

பாதியில் விடப்பட்ட வடிகால்வாய் பணி
தொழில்நுட்பம்

பாதியில் விடப்பட்ட வடிகால்வாய் பணி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் செவிலிமேடு சுசீலா சாலையில், பாதியில் விடப்பட்ட கான்கிரீட் மழைநீர் வடிகால்வாய் இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்
ஒளியின் வேகத்தை மிஞ்சிய இருள்... ஐன்ஸ்டீன் விதியை மீறாமல் நிகழ்ந்த அதிசயம்!
தொழில்நுட்பம்

ஒளியின் வேகத்தை மிஞ்சிய இருள்... ஐன்ஸ்டீன் விதியை மீறாமல் நிகழ்ந்த அதிசயம்!

ஒளியின் வேகத்தை விட உலகில் எதுவுமே வேகமாகச் செல்ல முடியாது. இதுதான் ஐன்ஸ்டீன் வகுத்த உலகறிந்த விதி. ஆனால், ஒளியின் அலைகளுக்குள்ளேயே ஒளிந்து கொண்டு, ஒளியையே முந்தும் ஒரு 'இருள் புள்ளி' இருப்பதை விஞ்ஞானிகள் இப்போது நிரூபித்துள்ளனர். இஸ்ரேலின் டெக்னியான் தொழில்நுட்ப நிறுவனம், ஹார்வர்ட் மற்றும் எம்.ஐ.டி விஞ்ஞானிகளுடன் இணைந்து நடத்திய இந்த மெய்சிலிர்க்க வைக்கும் ஆய்வு முடிவுகள் புகழ்பெற்ற 'நேச்சர்' (Nature) இதழில் வெளியாகியுள்ளன. ஒளி அலைகள் ஒன்றையொன்று ரத்து செய்துகொள்ளும் போது அந்த இடத்தில் வெளிச்சம் மறைந்து முழுமையான இருள் உருவாகிறது. இதை விஞ்ஞானிகள் 'ஃபேஸ் சிங்குலாரிட்டிஸ்' (Phase Singularities) என்கிறார்கள். இந்த இருள் புள்ளிகள் ஒளியை விட வேகமாக நகரக்கூடியவை. இவை ஒளியை விட வேகமாகச் சென்றாலும், எந்தத் தகவலையும் அல்லது ஆற்றலையும் கடத்தாததால் இயற்பியல் விதிகளை இவை சிதைப்பதில்லை. இது வெறும் ஒரு 'நிழல் ஆட்டம்' போன்றது. எப்படிப் படம்பிடித்தார்கள்? இந்த இருள் புள்ளிகள் ஒரு நொடியின் பல கோடி கோடியில் ஒரு பங்கான 'ஃபெம்டோசெகண்ட்' (Femtosecond) நேரத்தில் தோன்றி மறையக்கூடியவை. இதைத் துல்லியமாகப் பார்க்க, விஞ்ஞானிகள் ஒரு விசேஷமான எலக்ட்ரான் நுண்ணோக்கியைப் பயன்படுத்தினர். 'ஹெக்சகோனல் போரான் நைட்ரைடு' எனும் ஒரு வகை படிகத்தைப் பயன்படுத்தி, ஒளியின் வேகத்தை 100 மடங்கு குறைத்து, அந்த இருள் புள்ளிகளின் ஓட்டத்தை வெற்றிகரமாகப் படம்பிடித்துள்ளனர். இந்த இருள் புள்ளிகளில் 2 வகைகள் உள்ளன. ஒன்று நேர்மறை (+), மற்றொன்று எதிர்மறை (-). இந்த 2 புள்ளிகளும் ஒன்றையொன்று நோக்கி வரும்போது, அவற்றின் வேகம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு (Infinity) அதிகரிக்கும். இறுதியில் இவை மோதிக் கொள்ளும்போது அப்படியே மறைந்துவிடும். இந்த அசாத்தியமான நிகழ்வை விஞ்ஞானிகள் இப்போது நேரடியாகக் கண்டுள்ளனர். இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
காஷ்மீராக மாறிய தார் பாலைவனம்... ராஜஸ்தானை உரைய வைத்த ஆலங்கட்டி மழை!
தொழில்நுட்பம்

காஷ்மீராக மாறிய தார் பாலைவனம்... ராஜஸ்தானை உரைய வைத்த ஆலங்கட்டி மழை!

மணல் எங்கு பார்த்தாலும் பொன்னிறமாக ஜொலிக்கும் இதுதான் ராஜஸ்தான் தார் பாலைவனத்தின் அடையாளம். ஆனால், கடந்த ஏப்.3 அன்று இந்த அடையாளம் தலைகீழாக மாறியது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை மணலுக்குப் பதில் 'வெள்ளைப்போர்வை' போர்த்தியது போல ஐஸ் கட்டிகள் குவிந்து கிடந்ததைக் கண்டு உள்ளூர் மக்கள் மிரண்டு போயினர். பிகானேர் மாவட்டத்தின் அர்ஜுன்சர் மற்றும் ராஜியாசர் பகுதிகளில் நிகழ்ந்த இந்த அபூர்வ வானிலை மாற்றத்தால், வெப்பம் தடாலடியாகக் குறைந்தது. சாலைகள் அனைத்தும் தடிமனான ஐஸ் கட்டிகளால் மூடப்பட்டதால், பாலைவனப் பிரதேசம் அப்படியே காஷ்மீரின் பனி படர்ந்த பள்ளத்தாக்குகளைப் போலக் காட்சியளித்தது. வனத்துறை அதிகாரி (IFS) பர்வீன் கஸ்வான் பகிர்ந்த இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது பார்ப்பதற்குப் பனிப்பொழிவு (Snowfall) போலத் தெரிந்தாலும், உண்மையில் இது மிகத்தீவிரமான ஆலங்கட்டி மழை (Hailstorm) ஆகும். மத்திய தரைக்கடல் பகுதியில் உருவாகி வரும் குளிர்ந்த காற்று, பாலைவனத்தின் சுட்டெரிக்கும் வெப்பக் காற்றுடன் மோதியதே இதற்குக் காரணம். இந்த மோதலால் உருவான வலுவான காற்றோட்டம், நீர்த்துளிகளை வளிமண்டலத்தின் மிக உயரமான உறைநிலைப் பகுதிக்குத் தள்ளியது. அங்கு அவை சிறு சிறு ஐஸ் பந்துகளாக (ஆலங்கட்டிகள்) மாறி, எடை தாங்க முடியாமல் தரையில் கொட்டித் தீர்த்தன. இந்தக் காட்சி பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், உள்ளூர் விவசாயிகளுக்கு இது பெரும் துயரத்தைத் தந்துவிட்டது. கோதுமை, இசப்கோல் (Isabgol) போன்ற 'ரபி' பருவப் பயிர்களை அறுவடை செய்ய விவசாயிகள் காத்திருந்தனர். பளிங்குக்கல் அளவிலான ஆலங்கட்டிகள் பயிர்களைச் சிதைத்ததில் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குப் பயிர் காப்பீடு மூலம் நிவாரணம் வழங்க நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். ராஜஸ்தானில் ஏப்ரல் மாதத்தில் இவ்வளவு அதிகப்படியான ஆலங்கட்டி மழை பெய்வது மிகவும் அரிதானது. இது மாறிவரும் காலநிலை மாற்றத்தின் அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தகவல்படி, ஜெய்ப்பூர் மற்றும் ஜோத்பூர் பகுதிகளில் ஏப்.7-ம் தேதி வரை இதேபோன்ற சீரற்ற வானிலை நீடிக்கும் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்