நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >💻 தொழில்நுட்பம்
  3. >விண்வெளியில் ஒரு வைரக் குவியல்... பால்வெளி மண்டலத்தைப் படம்பிடித்து ஆர்டெமிஸ் II வீரர்கள் சாதனை
💻 தொழில்நுட்பம்

விண்வெளியில் ஒரு வைரக் குவியல்... பால்வெளி மண்டலத்தைப் படம்பிடித்து ஆர்டெமிஸ் II வீரர்கள் சாதனை

புதன், ஏப்ரல் ௮, ௨௦௨௬|18 மணி நேரம் முன்|meenakshi sundaram s|The Indian Express
விண்வெளியில் ஒரு வைரக் குவியல்... பால்வெளி மண்டலத்தைப் படம்பிடித்து ஆர்டெமிஸ் II வீரர்கள் சாதனை

பூமியின் வளிமண்டலத் தடைகளோ அல்லது ஒளி மாசுகளோ (Light pollution) இல்லாத ஓரியன் விண்கலத்தில் இருந்து, பால்வெளி மண்டலத்தை வீரர்கள் இதுவரை கண்டிராத வகையில் படம்பிடித்துள்ளனர். கறுப்பு நிறப் பிரபஞ்சத்தில் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் மின்னும் வைரக் கற்களைப் போல ஒரு பிரமாண்டமான ஓவியமாக இந்தப் புகைப்படத்தில் காட்சியளிக்கின்றன. எல்லையற்ற, துடிப்பான மற்றும் மர்மங்கள் நிறைந்த பால்வெளியின் அழகை இந்தப் படம் அப்படியே பிரதிபலிக்கிறது. ஆர்டெமிஸ் II திட்டத்தின் கீழ் பயணிக்கும் 4 விண்வெளி வீரர்கள், ஓரியன் விண்கலத்திலிருந்து தங்கள் கேமராக்களை விண்மீன்களை நோக்கித் திருப்பி இந்தப் புகைப்படத்தை எடுத்துள்ளனர். மனிதனின் தேடல் ஆர்வம் மற்றும் விண்வெளி ஆய்வின் அடையாளமாக இந்தப் புகைப்படங்கள் போற்றப்படுகின்றன. Sky full of stars. Following a successful lunar flyby, the Artemis II astronauts captured this breathtaking photo of our galaxy, the Milky Way, on April 7, 2026. pic.twitter.com/pzqcLZNB71 — NASA (@NASA) April 8, 2026 இந்த எல்லையற்ற விண்வெளியில் பூமி என்பது மிகச்சிறிய, மென்மையான நீல நிறப் பளிங்கு உருண்டை போன்றது. வெண்ணிற மேகங்கள் சூழ்ந்த நமது கடல்கள் இந்த பிரம்மாண்ட பால்வெளி மண்டலத்தின் ஒரு சிறு பகுதியே. இவ்வளவு தொலைவிலிருந்து பால்வெளியைப் பார்க்கும் போது, நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதையும், அதே சமயம் இந்த பிரபஞ்சத்தோடு நாம் எவ்வளவு நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளோம் என்பதையும் உணர முடிகிறது. இந்தப் பேரண்டத்தின் அழகைக் கண்ட விண்வெளி வீரர்கள் வியப்பில் உறைந்தனர். மூச்சடைக்க வைக்கும் காட்சி என்றும், தங்களை மிகவும் சிறியவர்களாக உணர வைக்கும் அனுபவம் என்றும் அவர்கள் விவரித்துள்ளனர். விண்வெளியின் இந்த பிரம்மாண்டம், பிரபஞ்சத்தில் நமது இடம் எது என்பது குறித்தும், விண்வெளி ஆய்வின் அவசியம் குறித்தும் தங்களைச் சிந்திக்க வைத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆர்டெமிஸ் II விண்கலம் நிலவைச் சுற்றி வர 10 நாட்கள் பயணத்தைத் திட்டமிட்டுள்ளது. நிலவின் நிலப்பரப்பு, சூரிய கிரகணம், பூமியின் உதயம் மற்றும் தற்போது வெளியாகியுள்ள மறக்க முடியாத பால்வெளிப் புகைப்படம் எனப் பல வரலாற்றுச் சாதனைகளை இந்தப் பயணம் பதிவு செய்துள்ளது. இந்த விண்வெளி வீரர்கள் இம்மாத இறுதியில் பாதுகாப்பாகப் பூமிக்குத் திரும்புவார்கள்.

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

The Indian Express இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

தொழில்நுட்பம்
தொழில்நுட்பம்

காஞ்சி கால்நடை மருத்துவமனைக்கு நிரந்தர மருத்துவரை நியமிக்க கோரிக்கை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கால்நடை பெரு மருத்துவமனைக்கு, நிரந்தர மருத்துவரை நியமிக்க வேண்டும் என, கால்நடை இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
குப்பையில் எறியப்படும் மரக்கழிவுகள் இனி 'தங்கம்'... விஞ்ஞானிகளின் புதிய மின்-வேதியியல் புரட்சி!
தொழில்நுட்பம்

குப்பையில் எறியப்படும் மரக்கழிவுகள் இனி 'தங்கம்'... விஞ்ஞானிகளின் புதிய மின்-வேதியியல் புரட்சி!

மரக்கட்டைகள் ஏன் இவ்வளவு உறுதியாக இருக்கின்றன என்று யோசித்திருக்கிறீர்களா? அதற்கு 'லிக்னின்' (Lignin) என்ற ஒரு கடினமான கரிமப் பொருள்தான் காரணம். மரத்தின் எடையில் 25% வரை இருக்கும் இந்த லிக்னின், இதுவரை தொழிற்சாலைகளில் எரிக்கப்படும் அல்லது தூக்கி எறியப்படும் ஒரு கழிவாகவே இருந்து வந்தது. காரணம், இதைப் பிரித்து எடுப்பது அவ்வளவு எளிதல்ல. இதுவரை லிக்னினை உடைக்க அதிக வெப்பமும், ராட்சத அழுத்தமும், புதைபடிவ எரிபொருட்களும் தேவைப்பட்டன. ஆனால், தென் கொரிய விஞ்ஞானிகள் இப்போது ஒரு 'அறிவியல் மேஜிக்' செய்துள்ளனர். எந்த எரிபொருளும் இல்லாமல், வெறும் மின்சாரத்தைப் (Electricity) பயன்படுத்தி லிக்னினை உடைக்கும் வித்தையை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வின் வெற்றிக்குக் காரணம் Pd/C எனும் ஒரு சிறப்பு வினையூக்கி. இது டபுள் ஏஜென்ட் போல செயல்படுகிறது. லிக்னினின் இரும்பு போன்ற பிணைப்புகளை அணுஅணுவாக உடைக்கிறது. உடைந்த துண்டுகளை பயனுள்ள எரிபொருட்களாகவும் (Cyclohexanol), வேதிப்பொருட்களாகவும் மாற்றுகிறது. இதில் அதிசயம் என்னவென்றால், இதற்குத் தேவையான ஹைட்ரஜனை வெளியிலிருந்து வாங்காமல், நீரிலிருந்து மின்சாரத்தின் மூலம் வினையூக்கியின் மேற்பரப்பிலேயே விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். மிகக் கடினமான பிணைப்புகளைக் கூட வெறும் 90 நிமிடங்களில் இந்தத் தொழில்நுட்பம் சிதைத்துவிட்டது. சில பிணைப்புகள் வெறும் 30°C (சாதாரண அறை வெப்பநிலை) அளவிலேயே முழுமையாக உடைந்தன. இந்தத் தொழில்நுட்பத்தைச் சுத்தமாக 5 முறை பயன்படுத்தினாலும் அதன் வீரியம் குறையவில்லை. வெறும் சோதனை குழாயோடு நிறுத்தாமல் பிர்ச் வகை மரக்கட்டைகளில் விஞ்ஞானிகள் இதனை சோதித்தனர். ஆரம்பத்தில் 5% மட்டுமே வெற்றி கிடைத்த நிலையில், சில மாற்றங்களுக்குப் பிறகு அது 19.6% ஆக உயர்ந்தது. அதாவது, மரக்கழிவுகளில் இருந்து 20% உயர்தர வேதிப்பொருட்களை இப்போது எடுக்க முடியும். இந்தக் கண்டுபிடிப்பு வெறும் அறிவியல் மட்டுமல்ல; இது பொருளாதாரப் புரட்சி. பெட்ரோலியப் பொருட்களுக்குப் பதிலாக, மரக்கழிவுகளில் இருந்து தூய்மையான முறையில் எரிபொருட்களையும், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களுக்குத் தேவையான மூலப்பொருட்களையும் தயாரிக்க இது வழிவகுக்கும். குப்பையாகப் போன மரம், இனி மின்சாரத்தின் உதவியால் 'மலிவான மூலப்பொருளாக' மாறப்போகிறது. இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
'கூகுள் பே செயலி' பணம் திருட்டு ? சோசியல் மீடியாவில் பரவும் ஆடியோ, மக்கள் அச்சம்
தொழில்நுட்பம்

'கூகுள் பே செயலி' பணம் திருட்டு ? சோசியல் மீடியாவில் பரவும் ஆடியோ, மக்கள் அச்சம்

சமூக வலைதளங்களில் குறிப்பாக வாட்ஸ்அப் செயலியில், 'கூகுள் பே (GPay) செயலியில் உள்ள இதய வடிவிலான கைகுலுக்கும் சின்னத்தைத் தொட்டால் வங்கிப் பணம் திருடப்படும்' எனப் பரவி வரும் ஆடியோ முற்றிலும் வதந்தி எனத் தெரியவந்துள்ளது. இந்தச் செய்தி Kumudam ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்