topஸ்டாலினை புகழ்ந்து பேசும் ரஜினிகாந்த் வீடியோ; பிரசாரத்தில் பயன்படுத்தும் தி.மு.க
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அரசியல் பண்பு, ஒழுக்கம் மற்றும் ஆளுமை குறித்து மெகா ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு நிகழ்ச்சியில் நெகிழ்ந்து பேசிய வீடியோவை, தி.மு.க தேர்தல் பிரசார விளம்பரமாக யூடியூப் மற்றும் ஓ.டி.டி தளங்களில் வெளியிட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி கனியைப் பறிக்க ஐந்து முனைப் போட்டிகள் நிலவி வரும் சூழலில், சமூக ஊடகப் பிரச்சாரத்தில் தி.மு.க ஒரு படி மேலே சென்றுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அரசியல் பண்பு, ஒழுக்கம் மற்றும் ஆளுமை குறித்து மெகா ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு நிகழ்ச்சியில் நெகிழ்ந்து பேசிய வீடியோவை, தி.மு.க தேர்தல் பிரசார விளம்பரமாக யூடியூப் மற்றும் ஓ.டி.டி தளங்களில் வெளியிட்டுள்ளது. த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திமுகவின் இந்த 'ரஜினி அஸ்திரம்' தேர்தல் களத்தில் பெரும் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, கோடை வெயிலைக் காட்டிலும் தேர்தல் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது. இந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி, அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜயின் த.வெ.க, ராமதாஸ் - சசிகலா கூட்டணி என போட்டி ஐந்து முனையாக அமைந்துள்ளது. சமூக ஊடகங்களின் காலத்தில், இந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் களத்தில் எப்படி வியூகம் வகுத்து பிரசாரம் செய்கிறார்களோ அதே போல சமூக ஊடகக்களிலும் வாக்காளர்களைக் கவரும் வண்ணம் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைப் பற்றி ஒரு நிகழ்ச்சியில் பேசியைதை சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக தி.மு.க பயன்படுத்தியிருப்பது கவனம் பெற்றுள்ளது. அந்த வீடியோவில், நடிகர் ரஜினிகாந்த் பேசியிருப்பதாவது: “அரசனை ஏறுவதற்கு அவசரப்படாமல் கட்சியில் ஒரு தொண்டராக இளைஞரணி தலைவனா, ஒரு எம்.எல்.ஏ-வாக, ஒரு மேயராக, துணை முதலமைச்சராக பணியாற்றி அதற்கு பிறகு மக்களுடைய பேராதரவுடன் அரசனை ஏறியவர். மாற்றான் தோட்டத்து மல்லிக்கைக்கும் மணம் உண்டு என்பதற்கு அவருடைய சித்தாந்தத்திற்கு எதிராக இருக்கிறவர்கள், விமர்க்கிறவர்கள்கூட அவரை மதிக்கிறார்கள். அதற்கு சமீபத்திய உதாரணம், பா.ஜ.க-வைச் சேர்ந்த எச்.ராஜா, இவர் ஸ்டாலினை எப்படியெல்லாம் விமர்சித்தார் என்று எல்லாருக்கும் தெரியும். அப்படி இருந்தும்கூட அவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கும்போது மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார். இதெல்லாம் ஒரு தலைவனுக்கான பண்பு, ஒரு கண்ணியமான குணங்கள் அவரிடம் இருக்கிறது. நட்புக்கு எப்போதுமே மரியாதைக் கொடுப்பவர். நண்பர்களை மிகவும் மதிக்கிறவர். எனக்கு அவரிடம் ரொம்ப பிடித்தது அவருடைய டிசிப்ளின், அதற்கு மேல் அவருடைய ஆட்டிடியூட், அது ரொம்ப முக்கியம். டிசிப்ளினை விட ஆட்டிடியூட் ரொம்ப முக்கியம். அதுவும் பொது வாழ்க்கையில் இருக்கும்போது ரொம்ப முக்கியம். ஒரு வசீகரமான புன்னகைக்கு சொந்தக்காரர்.” என்று ரஜினிகாந்த் பேசியுள்ளார். சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் ஸ்டாலினைப் பற்றி பேசிய வீடியோவை யூடியூப், ஓ.டி.டி தளங்களில் விளம்பரமாகவும் வெளியிட்டுள்ளனர். தி.மு.க-வின் இந்த பிரசார உத்தி ரஜினி ரசிகர்களை கவரும் விதமாக அமைந்துள்ளது. அண்மையில், த.வெ.க தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ரஜினிகாந்த் அரசியலுக்கு வர முயன்றபோது தி.மு.க மிரட்டியது என்றும் ஆனால் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார் என்று பேசினார். இதனால் ரஜினி ரசிகர்கள் ஆதவ் அர்ஜுனாவுக்கு கண்டனங்களைத் தெரிவித்தனர். இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த், த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும் என்று கூறி வீடியோ வெளியிட்டார். இந்த சூழலில், நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் ஸ்டாலினைப் பற்றி பேசிய வீடியோவை சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக தி.மு.க பயன்படுத்தியிருப்பது தமிழக அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.