தஞ்சாவூர்: குடிநீர் பிரச்சனை எதுவுமே இல்லாத தஞ்சாவூரை உருவாக்கியிருக்கிய உங்கள் வீட்டு பிள்ளையான என்னை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிப் பெற செய்யுங்கள் என்று தஞ்சை தொகுதி மக்களிடம் தி.மு.க வேட்பாளர் சண். ராமநாதன் வாக்குகள் சேகரித்தார். வரும் 23ம் தேதி தமிழக சட்டமன்றம் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து வேட்பாளர்கள் தங்கள் பிரச்சாரங்களை தீவிர்படுத்தி உள்ளனர். தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் சண் ராமநாதன் தொகுதி முழுவதும் வலம் வந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சண்.ராமநாதன் முதன்முதலாக சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக களம் இறங்கி உள்ளார். இதனால் அவர் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்று வருகின்றனர். இந்நிலையில் வேட்பாளர் சண் .ராமநாதன் உழவர் சந்தை, மீன்மார்க்கெட் பகுதிக்கு சென்று விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார். அருகில் இருந்த டீக்கடையில் அனைவருக்கும் டீ தயார் செய்து கொடுத்து ஆதரவு கேட்டு பிரச்சாரம் செய்தார். பின்னர் விளையாட்டு மைதானத்தில் டென்னிஸ் விளையாடி வாக்கு சேகரித்தார். விளையாட்டு வீரர்கள் வைத்த சில கோரிக்கைகளை தான் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற பிறகு நிறைவேற்றித் தருவதாக உறுதி கூறினார். பின்னர் தொடர்ந்து தஞ்சாவூர் ரயில் நிலையம் முன்பு ரயில் பயணிகளிடம் ஆதரவு திரட்டினார். அப்போது வேட்பாளர் சண் ராமநாதன் பேசும்போது, தஞ்சை மாநகரில் நாம் மேயராக பணியாற்றிய போது பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். குடிநீர் பிரச்சனை எதுவுமே இல்லாத தஞ்சாவூரை உருவாக்கியிருக்கிறோம். இன்னும் 20,30 ஆண்டுகளுக்கு தஞ்சாவூரில் குடிநீர் பிரச்சனை என்ற பேச்சுக்கு இடம் இல்லாத நிலையை எட்டி உள்ளோம். அதேபோன்று தஞ்சை சட்டமன்ற தொகுதி முழுவதும் எங்கேயும் குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடம் இல்லாத வகையில் தூய்மையான குடிநீர் வழங்கப்படும். முன்னாள் முதல்வர் கலைஞர் திறந்து வைத்த உழவர் சந்தை தற்போதும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கலைஞரின் உன்னதமான திட்டங்களில் இதுவும் ஒன்று. விவசாயிகளின் நலனை பேணிக் காக்கும் வகையில் நேரடியாக அவர்களே காய்கறிகளை விளைவித்து வியாபாரம் செய்து வருவாய் ஈட்டும் வகையில் உருவாக்கப்பட்டது தான் உழவர் சந்தை. இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் கலைஞர் இத் திட்டத்தை கொண்டு வந்தார். தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த அனைத்து திட்டமும் மிகச் சிறப்பாக உள்ளதாக தெரிவித்தனர். தஞ்சாவூரில் மின்விளக்காக இருக்கட்டும், குப்பை அள்ளுவதாக இருக்கட்டும் அனைத்தும் மிகச் சிறப்பாக இருக்கின்ற காரணத்தினால் மக்களை தேடி நாங்கள் செல்லும்போது உங்களுக்குத்தான் இந்த முறை ஓட்டு போடப்போகிறோம் என உறுதி கூறுகின்றனர். காரணம் அந்த அளவுக்கு தஞ்சாவூரில் நலத்திட்டங்கள் செய்து சிறப்பாக பணியாற்றி உள்ளீர்கள். இந்திய அளவில் முதலிடத்தை பிடிச்சு வெற்றி பெற்றீங்க. அதனால உங்களுக்குத்தான் இந்த முறை உதயசூரியனுக்குத் தான் ஓட்டு. 2வது முறை தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின்தான் வருவார் என்று நம்மிடம் உறுதியாக கூறுகிறார்கள். தஞ்சாவூரில் டைட்டல் பார்க், போக்குவரத்து நெரிசலை போக்கும் ஹைட்ராலிக் கார் பார்க்கிங், புனரமைக்கப்பட்ட ராஜப்பா பூங்கா, மக்கள் தேடி மருத்துவம், சிவகங்கை பூங்கா, ரவுண்டாக்கள் சீரமைப்பு, முழுமையான சாலைப்பணிகள், குப்பைககள் அகற்றம் என நிறைய விஷயங்களை சிறப்பாக செய்துள்ளோம். முதல்வரிடம் மீண்டும் நாங்கள் கேட்டபோது பெரிய டைட்டல் பார்க் தஞ்சாவூருக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளார். புற்றுநோய் மருத்துவமனை மிகப்பெரிய அளவுல கட்டி தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இப்படி பல திட்டங்கள் வர உள்ளது. இப்போது தஞ்சாவூர் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது. தொடர்ந்து மீண்டும் அமைய உள்ள திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இன்னும் ஏராளமான வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே நல்லாட்சி தொடர உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள். உங்களின் அனைத்து கோரிக்கைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றி தருவேன் என்றார் . பின்னர் மாலை தஞ்சை கோட்டை பகுதியான 13,26,27 ஆகிய வார்டுகளில் வேட்பாளர் சண் ராமநாதன் பிரச்சாரத்தை தொடங்கினார். சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான கூட்டணி கட்சியினர் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டனர்.
நான் உங்கள் வீட்டு பிள்ளை.. சாதனை பட்டியலை கூறி வாக்குகள் சேகரித்த திமுக வேட்பாளர் சண்.ராமநாதன்


