மனிதர்களை கொல்வது இலக்கல்ல.. .பொருட்சேதமே டார்க்கெட் - சிக்கிய குண்டு மிரட்டல் கடிதம்.... | தமிழ் செய்தி - TamilSeithi.com
மனிதர்களை கொல்வது இலக்கல்ல.. .பொருட்சேதமே டார்க்கெட் - சிக்கிய குண்டு மிரட்டல் கடிதம்....
|16 மணி நேரம் முன்|பிரகாஷ்|Abp News
கோவை துடியலூரில் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சல் வந்துள்ளது. அதில் பல்வேறு அமைப்புகள் பெயரில் பல்வேறு காரணங்களை வலியுறுத்தி 13 குண்டுகள் வெடிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த கடிதத்தில், தமிழ்நாடு அரசுக்கு எதிராக போர் பிரகடனம் செய்துள்ளோம் என்றோம் எங்கள் தலைவரின் அதிரத்தையும் அடையாளமாக மார்ச் 31 முதல் தொடங்கும் சட்டபூர்வமாக மற்றதாக்கும் வாரத்தை நேரடி நடவடிக்கை வாரமாக அறிவித்துள்ளோம் எனவே ஆர்டிஓ அலுவலகத்தில் இருந்து அனைவரையும் வெளியேற்றுங்கள் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கோவை வெடிகுண்டு நிபுணர்கள் வெடிகுண்டு சோதனை செய்யும் கருவிகளைக் கொண்டு சோதனையில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரமாக நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்காததால் இது வெறும் புரளி என தெரியவந்துள்ளது. மேலும், இதேபோல் கோவையில் உள்ள பல்வேறு ஆர்டிஓ அலுவலகங்களுக்கும் மிரட்டல் கடிதங்களை வந்துள்ளது தெரியவந்துள்ளது.வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்ததையடுத்து அங்கிருந்தவர்கள் நிம்மதியடைந்தனர். மின்னஞ்சல் கடிதம் அனுப்பியது யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
Jana Nayagan: Reports have emerged that 'Jana nayagan'—the highly anticipated film starring actor and Tamilaga Vettri Kazhagam leader Vijay—is set to be released soon. Having faced censorship and legal hurdles over the past few months, the film is now expected to hit theaters during the last week of April. Specifically, April 24 or April 30 are being cited as the probable release dates. This news
இந்தச் செய்தி One India ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 9-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் முன்னேற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக ஏப்ரல் 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு: ஏப்ரல் 9, 2026 வாக்கு எண்ணிக்கை: மே 4, 2026 பள்ளி விடுமுறை: ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 10 வரை தேர்தல் தேதி நெருங்கி வருவதால், புதுச்சேரியில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேசிய மற்றும் மாநிலத் தலைவர்கள் தங்களது கூட்டணிக் வேட்பாளர்களுக்கு ஆதரவாகத் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். நிதின் நபின் (பாஜக): பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின் வரும் ஏப்ரல் 4-ம் தேதி காரைக்காலில் பிரசாரத்தைத் தொடங்குகிறார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 5-ம் தேதி புதுச்சேரியிலும் வாக்கு சேகரிக்க உள்ளார். அமித் ஷா (பாஜக): மத்திய அமைச்சர் அமித் ஷா ஏப்ரல் 6-ம் தேதி திருக்கனூரில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக உரையாற்றுகிறார். மு.க. ஸ்டாலின் (திமுக): தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தட்டஞ்சாவடியில் பிரம்மாண்ட பேரணியில் ஈடுபட உள்ளார். வாக்குப்பதிவிற்கான மின்னணு இயந்திரங்களைச் சரிபார்த்தல் மற்றும் தேர்தல் பணியாளர்களுக்குப் பயிற்சி அளித்தல் போன்ற பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மே 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதால், புதுச்சேரி தேர்தல் களம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் அ.தி.மு.க., வேட்பாளர் அருண்குமார், காளிபாளையம் தர்மராஜா கோவிலில் சாமி தரிசனம்
இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.