நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >மரணத்தைக் கண்டு அஞ்சுபவன் நான் அல்ல! - எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் ஆவேச பதிலடி!

மரணத்தைக் கண்டு அஞ்சுபவன் நான் அல்ல! - எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் ஆவேச பதிலடி!

வியாழன், ஏப்ரல் ௯, ௨௦௨௬|16 மணி நேரம் முன்|சிவரஞ்சித்|Abp News
மரணத்தைக் கண்டு அஞ்சுபவன் நான் அல்ல! - எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் ஆவேச பதிலடி!

விழுப்புரம் : மரணத்தைப் பார்த்து கலங்கக்கூடியவனோ, பயப்படுகிறவணோ நான் அல்ல. பழனிசாமியின் கீழ்த்தரமான பேச்சைக் கேட்ட பிறகு, இவருக்கெல்லாம் பதில் சொல்லும் நிலை இருக்கே என நினைத்து வருத்தப்படுகிறேன்: விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் பேச்சு: விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி மஸ்தான், திருக்கோயிலூர் கெளதமசிகாமணி, விக்கிரவாண்டி அன்னியூர் சிவா, விழுப்புரம் மருத்துவர் லட்சுமணன், வானூர் கெளதமன் ஆகிய நான்கு திமுக வேட்பாளர்கள் மற்றும் திண்டிவனம் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் வன்னியரசு. மயிலம் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் வெங்கடேசன் ஆகிய ஏழு வேட்பாளர்களை ஆதரித்து விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சி திடலில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் கலந்துக்கொண்டு உரையாற்றினார். இந்த கூட்டதில்திமுக மண்டல பொறுப்பாளர், அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம். திமுக துணைப்பொது செயலாளர் பொன்முடி. விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர், அதிமுக அமைப்பு செயலாளராக இருந்த செஞ்சி ராமச்சந்திரன் முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தொடர்ந்து பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின்: கடையெழு வள்ளல்களில் ஒருவரான காரி ஆண்ட மலையமான் நாடும். வீரத்தின் விளைநிலமாம் ராஜா தேசிங்கு கோட்டை கட்டி ஆண்ட விழுப்புரத்திற்கு வந்துள்ளேன். தமிழ்நாட்டின் வளர்ச்சியை காக்க. தணித்தன்மையை பாதுகாக்க. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவை கேட்டு, வாக்குகளை கேட்டு வந்துள்ளேன். ஏழு வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் விழுப்புரம் வந்ததை மறக்க முடியாது. திராவிட இயக்க தீரர் அய்யா கோவிந்தசாமி நினைவரங்கம். இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 பேரின் மணிமண்டபத்தை திறந்து வைத்தேன். இதனை என் வாழ்நாள் பேராக கருதுகிறேன். தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் சமூகநீதி என்றால் திமுக. திமுக என்றால் சமூகநீதி. சமூகநீதிக்காக 1987-ல் மருத்துவர் ராம்தாஸ் தலைமையில் நடைபெற்ற போராட்டம். போராடிய பிற்படுத்தப்பட்ட மக்களை அதிமுக ஆட்சியில் சுட்டுக்கொள்ளப்பட்டனர். 1989-ல் திமுக ஆட்சிக்கு வந்தது. வீரபாண்டியார் மூலமாக மருத்துவர் ராமதாஸ் அவர்களை வீட்டிற்கு அழைத்து விவாதித்து. ஆட்சிக்கு வந்த 43வது நாளில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்திற்கு 20 சதவீத இடஒதுக்கீடு கொடுத்தார். சமூநீதியை நிலைநிறுத்தும் இயக்கம் மட்டுமல்ல. சமநீதி போராளிகளை போற்றும் இயக்கம் திமுக. இட ஒதுக்கீடு போராட்ட தியாகத்தால் தியாகத்தால் பயனடைந்த சிலர் தூரோகிகலாக மாறியுள்ளனர். மருத்துவர் ராமதாசுக்கு பலர் நம்பிக்கை தூதோகம் செய்திருக்கலாம். ஆனால் திமுக சமூக நீதி போராளியாக பார்க்கிறோம். மதிக்கிறோம். என்.டி.ஏ என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி. தூரோகிகளால். தமிழ்நாட்டுக்கு புதிய தூரோகம் செய்ய அமைக்கப்பட்ட கூட்டணி. நீட் தேர்வை அனுமதித்தார்கள். நீட் தேர்வுக்கு எதிரான சட்டம் மசோதாவை, ஓனராக இருந்த பாஜக திருப்பி அனுப்பியதை சட்டமன்றத்தில் சொல்லாமல் மறைத்தார்கள். கீழடி ஆய்வுகளை குழிதோண்டி புதைக்க பார்த்து தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்தார்கள். குடியுரிமை திருத்த சட்டம், வக்பு சட்டம் கொண்டுவந்து இஸ்லாமிய மக்களுக்கு துரோகம் செய்தனர் தற்போது. இந்திக்கும், சமஸ்கிருதத்துக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கி, தமிழுக்கு துரோகம் செய்கிறார்கள். 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பாதுகாக்க இருமொழிக் கொள்கைக்கு துரோகம் செய்கிறார்கள். துரோகங்களால் தமிழ்நாட்டின் வளர்ச்சியை கெடுக்க நினைக்கும் என்.டி.ஏ. என்.டி.ஏ என்பது நோ டெவலப்மெண்ட் அலையன்ஸ். 2026-ல் தேர்தல் சூப்பர் ஸ்டார். திமுக தேர்தல் அறிக்கை. நான் பிரச்சாரத்துக்கு வருவதற்கு முன்பு நம் சூப்பர் ஸ்டார் பிரச்சாரத்தை துவக்கி விட்டார். வாக்கு என்னும் மே 4 கல்யாண நாள். தேர்தல் அறிக்கை வெளியிட்ட நாள் தான், நாம் வெற்றிக்கு நிச்சயதார்த்த நாள். முதல் பாலே சிக்சர் தான். எட்டாயிரம் வழங்கப்போகிறோம்.சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் அதிரடியாக செய்யும் ஸ்டாலின் நான்.கோட்டையில் இருந்து மட்டும் தான் ஆட்சி செய்ய வேண்டும் என்பதல்ல. மக்களோடு மக்களாக உங்களில் ஒருவனாக ஆட்சி செய்ய வேண்டும். நான் சாதனைகளை பட்டியலிடுவது போல எடப்பாடி பழனிச்சாமியால் பட்டியலிட முடியுமா?. சொல்வதற்கு உண்மையில்லாத காரணத்தினால் பொய்களை வாந்தி எடுத்து வருகிறார் பழனிச்சாமி. சாதனைகள் மட்டுமல்ல, உங்களின் ஒவ்வொரு பொய்க்கும் என்னால் புள்ளி விவரத்துடன் பதிலடி கொடுக்க முடியும். தோல்வி பயத்தில் தினமும் தாறுமாறாக, தரம்கெட்டு பேசுகிறார் பழனிச்சாமி. இன்று மாலை சென்னையில் பேசும்போது. திமுக ஆட்சியில் கொரோ வந்திருந்தால் கொரோனாவில் நானே போயிருப்பேன் என பேசியுள்ளார். பழனிச்சாமி அவர்களே என் மரணத்தைப் பற்றி பேசுகிறீர்களே. மரணத்தைப் பார்த்து கலங்கக்கூடியவனோ, பயப்படுகிறவணோ நான் அல்ல. 1971-இல் நீங்கள் அரசியலுக்கு அரசியலுக்கு வருவதற்கு முன்பு 23 வயதில் மிசாவில் கைது செய்யப்பட்டு சிறை கொடுமையை அனுபவித்தவன் நான். ஓராண்டு காலம் சிறையில் இருந்தவன் நான். பொது வாழ்க்கையில் எல்லாவற்றையும் எதிர்கொள்ள வேண்டும் என என்னை சிறைக்கு அனுப்பி வைத்தவர் முதல்வர் கலைஞர். விசாவின் கொடுமைக்கு பயப்படாதவன் கொரோனாவிற்காக பயப்பட போகிறேன். கொரோனா காலத்தில் பிபி உடைய அணிந்து கொரோனா வார்டுக்குள் சென்றவன் நான். இதுவரை யாரிடமும் கூறாததை சொல்கிறேன். கொரோனா வார்டுக்குள் செல்லப் போகிறேன் என யாரிடமும் கூறவில்லை. நான் யாரிடமும் கூறாமல் கொரோனா வார்டுக்குள் சென்றதால் மனைவி துர்கா கோபித்துக்கொண்டு என்னிடம் ஒருவராம் பேசவில்லை. மக்களுக்காக எதையும் துணிந்து செய்யக்கூடியவன். பழனிசாமியின் கீழ்த்தரமான பேச்சைக் கேட்ட பிறகு பெரியார், அண்ணா, காமராஜ்ர், கலைஞர், எம்ஜிஆர், பேராசிரியர் என பல பண்பாளரிடம் நேரில் பழகக்கூடிய நீண்ட அரசியல் அனுபவம் பெற்ற நான். இவருக்கெல்லாம் பதில் சொல்லும் நிலை இருக்கே என நினைத்து வருத்தப்படுகிறேன். எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச் செயலாளராக ஆன பிறகு தேர்தலில் வெற்றி பெற்றதே இல்லை. திமுக தலைவரான பிறகு நான் தோற்றத இல்லை. பாஜக எனும் பேயை தமிழ்நாட்டுக்கு கொண்டு வர நினைக்கும் அடிமை பழனிச்சாமிக்கு இந்த தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் கடுமையான தண்டனை தர வேண்டும். இது டெல்லிக்கும், தமிழ்நாட்டுக்கும் நடைபெறும் தேர்தல். பத்து தோல்வி பழனிச்சாமிக்கு, 11 ஆவது தோல்வியை தந்து விரட்ட வேண்டும். டபுள் என்ஜின், டப்பா என்ஜின் என கூறிக்கொண்டு, டெல்லியின் ரிமோட் கண்ட்ரோலுக்கு ஆடும், அடிமைகள் ஆளக்கூடாது. பாஜகவையும், அதிமுகவையும் வேரோடும், வேரடி மண்ணோடு வீழ்த்தப்பட வேண்டும். அதற்கு திமுக தான் ஆட்சி அமைக்க வேண்டும்.

இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

DC vs GT: "ரொம்ப நாள்களுக்குப் பிறகு ஒரு நல்ல விக்கெட்டை வீழ்த்திருக்கிறேன்" - ஆட்டநாயகன் ரஷித் கான்
top

DC vs GT: "ரொம்ப நாள்களுக்குப் பிறகு ஒரு நல்ல விக்கெட்டை வீழ்த்திருக்கிறேன்" - ஆட்டநாயகன் ரஷித் கான்

நேற்று (ஏப்ரல்.8) நடைபெற்ற டெல்லி vs குஜராத் அணிகளுக்கிடையேயான போட்டியில் குஜராத் அணி 1 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது| In the match held yesterday (April 8) between Delhi Capitals and Gujarat Titans, Gujarat secured a victory by defeating Delhi by 1 run. இந்தச் செய்தி Vikatan ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
உலகின் மிக பழமையான நாடு எது தெரியுமா? இந்தியாவுக்கு எந்த இடம்? டாப் 10 நாடுகளின் பட்டியல்!
top

உலகின் மிக பழமையான நாடு எது தெரியுமா? இந்தியாவுக்கு எந்த இடம்? டாப் 10 நாடுகளின் பட்டியல்!

World's Oldest Countries | சில நாடுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்றையும், வளமான கலாச்சாரத்தையும் இன்றுவரை பாதுகாத்து வருகின்றன. அந்த வகையில், உலகின் மிகப் பழமையான நாடுகள் எவை என்று உங்களுக்குத் தெரியுமா?. இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
இரான் போர்: `இது `சுற்றுலா' அல்ல சுழல் மிஸ்டர் டிரம்ப்.!' - பின் வாங்கியதா அமெரிக்கா? | Explained
top

இரான் போர்: `இது `சுற்றுலா' அல்ல சுழல் மிஸ்டர் டிரம்ப்.!' - பின் வாங்கியதா அமெரிக்கா? | Explained

போருக்கு முன்னர் எல்லா நாடுகளும் சுதந்திரமாக கப்பல்களை செலுத்தத் திறந்திருந்த ஹோர்முஸ் நீரிணையை, டிரம்ப் நடத்திய போரால் இரானின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரச் செய்ததுதான் டிரம்ப்பின் சாதனையா என்று அரசியல் விமர்சகர்கள் கேட்கிறார்கள். | Former BBC editor writes on Iran USA Israel conflict in detail இந்தச் செய்தி Vikatan ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்