நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >Donald Trump: ட்ரம்புக்கு ஸ்கெட்ச்... விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு.. கொலை செய்ய முயற்சியா?

Donald Trump: ட்ரம்புக்கு ஸ்கெட்ச்... விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு.. கொலை செய்ய முயற்சியா?

ஞாயிறு, ஏப்ரல் ௨௬, ௨௦௨௬|15 மணி நேரம் முன்|பேச்சி ஆவுடையப்பன்|Abp News
Donald Trump: ட்ரம்புக்கு ஸ்கெட்ச்... விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு.. கொலை செய்ய முயற்சியா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 25ம் தேதியான சனிக்கிழமை இரவு வாஷிங்டனில் உள்ள ஹில்டன் விருந்தினர் அரங்கில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. செய்தியாளர் சந்திப்புக்கு முன் நடைபெற்ற இந்த விருந்தின்போது அனைவரும் அங்கு கீழே அமர்ந்திருக்க, ட்ரம்ப் அவரது மனைவி மெலனியா உள்ளிட்ட முக்கியமானவர்கள் மேடையில் அமர்ந்திருந்தனர். அப்போது திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்க ஒரு கணம் அங்கிருந்த அனைவரும் மிரண்டனர். ஆறு முறை துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டதாக சொல்லப்படும் நிலையில் உடனடியாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் டொனால்ட் ட்ரம்பை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். மேலும் அவரின் மனைவி மெலனியா ட்ரம்ப், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆகியோரும் அழைத்துச் செல்லப்பட்டனர். உடனடியாக அந்த இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட நபரை சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. Footage of Trump being evacuated after shots fired pic.twitter.com/El7E74DgbT — Republicans against Trump (@RpsAgainstTrump) April 26, 2026 இதனிடையே வெள்ளை மாளிகை செய்தியாளர் இரவு விருந்தில் பங்கேற்க சென்ற ANI செய்தியாளர் ரீனா பரத்வாஜ் அங்கு என்ன நடந்தது என்பதை பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவில், “சில நிமிடங்களுக்கு முன்பு, வாஷிங்டனில் உள்ள ஹில்டன் ஹோட்டலின் விருந்தினர் அறையில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. நான் முதலில் ஒரு உரத்த சத்தத்தை கேட்டேன். அது தட்டுகள் ஒன்றோடொன்று மோதும் சத்தமாக இருக்கலாம் என நினைத்தேன். ஆனால் அடுத்த சில நொடிகளில், உணவு பரிமாறுபவர்கள் தங்கள் தட்டுகளுடன் உள்ளே விரைந்து வந்து, தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு பாதுகாப்பான இடத்தைத் தேடுவதைக் கண்டேன். அப்போதுதான் ஏதோ சரியில்லை என்று எனக்குத் தோன்றியது. அந்த அறையில் அமர்ந்திருந்த அனைவரும் மேசைக்கு அடியில் பதுங்கிக் கொண்டனர். சில நிமிடங்களில் இப்போது எழுந்து செல்வது பாதுகாப்பானது என்று நான் உணர்ந்தபோது, ​​மேடையில் துப்பாக்கிகளுடன் பாதுகாப்பு அதிகாரிகள் நிற்பதை நான் கண்டேன். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர். நிகழ்ச்சி விரைவில் மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்தே அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2024ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி பென்சில்வேனியாவில் நடந்த அதிபர் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் அவரின் காது பகுதியில் காயம் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட 20 வயது நபர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்க வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச்சூடு; விருந்து நிகழ்ச்சியில் பரபரப்பு
top

அமெரிக்க வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச்சூடு; விருந்து நிகழ்ச்சியில் பரபரப்பு

வாஷிங்டன்: அமெரிக்க வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் பங்கேற்ற விருந்து நிகழ்ச்சியில், துப்பாக்கிச்சூடு இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்
புக்கிட் பாஞ்சாங்கில் துப்புரவு வாகன விபத்தில் பாதசாரி மரணம்:ஓட்டுநர் கைது
top

புக்கிட் பாஞ்சாங்கில் துப்புரவு வாகன விபத்தில் பாதசாரி மரணம்:ஓட்டுநர் கைது

இந்தச் செய்தி Tamil Murasu ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்
Chennai News Live Updates: உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலைக்கு வாய்ப்பு - 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்
top

Chennai News Live Updates: உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலைக்கு வாய்ப்பு - 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்

Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 101.23-க்கும், டீசல் 92.81 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்