நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >Indigo Fare Inreased: விமானப் பயணிகளுக்கு ஷாக்! விமான கட்டணம் அதிரடி உயர்வு - எவ்வளவு தெரியுமா?

Indigo Fare Inreased: விமானப் பயணிகளுக்கு ஷாக்! விமான கட்டணம் அதிரடி உயர்வு - எவ்வளவு தெரியுமா?

புதன், ஏப்ரல் ௧, ௨௦௨௬|13 மணி நேரம் முன்|ஜேம்ஸ்|Abp News
Indigo Fare Inreased: விமானப் பயணிகளுக்கு ஷாக்! விமான கட்டணம் அதிரடி உயர்வு - எவ்வளவு தெரியுமா?

ஈரான் மற்றும் இஸ்ரேல் நிலவும் போர்ச் சூழல் காரணமாக கச்சா எண்ணெய் விலை விண்ணைத் தொட்டுள்ளது. இதன் எதிரொலியாக, இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ, ஏப்ரல் 2 முதல் விமானங்களுக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது கட்டணம் எவ்வளவு உயர்வு? இதுவரை உள்நாட்டுப் பயணங்களுக்கு ரூ. 425 என இருந்த ஒரே சீரான கட்டண முறையை மாற்றி, தற்போது பயண தூரத்தின் அடிப்படையில் (Distance-based slabs) கட்டணங்களை இண்டிகோ நிர்ணயித்துள்ளது. புதிய கட்டணப் பட்டியல்: பயணத் தூரம் (கி.மீ) புதிய எரிபொருள் கட்டணம் 500 கி.மீ வரை ரூ. 275 500 - 1000 கி.மீ ரூ. 400 1000 - 1500 கி.மீ ரூ. 600 1500 - 2000 கி.மீ ரூ. 800 2000 கி.மீ-க்கு மேல் ரூ. 950 கட்டண உயர்வுக்கு முக்கிய காரணங்கள்: ஏப்ரல் 1 முதல் விமான எரிபொருள் (ATF) விலை லிட்டருக்கு சுமார் 115% வரை உயர்ந்துள்ளது. டெல்லி போன்ற நகரங்களில் ஒரு கிலோ லிட்டர் எரிபொருள் விலை முதல்முறையாக ரூ. 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது.ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை 130% வரை அதிகரித்துள்ளது.போர் காரணமாக வான்வழிப் பாதைகள் மூடப்பட்டுள்ளதால், சர்வதேச விமானங்களை நீண்ட தூரம் சுற்றி இயக்க வேண்டியுள்ளது. இது எரிபொருள் செலவை மேலும் அதிகரித்துள்ளது. சர்வதேச பயணிகளுக்கும் அதிர்ச்சி: உள்நாட்டுப் பயணங்களுக்கு அதிகபட்சமாக ரூ. 950 வசூலிக்கப்படும் நிலையில், சர்வதேச பயணங்களுக்கான எரிபொருள் கட்டணம் தூரத்தைப் பொறுத்து ரூ. 900 முதல் ரூ. 10,000 வரை வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது துபாய், சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் பயணிகளைப் பெருமளவு பாதிக்கும். அரசு எடுத்த நடவடிக்கை: எரிபொருள் விலை 100%-க்கும் மேல் உயர்ந்தாலும், பயணிகளின் சுமையைக் குறைக்க மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தலையிட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலை உயர்வை ஒரேடியாகச் சுமத்தாமல், உள்நாட்டு விமானங்களுக்கு 25% மட்டும் படிப்படியாக உயர்த்த அறிவுறுத்தியுள்ளது. இருந்தபோதிலும், விமான நிறுவனங்களின் இயக்கச் செலவில் 40% எரிபொருளுக்கே செலவாவதால், இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாததாகியுள்ளது. பயணிகள் கவனத்திற்கு: இந்தக் கட்டண உயர்வு ஏப்ரல் 2, 2026 முதல் செய்யப்படும் புதிய டிக்கெட் முன்பதிவுகளுக்கு மட்டுமே பொருந்தும். ஏற்கனவே டிக்கெட் எடுத்தவர்களுக்கு இந்தக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறுகிய தூரப் பயணிகளுக்கு (எ.கா: சென்னை - பெங்களூரு) கட்டணம் சற்றே குறைந்தாலும், நீண்ட தூரப் பயணிகளுக்கு (எ.கா: சென்னை - டெல்லி) விமான டிக்கெட் விலை கணிசமாக உயரும் என்பது உறுதியாகியுள்ளது.

இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

Abp News இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

Jana Nayagan: ஜனநாயகன் பட சிக்கல் தீர்ந்தது? விரைவில் படம் ரிலீஸ் ஆகப்போகுதா? கொண்டாட தயாராகும் விஜய் ரசிகர்கள்!
top

Jana Nayagan: ஜனநாயகன் பட சிக்கல் தீர்ந்தது? விரைவில் படம் ரிலீஸ் ஆகப்போகுதா? கொண்டாட தயாராகும் விஜய் ரசிகர்கள்!

Jana Nayagan: Reports have emerged that 'Jana nayagan'—the highly anticipated film starring actor and Tamilaga Vettri Kazhagam leader Vijay—is set to be released soon. Having faced censorship and legal hurdles over the past few months, the film is now expected to hit theaters during the last week of April. Specifically, April 24 or April 30 are being cited as the probable release dates. This news இந்தச் செய்தி One India ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்
புதுச்சேரி தேர்தல்: ஏப்.7 முதல் 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
top

புதுச்சேரி தேர்தல்: ஏப்.7 முதல் 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 9-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் முன்னேற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக ஏப்ரல் 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு: ஏப்ரல் 9, 2026 வாக்கு எண்ணிக்கை: மே 4, 2026 பள்ளி விடுமுறை: ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 10 வரை தேர்தல் தேதி நெருங்கி வருவதால், புதுச்சேரியில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேசிய மற்றும் மாநிலத் தலைவர்கள் தங்களது கூட்டணிக் வேட்பாளர்களுக்கு ஆதரவாகத் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். நிதின் நபின் (பாஜக): பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின் வரும் ஏப்ரல் 4-ம் தேதி காரைக்காலில் பிரசாரத்தைத் தொடங்குகிறார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 5-ம் தேதி புதுச்சேரியிலும் வாக்கு சேகரிக்க உள்ளார். அமித் ஷா (பாஜக): மத்திய அமைச்சர் அமித் ஷா ஏப்ரல் 6-ம் தேதி திருக்கனூரில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக உரையாற்றுகிறார். மு.க. ஸ்டாலின் (திமுக): தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தட்டஞ்சாவடியில் பிரம்மாண்ட பேரணியில் ஈடுபட உள்ளார். வாக்குப்பதிவிற்கான மின்னணு இயந்திரங்களைச் சரிபார்த்தல் மற்றும் தேர்தல் பணியாளர்களுக்குப் பயிற்சி அளித்தல் போன்ற பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மே 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதால், புதுச்சேரி தேர்தல் களம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்
தர்மராஜா கோவிலில் சாமி தரிசனம் :பிரசார துவக்கத்தில் 'சென்டிமென்ட்'
top

தர்மராஜா கோவிலில் சாமி தரிசனம் :பிரசார துவக்கத்தில் 'சென்டிமென்ட்'

பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் அ.தி.மு.க., வேட்பாளர் அருண்குமார், காளிபாளையம் தர்மராஜா கோவிலில் சாமி தரிசனம் இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்