IPL 2026 Points Table: நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடரில் தோல்வியையே சந்திக்காத பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஐபிஎல் 2026 - பாதி சீசன் ஓவர் நடப்பாண்டிற்கான ஐபிஎல் சீசனில் முன்னெப்போதும் இல்லாத அளவில், ரன் மழை பொழிந்து வருகிறது. 200 அல்லது அதற்கு மேற்பட்ட இலக்குகள் கூட மிக எளிதானதாக மாறி வருகிறது. சதங்கள், பவுண்டரிகள், சிக்சர்கள் மிகவும் அநாயசமாக மாறிவிட்டன. பவுலர்களின் தாக்கத்தையே போட்டியில் காணமுடியவில்லை. சுழற்பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் என்பது இல்லாமலே போய்விட்டது. சர்வதேச போட்டிகளில் விளையாடாத இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே ஓரளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடப்பாண்டிற்கான மொத்த 70 போட்டிகளில், 36 போட்டிகள் முடிந்த நிலையில் புள்ளிப்பட்டியல் நிலவரம் கீழே விவரிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் 2026 - புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் ஆதிக்கம் நேற்று இரவு நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான் நிர்ணயித்த 229 ரன்கள் என்ற இலக்கை, 18.3 ஓவர்களிலேயே சேஸ் செய்த ஐதராபாத் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலிலும் ராஜஸ்தானை பின்னுக்கு தள்ளி, ஐதாராபாத் அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் ஒன்றில் கூட தோல்வியையே சந்திக்காத பஞ்சாப் அணி, அசுர பலத்தில் 13 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. நேற்று கொல்கத்தா அணி நிர்ணயித்த 265 ரன்கள் என்ற வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிலான இலக்கை கூட, 7 பந்துகளை மிச்சப்படுத்தி பஞ்சாப் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், கொல்கத்தா அணி ஒரே ஒரு வெற்றியை மட்டுமே ஈட்டி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ஐபிஎல் 2026 - புள்ளிப்பட்டியல் அணிகள் போட்டி வெற்றி தோல்வி புள்ளிகள் ரன்ரேட் பஞ்சாப் 7 6 0 13 1.33 பெங்களூரு 7 5 2 10 1.10 ஐதராபாத் 8 5 3 10 0.81 ராஜஸ்தான் 8 5 3 10 0.60 சென்னை 7 3 4 6 0.11 டெல்லி 7 3 4 6 -0.18 குஜராத் 7 3 4 6 -0.79 மும்பை 7 2 5 4 -0.73 லக்னோ 7 2 5 4 -1.27 கொல்கத்தா 7 1 5 3 -0.879 இன்றைய போட்டிகள்: இந்நிலையில் வார இறுதியான இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. பிற்பகல் 3.30 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன. இதில் சென்னை அணி வெற்றி பெற்றால் தனது ஐந்தாவது இடத்தை மேலும் உறுதிப்படுத்த முடியும். அதேநேரம், குஜராத் அணி வலுவான ரன்ரேட்டுடன் வெற்றி பெற்றால், புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடம் வரை முன்னேறலாம். தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு ஏக்னா மைதானத்தில் நடைபெறும் போட்டியில் தொடர் தோல்விகளால் துவண்டு கிடக்கும், புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் உள்ள கொல்கத்தா மற்றும் லக்னோ ஆகிய அணிகள் மோத உள்ளன. ப்ளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை நீட்டிக்க மீதமுள்ள போட்டிகளில் பெரும்பாலனவற்றில் இந்த அணிகள் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும்.
IPL 2026: பாதி ஐபிஎல் ஓவர் - கட்டுக்கடங்காத பஞ்சாப், பரிதாபத்தில் கொல்கத்தா - புள்ளிப்பட்டியல் நிலவரம்


