நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🎬 சினிமா
  3. >ஜன நாயகன் ஆன்லைனில் கசிந்த விவகாரம்; 6 பேரை கைது செய்த சைபர் பிரிவு போலீசார் விசாரணை
🎬 சினிமா

ஜன நாயகன் ஆன்லைனில் கசிந்த விவகாரம்; 6 பேரை கைது செய்த சைபர் பிரிவு போலீசார் விசாரணை

ஞாயிறு, ஏப்ரல் ௧௨, ௨௦௨௬|15 மணி நேரம் முன்|d. elayaraja|The Indian Express
ஜன நாயகன் ஆன்லைனில் கசிந்த விவகாரம்; 6 பேரை கைது செய்த சைபர் பிரிவு போலீசார் விசாரணை

விஜய் நடிப்பில் வெளியாகும் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்ட ஜன நாயகன் திரைப்படம், சென்சார் பிரச்னை காரணமாக ரிலீ்ஸ் ஆகாத நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படம் சட்டவிரோதமாக ஆன்லைனில் கசிந்தது. இதனால் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இந்த விவாகரம் தொடர்பாக 7 பேரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்த விஜய், தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளாார். இதனால் சினிமாவில் இருந்து விலகியுள்ள அவர், ஜன நாயகன் திரைப்படம் தான் தனது கடைசி படம் என்று அறிவித்தார். கடந்த ஜனவரி மாதம் வெளியாக இருந்த இந்த படம் சென்சார் பிரச்னை காரணமாக வெளியாகாத நிலையில், தேர்தல் முடிந்த பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஜன நாயகன் திரைப்படத்தின் ஒரு காட்சி இணையத்தில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அன்றைய தினமே நள்ளிரவில் முழு படமும் ஆன்லைனில் கசிந்தது. இந்த விவாகரத்தில் தயாரிப்பாளர் சங்கம், தமிழ் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த நிலையில், காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து சைபர் க்ரைம் விசாரணை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனது. இந்நிலையில், ஜன நாயகன் படம் கசிந்தது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீசார், இது தொடர்பாக இன்று 6 பேரைக் கைது செய்தனர். தணிக்கை வாரியத்தின் (CBFC) பல ஆட்சேபனைகளால் படத்தின் ரிலீஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, ஜன நாயகன் திரைப்படம் சுமார் ரூ. 500 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் படத்தை கசியவிட்டதிலும், பகிர்ந்ததிலும் இந்த 6 பேருக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. ஏப்ரல் 10-ந் தேதி இப்படம் இணையதளத்தில் கசிந்ததை தொடர்ந்து இப்படத்தை தயாரித்த கே.வி.என் (KVN) புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு கட்டுப்பாட்டாளர், தமிழக சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார். திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே படம் சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்யப்படுவதையும், பகிரப்படுவதையும் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் புகாரில் கோரியிருந்தார். மேலும் படம் கசிந்தது தொடர்பான தங்கள் நிறுவனத்திற்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திய இந்தச் செயலில், சட்டவிரோதமாகப் படத்தை பார்ப்பது, பதிவிறக்கம் செய்வது மற்றும் விநியோகிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக 21 பேரின் பெயர்களை தயாரிப்பு நிறுவனம் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தது. மேலும், இதில் தொடர்புடைய அனைவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தது. கசிந்த திரைப்படத்தின் பதிப்பு சமூக வலைதளங்கள் மற்றும் பிற தளங்களில் பகிரப்படாமல் இருப்பதை போலீசார் உறுதி செய்ய வேண்டும் என்றும் அந்த நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

அண்ணாமலை முகத்தில் விழுந்த செல்போன்.. பூக்களோடு வீசப்பட்டதும் அவர் கொடுத்த ரியாக்ஷன்
சினிமா

அண்ணாமலை முகத்தில் விழுந்த செல்போன்.. பூக்களோடு வீசப்பட்டதும் அவர் கொடுத்த ரியாக்ஷன்

The Cellphone That Struck Annamalai's Face: His face Reaction When It Was Thrown Along with Flowers இந்தச் செய்தி One India ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
மேடையிலேயே மயங்கி விழுந்த ராமதாஸ்: சேலத்தில் பிரசார களத்தில் பரபரப்பு- பாமக தொண்டர்கள் அதிர்ச்சி!
சினிமா

மேடையிலேயே மயங்கி விழுந்த ராமதாஸ்: சேலத்தில் பிரசார களத்தில் பரபரப்பு- பாமக தொண்டர்கள் அதிர்ச்சி!

சேலத்தில் தேர்தல் பரப்புரையை முடித்த பாமக நிறுவனர் ராமதாஸ் திடீரென மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
ஈரானுக்கு 2-வது கட்டமாக 40 டன் மருத்துவ உதவி வழங்கிய இந்தியா... “உண்மையான நண்பன்!” என ஈரான் தூதர் முகமது பதாலி நெகிழ்ச்சி!
சினிமா

ஈரானுக்கு 2-வது கட்டமாக 40 டன் மருத்துவ உதவி வழங்கிய இந்தியா... “உண்மையான நண்பன்!” என ஈரான் தூதர் முகமது பதாலி நெகிழ்ச்சி!

ஈரானுக்கு 2-வது கட்டமாக 40 டன் மருத்துவ உதவி வழங்கிய இந்தியா... “உண்மையான நண்பன்!” என ஈரான் தூதர் முகமது பதாலி நெகிழ்ச்சி! இந்தச் செய்தி Dinamaalai ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்