நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🏏 விளையாட்டு
  3. >5 பேர் மீது காரை ஏற்றிய மகன்: போலீஸை மிரட்டிய பா.ஜ.க எம்.எல்.ஏ; நடந்தது என்ன?
🏏 விளையாட்டு

5 பேர் மீது காரை ஏற்றிய மகன்: போலீஸை மிரட்டிய பா.ஜ.க எம்.எல்.ஏ; நடந்தது என்ன?

செவ்வாய், ஏப்ரல் ௨௧, ௨௦௨௬|18 மணி நேரம் முன்|webdesk|The Indian Express
5 பேர் மீது காரை ஏற்றிய மகன்: போலீஸை மிரட்டிய பா.ஜ.க எம்.எல்.ஏ; நடந்தது என்ன?

தன் மகன் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறை அதிகாரியை, பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் (MLA) ப்ரீதம் சிங் லோதி பகிரங்கமாக மிரட்டும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் எம்.எல்.ஏ-வின் மகன் ஓட்டிச் சென்ற 'தார்' (Thar) வாகனம் மோதி 5 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது. தனது மகன் தினேஷ் லோதி மீதான போலீஸ் விசாரணையால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ ப்ரீதம் சிங் லோதி, கரேரா பகுதி எஸ்.டி.ஓ.பி (SDOP) ஆயுஷ் ஜாக்கத்தை குறிவைத்து பேசி உள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது; கரேரா எஸ்.டி.ஓ.பி பேசியதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. என் மகனை மீண்டும் இங்கே பார்க்க கூடாது என அவர் எச்சரித்துள்ளார். நான் அவரிடம் கேட்கிறேன், கரேரா என்ன உங்கள் அப்பன் வீட்டு சொத்தா? வழக்கமாக நான் இப்படி பேச மாட்டேன். ஆனால் இப்போது தெளிவாகச் சொல்கிறேன்... என் மகன் மீண்டும் கரேராவுக்கு வருவான், தேர்தலிலும் போட்டியிடுவான். துணிச்சல் இருந்தால் உங்கள் தந்தை வந்து தடுக்கட்டும். மேலும், எங்க வரலாற்றை ஒருமுறை திரும்பிப் பாருங்கள். பொய் வழக்கு போட்டாலோ அல்லது ஒருதலைப்பட்சமாக விசாரணை நடத்தினாலோ நாங்க சும்மா இருக்க மாட்டோம். அதிகாரிகள் தங்கள் எல்லைக்குள் இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க ஏப்.16-ம் தேதி சிவபுரியின் கரேரா பகுதியில், தினேஷ் லோதி ஓட்டிச் சென்ற மஹிந்திரா தார் வாகனம், சாலையில் சென்ற 2 பெண்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 3 தொழிலாளர்கள் என மொத்தம் 5 பேர் மீது மோதியது. இதில், அனைவரும் காயமடைந்தனர். அந்த வாகனத்தில் எம்.எல்.ஏ-வின் பெயர் பலகை இருந்ததாகவும், விபத்துக்குப் பின் தினேஷ் லோதி பாதிக்கப்பட்டவர்களுடன் வாக்குவாதம் செய்ததாகவும் கூறப்படுகிறது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தினேஷ் லோதி காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டார். விசாரணையில், அந்த வாகனத்தில் சட்ட விரோதமாக சைரன் பொருத்தப்பட்டிருந்ததும், கண்ணாடிகளில் கருப்பு பிலிம் (Black film) ஒட்டப்பட்டிருந்ததும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்த போலீசார், அவரது ஓட்டுநர் உரிமத்தையும் (Driving Licence) ரத்து செய்தனர். எம்.எல்.ஏ குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த எஸ்டிஓபி ஆயுஷ் ஜாக்கத், நாங்க சட்ட விதிமுறைகளின்படியே செயல்பட்டோம். வழக்கமான விசாரணையே மேற்கொள்ளப்பட்டது. கருப்பு பிலிம், சைரன் மற்றும் உரிமம் ரத்து ஆகிய நடவடிக்கைகள் விதிகளின்படி எடுக்கப்பட்டவை என்று தெரிவித்துள்ளார். தன் மகன் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு போலீசாரிடம் தானே கூறியதாக எம்.எல்.ஏ லோதி கூறினாலும், தற்போது விசாரணை அதிகாரியை அவர் மிரட்டி உள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

ஒரே ரேங்க்... 10 நாடுகள்! ஐரோப்பாவின் மாஸ் ஆதிக்கம்; தலைகீழாக மாறிய பாஸ்போர்ட் தரவரிசை
விளையாட்டு

ஒரே ரேங்க்... 10 நாடுகள்! ஐரோப்பாவின் மாஸ் ஆதிக்கம்; தலைகீழாக மாறிய பாஸ்போர்ட் தரவரிசை

பாஸ்போர்ட் என்பது வெறும் பயண ஆவணம் மட்டுமல்ல அது ஒரு நாட்டின் உலகளாவிய நகர்வுத் திறன், வசதி மற்றும் ஒரு குடிமகன் உலகெங்கும் எவ்வளவு எளிதாகப் பயணம் செய்ய முடியும் என்பதற்கான அமைதியான அளவுகோலாகும். 2026-ஆம் ஆண்டின், உலகின் வலிமையான பாஸ்போர்ட்டுகள் மீண்டும் ஒருமுறை அந்த பாஸ்போர்ட்களை வைத்திருப்பவர்கள் முன்கூட்டியே விசா தேவையின்றி எத்தனை இடங்களுக்குச் செல்ல முடியும் என்பதை தீர்மானிக்கின்றன. ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஏறுமுகத்தில் தங்கம் விலை: நினைத்து பார்க்க முடியாத கம்மி விலையில் இந்த நாட்டில் கோல்ட் வாங்கலாம்; உடனே கிளம்புங்க! சிங்கப்பூர் இந்த பட்டியலில் சிங்கப்பூர் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 192 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்யலாம். இது அந்நாட்டை உலகளாவிய தரவரிசையில் அசைக்க முடியாத உயரத்தில் வைத்துள்ளது. சிங்கப்பூரின் வலுவான சர்வதேச உறவுகள், திறமையான நிர்வாகம் மற்றும் உலகெங்கிலும் தடையின்றி இணைக்கப்பட்ட அதன் பயண ஆவணம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, இது பெரிய ஆச்சரியத்தைத் தரவில்லை. அடிக்கடி பயணம் செய்பவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் உலகளாவிய குடிமக்களுக்கு இது இன்றும் ஒரு கனவுப் பாஸ்போர்ட்டாகவே நீடிக்கிறது. ஜப்பான் - தென் கொரியா 2026-ஆம் ஆண்டில், ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய இரு நாடுகளும் தலா 188 என்ற விசா இல்லாத பயண மதிப்பீட்டுடன் இரண்டாம் இடத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. நிலையான தூதரக உறவுகள், நம்பகமான அரசு நிறுவனங்கள் மற்றும் பரஸ்பர பயண ஒப்பந்தங்கள் காரணமாகவே இந்த இரு நாடுகளின் பாஸ்போர்ட்டுகளும் எப்போதும் வலிமையாகக் கருதப்படுகின்றன. உலகளாவிய நகர்வுத் திறனில் இந்த நாடுகள் எவ்வளவு செல்வாக்கு மிக்கவை என்பதையும், சர்வதேச சமூகத்துடன் எவ்வளவு ஆழமாக இணைந்துள்ளன என்பதையும் இந்தத் தரவரிசை பிரதிபலிக்கிறது. டென்மார்க், லக்சம்பர்க், ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து 2026-ஆம் ஆண்டின் தரவரிசையில் டென்மார்க், லக்சம்பர்க், ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் தலா 186 என்ற விசா இல்லாத பயண மதிப்பீட்டுடன் மூன்றாவது இடத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. இங்கிருந்துதான் உலகப் பாஸ்போர்ட் சந்தையில் ஐரோப்பாவின் ஆதிக்கம் மிகத் தெளிவாகத் தெரியத் தொடங்குகிறது. இந்த நாடுகள் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் வலுவாக இருப்பது மட்டுமின்றி, தடையற்ற பயணத்தை ஊக்குவிக்கும் ஐரோப்பிய மற்றும் சர்வதேச கூட்டமைப்புகளுடன் ஆழமாக இணைந்துள்ளன. ஆஸ்திரியா, பெல்ஜியம், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, நார்வே மற்றும் நெதர்லாந்து 2026-ஆம் ஆண்டின் தரவரிசையில் நான்காவது இடம் ஒரு மிகப்பெரிய கூட்டமைப்பைக் கொண்டுள்ளது. ஆஸ்திரியா, பெல்ஜியம், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, நார்வே மற்றும் நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் தலா 185 என்ற விசா இல்லாத பயண மதிப்பீட்டுடன் இந்த இடத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்தத் தரவரிசையில் இத்தனை ஐரோப்பிய நாடுகள் வரிசையாக இடம் பெற்றிருப்பது, பாஸ்போர்ட் வலிமையில் ஐரோப்பாக் கண்டம் எவ்வளவு வலுவாகத் திகழ்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது. இந்த நாடுகள் தங்களின் வலுவான தூதரக உறவுகள், நம்பகமான பாஸ்போர்ட் முறைகள் மற்றும் நீண்டகாலமாக நிலைநாட்டப்பட்ட சர்வதேச பயண அணுகல் ஆகியவற்றால் பெரும் பலன் பெறுகின்றன. இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

17 மணி நேரம் முன்
தமிழ்நாட்டில் ஒன்றுமில்லாத பாஜகவுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்! கேஜரிவால்
விளையாட்டு

தமிழ்நாட்டில் ஒன்றுமில்லாத பாஜகவுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்! கேஜரிவால்

சென்னையில் அரவிந்த் கேஜரிவால் செய்தியாளர்கள் சந்திப்பு பற்றி... | Do not give importance to the BJP, which has no presence in Tamil Nadu! — Kejriwal இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

17 மணி நேரம் முன்
வைத்தீஸ்வரன் கோயிலில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு: திரளானோர் பங்கேற்பு!
விளையாட்டு

வைத்தீஸ்வரன் கோயிலில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு: திரளானோர் பங்கேற்பு!

வைத்தீஸ்வரன்கோயில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு பற்றி.. இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

17 மணி நேரம் முன்