நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >💻 தொழில்நுட்பம்
  3. >அழியும் நிலையில் 'ஜாம்பி மரம்'... விஞ்ஞானிகளை அதிரவைத்த விசித்திர தாவர நோய்!
💻 தொழில்நுட்பம்

அழியும் நிலையில் 'ஜாம்பி மரம்'... விஞ்ஞானிகளை அதிரவைத்த விசித்திர தாவர நோய்!

செவ்வாய், மார்ச் ௩௧, ௨௦௨௬|18 மணி நேரம் முன்|meenakshi sundaram s|The Indian Express
அழியும் நிலையில் 'ஜாம்பி மரம்'... விஞ்ஞானிகளை அதிரவைத்த விசித்திர தாவர நோய்!

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலை. ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளனர். அங்குள்ள ஒரு குறிப்பிட்ட வகை மரங்கள் உயிருடன் இருந்தாலும், அவற்றால் மீண்டும் இனப்பெருக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அவற்றை விஞ்ஞானிகள் ‘ஜாம்பி மரம்’ என்றழைக்கின்றனர். இதன் அறிவியல் பெயர் ரோடம்னியா ஜாம்பி (Rhodamnia zombi). குயின்ஸ்லாந்தின் பர்னெட் பகுதியில் உள்ள மழைக் காடுகளில் வளரும் இந்த மரம், நடுத்தர அளவு கொண்டது. அடர் பச்சை இலைகள், சொரசொரப்பான பட்டை மற்றும் வெள்ளை நிறப் பூக்களைக் கொண்டது. ஒரு மனிதன் உயிருடன் இருந்தும் செயலற்று இருப்பதை 'ஜாம்பி' (உயிருள்ள பிணம்) என்று சொல்வது போல, இந்த மரங்கள் பார்ப்பதற்குப் பச்சையாக உயிருடன் நிற்கின்றன. ஆனால், இவற்றால் பூக்களையோ, பழங்களையோ, விதைகளையோ உருவாக்க முடியாது. அதாவது, காடுகளில் இவை இயற்கையாக மீண்டும் வளர முடியாத செயல்பாட்டு ரீதியாக அழிந்த நிலையில் உள்ளன. இந்த மரங்களின் அழிவுக்குக் காரணம் 'மிர்ட்டல் ரஸ்ட்' என்ற ஒரு வகை பூஞ்சை நோய் ஆகும். 2010-ல் ஆஸ்திரேலியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த மஞ்சள் நிறப் பூஞ்சை, மரத்தின் இளந்தளிர்களைத் திரும்பத் திரும்பத் தாக்குகிறது. இதனால் மரம் வளர முடியாமல் போவதோடு, பூக்கள் மற்றும் விதைகள் உருவாவது முற்றிலும் தடுக்கப்படுகிறது. தற்போதுள்ள மரங்களில் 10% ஏற்கனவே அழிந்துவிட்டன, எஞ்சியவை இனப்பெருக்கம் செய்யும் திறனை இழந்துவிட்டன. இன்னும் ஒரு தலைமுறைக்குள் இந்த இனம் முற்றிலும் மறைந்துவிடும் என்பதால், ஆராய்ச்சியாளர்கள் காலத்துடன் போட்டி போட்டுக்கொண்டு வேலை செய்து வருகின்றனர். நோய் தாக்காத மரக் கிளைகளைச் சேகரித்து, பாதுகாப்பான பண்ணைகளில் வளர்த்து வருகின்றனர். இந்தப் பூஞ்சை தாக்காத பாதுகாப்பான இடங்களுக்கு மரங்களை இடமாற்றம் செய்யத் திட்டமிட்டுள்ளனர். பண்ணைகளில் வளர்க்கப்படும் அடுத்த தலைமுறை மரங்கள் இந்த பூஞ்சை நோயைத் தாங்கும் சக்தியைப் பெறும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இது வெறும் ஒரு மரத்தைப் பற்றிய பிரச்சனை மட்டுமல்ல. ஆஸ்திரேலியாவில் இதே 'மிர்ட்டல் ரஸ்ட்' பூஞ்சையினால் பாதிக்கப்பட்டுள்ள 17 தாவர இனங்கள் இன்னும் ஒரு தலைமுறைக்குள் அழியும் அபாயத்தில் உள்ளன. மனிதத் தலையீடு இல்லையென்றால், ஆஸ்திரேலியாவின் காடுகளில் தாவரங்களின் எதிர்காலம் மிகவும் இருண்டதாக இருக்கும் என்று தாவரவியல் பேராசிரியர் ரோட் ஃபென்ஷாம் எச்சரிக்கிறார். ஆக்கிரமிப்பு நோய்கள் எவ்வளவு விரைவாக ஒரு உயிரினத்தை அழிவின் விளிம்பிற்குத் தள்ளும் என்பதற்கு இந்த ‘ஜாம்பி மரம்’ எச்சரிக்கையாக மாறி உள்ளது.

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

The Indian Express இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

கூட்டுறவு சங்க இடத்தை கைப்பற்ற முயற்சி: போலீஸ் ஸ்டேஷனில் திரண்ட மக்கள்
தொழில்நுட்பம்

கூட்டுறவு சங்க இடத்தை கைப்பற்ற முயற்சி: போலீஸ் ஸ்டேஷனில் திரண்ட மக்கள்

அன்னூர்: கூட்டுறவு சங்க இடத்தில் கம்பி வேலி அமைக்க முயற்சித்ததை கண்டித்து கிராம மக்கள் போலீஸ் ஸ்டேஷனை இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்
Realme 16 5G: ஏப்ரல் 2 அறிமுகத்திற்கு முன் கசிந்த முக்கிய தகவல்.... இதுதான் விலை
தொழில்நுட்பம்

Realme 16 5G: ஏப்ரல் 2 அறிமுகத்திற்கு முன் கசிந்த முக்கிய தகவல்.... இதுதான் விலை

Realme 16 5G Launch: தனித்துவமான 'Selfie Mirror' வடிவமைப்புடன், இந்த செக்மெண்டில் ஒரு புதுமையான அம்சத்தை அறிமுகப்படுத்தும் வாக்குறுதியுடன் வரும் Realme 16 மொபைல் குறித்த தகவல்களை, நிறுவனம் தொடர்ந்து டீஸ் செய்து வருகிறது. இந்தச் செய்தி Zee News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்
தொழில்நுட்பம்
தொழில்நுட்பம்

சிங்கப்பூர்-துபாய்: மேலும் பல எஸ்ஐஏ விமானச் சேவைகள் ரத்து

மத்திய கிழக்குப் போர் காரணமாக வளைகுடா நாடுகளுக்கு இயக்கவிருந்த மேலும் பல விமானங்களை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனங்கள் ரத்துசெய்துள்ளது. இந்தச் செய்தி Tamil Murasu ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்