நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >💻 தொழில்நுட்பம்
  3. >மேகங்களை ஊடுருவும் 'நிசார்' கண்.... அமெரிக்க எரிமலையை துல்லியமாக படம்பிடித்த நாசா!
💻 தொழில்நுட்பம்

மேகங்களை ஊடுருவும் 'நிசார்' கண்.... அமெரிக்க எரிமலையை துல்லியமாக படம்பிடித்த நாசா!

செவ்வாய், மார்ச் ௩௧, ௨௦௨௬|17 மணி நேரம் முன்|meenakshi sundaram s|The Indian Express
மேகங்களை ஊடுருவும் 'நிசார்' கண்.... அமெரிக்க எரிமலையை துல்லியமாக படம்பிடித்த நாசா!

அமெரிக்கா மற்றும் இந்தியாவின் கூட்டு முயற்சியால் உருவான நிசார் செயற்கைக்கோள், அமெரிக்காவின் புகழ்பெற்ற செயின்ட் ஹெலன்ஸ் எரிமலையை மிகத் துல்லியமாக படம்பிடித்துள்ளது. 2025 நவ.10 அன்று எடுக்கப்பட்ட இப்படம், அடர்த்தியான மேக மூட்டங்களுக்கு இடையேயும் பூமியின் மேற்பரப்பைத் தெளிவாகப் படம்பிடிக்கும் நிசாரின் ஆற்றலை நிரூபித்துள்ளது. பசிபிக் வடமேற்குப் பகுதியின் பெரும் பரப்பை இந்தப் படம் காட்டுகிறது. நிசார் செயற்கைக்கோளில் உள்ள 'எல்-பேண்ட் சிந்தெடிக் அப்ரேச்சர் ரேடார்' (L-band SAR) தொழில்நுட்பம், மேகங்களை ஊடுருவிச் சென்று அதன் கீழே உள்ள நிலப்பரப்பு குறித்த விரிவான தகவல்களைச் சேகரிக்க உதவுகிறது. இதனால் வானிலை மோசமாக இருந்தாலும் துல்லியமான தரவுகளைப் பெற முடிகிறது. நிசார் அனுப்பிய படத்தில் உள்ள ஒவ்வொரு நிறமும் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பைக் குறிக்கின்றன. மெஜந்தா (Magenta)- சாலைகள் மற்றும் கட்டிடங்கள் போன்ற தட்டையான மேற்பரப்புகளில் இருந்து ரேடார் சிக்னல்கள் வலுவாகப் பிரதிபலிப்பதைக் குறிக்கிறது. மஞ்சள் (Yellow)- நில அமைப்புகள், ஈரப்பதம் மற்றும் மேற்பரப்பின் கட்டமைப்பைக் குறிக்கிறது. மஞ்சள்-பச்சை (Yellow-green) காடுகள் மற்றும் சதுப்பு நிலங்கள் போன்ற தாவரங்கள் நிறைந்த பகுதிகளைக் குறிக்கிறது. அடர் நீலம் (Dark blue)- நீர்நிலைகள் அல்லது தாவரங்கள் இல்லாத மலை உச்சிகள் போன்ற மென்மையான மேற்பரப்புகளைக் குறிக்கிறது. ஊதா நிறக் கட்டங்கள் (Purple patches)- மலை அடிவாரத்தில் உள்ள நேர்த்தியான விளிம்புகளைக் கொண்ட இந்தப் பகுதிகள் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. இவை காடழிப்பு அல்லது மீண்டும் காடுகள் வளர்க்கப்படும் பகுதிகளைக் குறிக்கின்றன. நிசார் என்பது அமெரிக்காவின் நாசா, இந்தியாவின் இஸ்ரோ ஆகியவற்றின் கூட்டுத் திட்டமாகும். இது 2025 ஜூலை மாதம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்டது. நாசா இதில் எல்-பேண்ட் ரேடார் அமைப்பு மற்றும் மிகப் பெரிய ஆன்டெனா ரிஃப்ளெக்டரை வழங்கியுள்ளது. இஸ்ரோ செயற்கைக்கோளின் உடல் பகுதி மற்றும் எஸ்-பேண்ட் ரேடார் அமைப்பை வழங்கியுள்ளது. உலகிலேயே முதன்முறையாக 2 வெவ்வேறு அலைநீளங்களில் இயங்கும் ரேடார் கருவிகளைக் கொண்ட செயற்கைக்கோள் இதுவாகும். இது பூமியின் நிலப்பரப்பு மற்றும் பனிப்பகுதிகளை ஒவ்வொரு 12 நாட்களுக்கு ஒருமுறை கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 39 அடி அகலமுள்ள டிரம் வடிவ ஆன்டெனா உள்ளது. நாசாவால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட மிகப்பெரிய ரேடார் ஆன்டெனா இதுவேயாகும். பூமியின் மாறிவரும் மேற்பரப்பு மற்றும் சுற்றுச்சூழல் குறித்து ஆய்வு செய்வதற்குத் தேவையான மிக முக்கியமான தரவுகளை இந்த நிசார் திட்டம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

The Indian Express இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

கூட்டுறவு சங்க இடத்தை கைப்பற்ற முயற்சி: போலீஸ் ஸ்டேஷனில் திரண்ட மக்கள்
தொழில்நுட்பம்

கூட்டுறவு சங்க இடத்தை கைப்பற்ற முயற்சி: போலீஸ் ஸ்டேஷனில் திரண்ட மக்கள்

அன்னூர்: கூட்டுறவு சங்க இடத்தில் கம்பி வேலி அமைக்க முயற்சித்ததை கண்டித்து கிராம மக்கள் போலீஸ் ஸ்டேஷனை இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்
Realme 16 5G: ஏப்ரல் 2 அறிமுகத்திற்கு முன் கசிந்த முக்கிய தகவல்.... இதுதான் விலை
தொழில்நுட்பம்

Realme 16 5G: ஏப்ரல் 2 அறிமுகத்திற்கு முன் கசிந்த முக்கிய தகவல்.... இதுதான் விலை

Realme 16 5G Launch: தனித்துவமான 'Selfie Mirror' வடிவமைப்புடன், இந்த செக்மெண்டில் ஒரு புதுமையான அம்சத்தை அறிமுகப்படுத்தும் வாக்குறுதியுடன் வரும் Realme 16 மொபைல் குறித்த தகவல்களை, நிறுவனம் தொடர்ந்து டீஸ் செய்து வருகிறது. இந்தச் செய்தி Zee News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்
தொழில்நுட்பம்
தொழில்நுட்பம்

சிங்கப்பூர்-துபாய்: மேலும் பல எஸ்ஐஏ விமானச் சேவைகள் ரத்து

மத்திய கிழக்குப் போர் காரணமாக வளைகுடா நாடுகளுக்கு இயக்கவிருந்த மேலும் பல விமானங்களை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனங்கள் ரத்துசெய்துள்ளது. இந்தச் செய்தி Tamil Murasu ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்