நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >Delimitation: ஸ்டாலின் vs மத்திய அரசு: தொகுதி மறுசீரமைப்பை தமிழ்நாடு காத்திரமாக எதிர்ப்பது ஏன்? ஓர் எளிய விளக்கம்

Delimitation: ஸ்டாலின் vs மத்திய அரசு: தொகுதி மறுசீரமைப்பை தமிழ்நாடு காத்திரமாக எதிர்ப்பது ஏன்? ஓர் எளிய விளக்கம்

வியாழன், ஏப்ரல் ௧௬, ௨௦௨௬|16 மணி நேரம் முன்|க.சே.ரமணி பிரபா தேவி|Abp News
Delimitation: ஸ்டாலின் vs மத்திய அரசு: தொகுதி மறுசீரமைப்பை தமிழ்நாடு காத்திரமாக எதிர்ப்பது ஏன்? ஓர் எளிய விளக்கம்

நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை (Delimitation) நடவடிக்கைக்கு எதிராகத் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று வரைவு மசோதாவை தீ வைத்து எரித்தும் வீட்டு வாசலில் கருப்புக் கொடி ஏற்றியும் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு என்ன காரணம்? இதன் பின்னணி என்ன? விரிவாகக் காணலாம். தொகுதி மறுவரையறை என்றால் என்ன ? மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எல்லைகளை மாற்றி அமைப்பது, குறிப்பாக தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதே தொகுதி மறுவரையறை ஆகும். 1976ஆம் ஆண்டு இந்த நடவடிக்கை முடக்கிவைக்கப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் சிறப்பான பணியாற்றிய மாநிலங்களுக்குக் கொடுக்கும் வெகுமதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் 2026-க்குப் பிறகு எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது மக்களவையில், மக்களால் தேர்வு செய்யப்பட்ட 543 உறுப்பினர்கள் உள்ளனர். அரசமைப்புச் சட்டம் 550 பேர் வரை அனுமதிக்கிறது. இந்த நிலையில், மத்திய அரசு 850 தொகுதிகளாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. இதில் 815 இடங்கள் மாநிலங்களுக்கும் 35 இடங்கள் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒதுக்கப்பட உள்ளன. எனினும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த இது முக்கியம், இதனால் தென்னிந்திய மாநிலங்கள் பாதிக்கப்படாது என்று மத்திய அரசு சொல்கிறது. பிரச்சினையின் ஆணிவேர் எங்கே ? இந்தியா முழுவதும் மக்கள் தொகை ஒரே சீராக உயரவில்லை. உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் மக்கள் தொகை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள், மத்திய அரசின் குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியுள்ளன. தற்போது, புதிய மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே நாடாளுமன்ற எம்.பி.க்களின் எண்ணிக்கையை அதிகரித்தால், வடமாநிலங்களின் எம்.பி.க்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். அதேசமயம், நாடாளுமன்றத்தில் தென்னிந்திய எம்.பி.க்களின் சதவீதம் கணிசமாகக் குறைந்துவிடும். இதனால் வட இந்திய மாநிலங்களில் வெல்லும் கட்சிகளே மத்தியில் ஆட்சியைப் பிடிக்க முடியும். இதைத் தொடர்ந்து தென்னிந்திய மாநிலங்களுக்கான தேவைகளுக்கு மதிப்பு குறையும் என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் வாதம் என்ன ? தண்டனையா ?: மத்திய அரசின் பேச்சைக் கேட்டு, மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு வழங்கப்படும் "தண்டனையா இந்தத் தொகுதி மறுசீரமைப்பு? என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்புகிறார். அரசியல் பிரதிநிதித்துவம் : நாடாளுமன்றத்தில் வடமாநிலங்களின் ஆதிக்கம் அதிகரிக்கும். தமிழ்நாட்டின் குரல் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் முற்றிலுமாக பலவீனமடையும். கூட்டாட்சிக்கு ஆபத்து : இது வெறும் எம்.பி.க்கள் எண்ணிக்கை தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல; நாடாளுமன்றத்தில் மாநிலங்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதையும், மத்திய நிதியைப் பெறுவதையும் இது கடுமையாகப் பாதிக்கும் என்று விமர்சனம் எழுந்துள்ளது.

இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

தஞ்சை மாவட்டத்தில் 6063 பேர் தபால் வாக்குப்பதிவு... மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
top

தஞ்சை மாவட்டத்தில் 6063 பேர் தபால் வாக்குப்பதிவு... மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள் என 6,063 பேர் தபாலில் வாக்குப்பதிவு செய்துள்ளனர் என்று தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர், 40% க்கும் மேல் உள்ள மாற்றுத்திறனாளிகள் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 6,063 பேர் தபால் மூலம் வாக்குப் பதிவு செய்துள்ளனர். நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவை தொகுதிகளில் வசிக்கும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், தங்களின் ஜனநாயகக் கடமையை எளிதாக ஆற்றும் வகையில் "இல்லம் தேடிச் சென்று தபால் வாக்கு சேகரிக்கும்" திட்டத்தை மாவட்ட தேர்தல் நிர்வாகம் செயல்படுத்தி உள்ளது. அதன்படி, கடந்த ஏப்.13, 14, 15 ஆகிய மூன்று தினங்களில், தபால் வாக்களிக்க விண்ணப்பித்த வாக்காளர்களின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று வாக்குகளைச் சேகரிக்கப்பட்டது. இப்பணிகளைச் மேற்கொள்ள மாவட்டம் முழுவதும் மொத்தம் 100 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. இதில் திருவிடைமருதூர் தொகுதியில் 498 முதியோர்கள் மற்றும் 187 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 685 வாக்காளர்களுக்காக 12 குழுக்கள், கும்பகோணம் தொகுதியில் 705 முதியோர்கள் மற்றும் 206 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 911 வாக்காளர்களுக்காக 14 குழுக்கள், பாபநாசம் தொகுதியில் 484 முதியோர்கள் மற்றும் 242 மாற்றுத்திறனாளிகள் என 726 வாக்காளர்களுக்காக 13 குழுக்கள் அமைக்கப்பட்டது. திருவையாறு தொகுதியில் 389 முதியோர்கள் மற்றும் 184 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 573 வாக்காளர்களுக்காக 11 குழுக்கள், தஞ்சாவூர் தொகுதியில் 634 முதியோர்கள் மற்றும் 152 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 786 வாக்காளர்களுக்காக 13 குழுக்கள், ஒரத்தநாடு தொகுதியில் 632 முதியோர்கள் மற்றும் 143 மாற்றுத்திறனாளிகள் 775 வாக்காளர்களுக்காக 13 குழுக்கள் அமைக்கப்பட்டது. பட்டுக்கோட்டை தொகுதியில் 515 முதியோர்கள் மற்றும் 268 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 783 வாக்காளர்களுக்காக 10 குழுக்கள், பேராவூரணி தொகுதியில் 577 முதியோர்கள் மற்றும் 247 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 824 வாக்காளர்களுக்காக 14 குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 4,434 முதியோர்கள் மற்றும் 1,629 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 6,063 வாக்காளர்கள் இந்த வசதியைப் பெற்று உள்ளனர். மாவட்டம் முழுவதும் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ள நிலையில், 6,063 பேர் மட்டுமே தபால் மூலம் வாக்களித்துள்ளனர். மீதமுள்ள வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்க உள்ளதாக விருப்பம் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

16 மணி நேரம் முன்
திருக்குறள் அடிப்படையில் விஜய்யின் தேர்தல் அறிக்கை
top

திருக்குறள் அடிப்படையில் விஜய்யின் தேர்தல் அறிக்கை

சென்னை: அறுபது வயது வரையுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.2,500, ஆண்டுக்கு ஆறு இலவச காஸ் சிலிண்டர்கள், ஐந்து லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இந்தச் செய்தி Tamil Murasu ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

16 மணி நேரம் முன்
பொதுச் சேவையிலிருந்து ஓய்வுபெறும் உள்துறை அமைச்சின் நிரந்தரச் செயலாளர் பாங் கின் கியோங்
top

பொதுச் சேவையிலிருந்து ஓய்வுபெறும் உள்துறை அமைச்சின் நிரந்தரச் செயலாளர் பாங் கின் கியோங்

உள்துறை அமைச்சின் நிரந்தரச் செயலாளரான 59 வயது திரு பாங் கின் கியோங், வரும் ஜூன் 1ஆம் தேதி பொதுச் சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார். இந்தச் செய்தி Tamil Murasu ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

16 மணி நேரம் முன்