நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >TVK Vijay: அரசியலில் முழுநேரம் உழைக்க வேண்டும்.. விஜய்க்கு நிதின் நபின் அட்வைஸ்!

TVK Vijay: அரசியலில் முழுநேரம் உழைக்க வேண்டும்.. விஜய்க்கு நிதின் நபின் அட்வைஸ்!

வியாழன், ஏப்ரல் ௯, ௨௦௨௬|17 மணி நேரம் முன்|பேச்சி ஆவுடையப்பன்|Abp News
TVK Vijay: அரசியலில் முழுநேரம் உழைக்க வேண்டும்.. விஜய்க்கு நிதின் நபின் அட்வைஸ்!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக, விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அக்கட்சியின் தேசிய செயலாளர் நிதின் நபின் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 23ம் தேதி நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக களமிறங்குகிறது. அக்கட்சியை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைக்க பாஜக டெல்லி மேலிடம் முயற்சி செய்ததாக தகவல் வெளியானது. ஆனால் அதனை தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் செயல்படும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் மறுத்தனர். ஆனால் தமிழக வெற்றிக் கழகம் தங்களை கூட்டணியில் சேர்க்க அதிக இடங்கள், துணை முதலமைச்சர் பதவி போன்ற ஆஃபர்கள் வழங்கப்பட்டதாக தெரிவித்தனர். இருந்தாலும் கடைசியில் தவெக தனித்து தான் போட்டியிடுவதாக அறிவித்தது. இந்த நிலையில் ஏ.என்.ஐ. நிறுவனத்திற்கு பேட்டியளித்த நிதின் நபினிடம், “2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் அரசியல் வருகை” குறித்த கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த நிதின் நபின், முதலில் அரசியலில் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். பின்னர் விஜய் பற்றி பேசும்போது, “என் பார்வையில் அவர் அரசியலில் முதல் முறையாக முயற்சி செய்கிறார். எனவே அவருக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேசமயம் அரசியலில் முழுநேரமாக உழைக்க வேண்டும். இன்று ஏதோ ஒன்று கிடைத்துவிட்டு, நாளை எங்கே செல்வது என்பதை தீர்மானிக்கும் விஷயமல்ல அரசியல். இதில் ஒருவரின் நிலைமை எப்படி அமைகிறது என்பதை காலம்தான் சொல்லும்” என கூறினார். . தொடர்ந்து விஜய் கூட்டத்தை ஈர்ப்பதை ஒப்புக்கொண்ட நிதின் நபின், எனினும் இந்த விஷயத்தில் முன்கூட்டியே முடிவெடுப்பது என்பது சரியானது அல்ல. அது நிலையானதா என்பதை கணிக்க நேரமும், முயற்சியும் தேவை என குறிப்பிட்டார். அதனால் இந்த நிலையில் விஜய் பற்றி எதுவும் சொல்வது சரியாக இருக்காது. மக்களைத் திரட்டி ஒன்றிணைப்பதற்கு ஈர்ப்பு ஒரு காரணிதான். அது காலப்போக்கிலும் தொடர்ச்சியான முயற்சியாலும் மட்டுமே வரும் என்று நிதின் நபின் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்துடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததாக வெளியான தகவல் பற்றி கருத்து தெரிவித்த நிதின் நபின், எங்கள் கட்சி தற்போது அதிமுகவுடனான கூட்டணியில் கவனம் செலுத்தி வருகிறது. அதிமுகவுடனான கூட்டணி செயல்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு நன்றாக உள்ளது. ஒருவேளை எங்களுக்கு ஏதேனும் தேவை இருந்திருந்தால்,' பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கும். ஆனால் தற்போதைக்கு நாங்கள் எங்களின் தற்போதைய கட்டமைப்பிற்குள்ளேயே. செயல்பட்டு வருகிறோம். அப்படியான பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்று அவர் கூறினார்.

இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

‘வாக்கு கேட்டு வேட்பாளர்கள் வர வேண்டாம்’ ஜெயங்கொண்டத்தில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
top

‘வாக்கு கேட்டு வேட்பாளர்கள் வர வேண்டாம்’ ஜெயங்கொண்டத்தில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

ஜெயங்கொண்டம்,தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. அதன்படி ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட தி.மு.க., பா.ம.க. இந்தச் செய்தி Dailythanthi ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்
மொத்த வேட்பாளர்கள் எத்தனை பேர்.? யாருக்கு எந்த சின்னம்.? தேர்தல் ஆணையம் முக்கிய முடிவு
top

மொத்த வேட்பாளர்கள் எத்தனை பேர்.? யாருக்கு எந்த சின்னம்.? தேர்தல் ஆணையம் முக்கிய முடிவு

களம் இறங்கும் வேட்பாளர்கள் தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஏப்ரல் 6ஆம் தேதியோடு வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. சுமார் 7600 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர் இதனையடுத்து நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் 2500க்கும் மேற்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இன்று வேட்புமனுக்களை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இருந்து திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளாகும். இன்று காலை 11 மணியில் இருந்து பிற்பகல் 3 மணிவரை வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம். அதன் பிறகு வேட்புமனுவை திரும்பப் பெற முடியாது. வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள் இதனையடுத்து தேர்தல் சின்னங்களை ஒதுக்கும் பணியானது தொடங்கும். அந்த வகையில் அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்களை தேர்தல் நடத்தும் அதிகாரி ஒதுக்குவார். சில அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள் ஏற்கனவே தேர்தல் கமிஷனிடம் குறிப்பிட்ட சின்னங்களை பெற்றிருந்தால், அந்த சின்னங்களை தேர்தல் நடத்தும் அதிகாரி அனுமதிப்பார். மொத்தம் 184 பொதுச் சின்னங்களை தேர்தல் கமிஷன் பட்டியலிட்டுள்ளது . யாருக்கு எந்த சின்னம்.? ஆனால் ஒரே பொதுச் சின்னத்தை வேறு கட்சிகள் கேட்டிருந்தால், அது குலுக்கல் முறையில் முடிவு செய்யப்படும். இதற்காக ஒரு சீட்டில் வேட்பாளரின் பெயர், வரிசை எண் ஆகியவற்றை எழுதி குலுக்கி போட்டி சீட் எடுக்கப்படும். அப்போது யார் பெயருக்கு சீட்டு விழுகிறதோ அவருக்கு அந்த சின்னம் ஒதுக்கப்படும். அந்த சின்னம் கிடைக்காத வேட்பாளர்களுக்கு வேறு சின்னம் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்படும். குறிப்பிட்ட 3 சின்னங்களுமே கிடைக்கவில்லை என்றால் அந்த வேட்பாளருக்கான சின்னத்தை தேர்தல் நடத்தும் அதிகாரியே தேர்வு செய்வார். இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்
Stock News: பங்குச் சந்தையில் மீண்டும் ‘ரெட்’ அலர்ட் - காரணம் என்ன?
top

Stock News: பங்குச் சந்தையில் மீண்டும் ‘ரெட்’ அலர்ட் - காரணம் என்ன?

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையே இரு வார காலம் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால், லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலால் மீண்டும் வளைகுடாவில் பதற்றம் நிலவுகிறது. இதன் எதிரொலியாக மீண்டுள்ள இந்திய பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு நிலவுகிறது. இந்தச் செய்தி Yourstory ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்