நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🎬 சினிமா
  3. >108 திவ்ய தேசங்களில் வியப்பூட்டும் தனித்துவம் — நான்கு கரங்களில் சயன ராமர் காட்சி!
🎬 சினிமா

108 திவ்ய தேசங்களில் வியப்பூட்டும் தனித்துவம் — நான்கு கரங்களில் சயன ராமர் காட்சி!

வெள்ளி, ஏப்ரல் ௨௪, ௨௦௨௬|14 மணி நேரம் முன்|என்.நாகராஜன்|Abp News
108 திவ்ய தேசங்களில் வியப்பூட்டும் தனித்துவம் — நான்கு கரங்களில் சயன ராமர் காட்சி!

தஞ்சாவூர்: 108 திவ்ய தேசங்களில் வியப்பூட்டும் ராமர் தரிசனத்தை பார்க்க வேண்டுமா? எங்கும் காணாத அரிய கோலம் என்பதும் தெரியுங்களா? ஆமாங்க.. சயன ராமர் அற்புதமாக காட்சியளிக்கும் தலம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தஞ்சை மாவட்டம் திருப்புள்ளம்பூதங்குடி வல்வில் ராமர் கோயிலில் ஒரு சிறப்பு இருக்கிறது. இத்தலம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் மங்களசாசனம் செய்யப்பட்டது. இதை விட ஒரு சிறப்பு இறைவன் வேறு எங்கும் காண முடியாத நான்கு திருக்கரங்களுடன் சங்கு சக்கரதாரியாக சயன திருக்கோலத்தில் ராமர் காட்சி அளிக்கிறார். இராமாயண காவியத்தில் வரும் ஜடாயு மோட்சம் பெற்ற தலம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. புள் என்றால் பறவை. பூதம் என்றால் உடல். உயிர் நீத்த ஜடாயுவிற்கு இராமபிரானே முறைப்படி ஈமகாரியங்கள் செய்தார். எனவே இவ்வூர் புள்ளபூதங்குடி ஆயிற்று. கோதண்டத்தை மட்டும் கையில் வைத்துக்கொண்டு பெரியபிராட்டியை பிரிந்த நிலையில் பள்ளி கொண்டு சேவை சாதிக்கிறார். இராமாயண கதையின் படி குடிலுக்குள் இருந்த சீதாதேவியை இராவணன் குடிலுடன் பெயர்த்து செல்வதை கண்ட ஜடாயு, வான வெளியில் ராவணனை கடும் சண்டை நடந்தது. இறக்கைகளை கொண்டு தானே பறந்து பறந்து சண்டை செய்கிறாய் என இறக்கையை வெட்ட இராமா இராமா எனக் கூறிக்கொண்டே காட்டுக்குள் விழுந்தார் ஜடாயு. சீதையை தேடிய இராமன் இலட்சுமணனிடம் இராவணன் சீதையை தென்திசை நோக்கி தூக்கி செல்வதை கூறி உயிர் நீத்தார். ஜடாயு இராமனின் தந்தை தசரதனுக்கு உற்ற நண்பன். நட்பின்படி பார்த்தால் பெரிய தந்தை. எனவே கரும காரியங்களை செய்து கிழக்கே திருமுகம் காட்டி சயனம் கொண்டார். ஜடாயு மோட்சம் பெற்ற இடம் இதுவே. க்ருத்ர ராஜன் எனும் மன்னன் எம்பெருமானை நோக்கி கடும் தவம் செய்தான். வல்வில் ராமனாக புஜங்க சயனத்தில் பெருமானை தரிசித்தான். எனவே இங்குள்ள ஒரு தீர்த்தம் க்ருத்ர தீர்த்தம் ஆயிற்று. இப்படி ஒன்றல்ல... இரண்டல்ல பல சிறப்புகளை கொண்டு இத்தலம் விளங்கி வருகிறது. ராமன் இத்தலத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சியளிப்பது விசேஷத்திலும் விசேஷம். திருமங்கையாழ்வார் இங்கு வந்த போது, இக்கோயிலில் வேறு ஏதோ தெய்வம் இருப்பதாக கருதி, கவனிக்காமல் சென்றார். அப்போது பெரிய ஒளி தோன்றி அதிலிருந்து சங்கு சக்ரதாரியாக ராமன் காட்சியளித்தார். இதைக்கண்ட திருமங்கையாழ்வார், அறிய வேண்டியதை, அறியாமல் சென்றேனே என 10 பாசுரம் பாடினார். தந்தை தசரதருக்கு செய்ய வேண்டிய இறுதி காரியத்தை செய்ய முடியாவிட்டாலும், ஜடாயுவிற்கு செய்ததை நினைத்து மகிழ்ந்ததால் இத்தல ராமன் வல்வில் ராமன் என அழைக்கப்படுகிறார். பதவி உயர்வுக்காக பிரார்த்திப்பவர்கள், பிரகாரத்தில் உள்ள யோக நரசிம்மருக்கு திருமஞ்சனம் செய்து வழிபட்டால், உத்யோக உயர்வு கிடைக்கும் என்பது ஐதீகம். இதற்காகவே ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இவ்வாறு வந்து தங்கள் வேண்டுதல் நிறைவேறியவர்கள் மீண்டும் வந்து அபிஷேகம், அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடுகள் நடத்தி சுவாமியை மனமுருகி தரிசனம் செய்து மகிழ்கின்றனர். ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரத்தை கொண்ட இந்த கோவில், சிறிய சந்நிதியாக அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள ஒரு தீர்த்தம் க்ருத்ர தீர்த்தம் என்ற பெயர் பெற்றது. இது வடக்கு புறத்தில் அமைந்துள்ளது. வைகுண்ட ஏகாதசி உற்சவம் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். சிறப்பு பூஜைகள், ஆராதனைகள், பெருமாள் புறப்பாடு நடைபெறும். புதனுக்குரிய பரிகாரத் தலமாக கருதப்படும் இத்தலத்தில் பித்ருக்களுக்கு பரிகாரம் செய்வது நன்மை பயக்கும். திருமணத் தடை அகல ராமபிரானை வழிபட வேண்டும்.

இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

கலர்ஃபுல் டிசைனில் குர்தா... ஓட்டு போட வந்த திரிஷா அணிந்த இந்த டிரஸ்; விலை மட்டும் கேக்காதீங்க!
சினிமா

கலர்ஃபுல் டிசைனில் குர்தா... ஓட்டு போட வந்த திரிஷா அணிந்த இந்த டிரஸ்; விலை மட்டும் கேக்காதீங்க!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட்டில் கொடி கட்டி பறந்து வரும் இவர், நேற்று வியாழக்கிழமை தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி வாக்கு செலுத்து வந்தார். அதன்பிறகு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்நிலையில், நடிகை திரிஷா வாக்கு செலுத்த வந்த போது அணிந்திருந்த உடை தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நடிகை திரிஷா அணிந்திருந்த உடை "யாம் இந்தியா" என்ற இந்தியன் க்ளோதிங் பிராண்டின் ஷார்ட் குர்தா செட் ஆகும். இந்த பிராண்டின் ஸ்டைலைப் பொறுத்தவரை கலர்ஃபுல் டிசைன், பூக்கள் பிரிண்ட், லைட் வெயிட் பேப்ரிக், தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற கம்ஃபர்டபிள் அவுட்ஃபிட்டாக இருக்கிறது. குறிப்பாக வெளுத்து வாங்கும் இந்த வெயிலுக்கு ஏற்ற வகையில் அந்த உடை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பலரது கவனத்தையும் ஈர்க்கும் வகையிலும் அமைந்துள்ளது. இந்நிலையில், நடிகை திரிஷா அணிந்திருந்த அந்த உடையின் விலை குறித்த பேச்சும் எழுந்துள்ளது. அதனை பகிர்ந்துள்ள இணையவாசிகள் குர்தா செட்டின் விலை சுமார் 14 ஆயிரம் ரூபாய் என்று கூறுகிறார்கள். 'பிராண்டு என்றாலே விலை அதிகம்தான், கம்ஃபர்ட்டுக்காக வாங்குறது தவறில்லை' என்றும் சிலர் கூறியிருக்கிறார்கள். அதேநேரத்தில், இன்னும் சிலர், இந்த மாதிரியான டிசைன் உடையை ரூ. 300, 400-க்கே வாங்கலாம் என்றும் கூறுகிறார்கள். இப்படியாக நடிகை திரிஷா அணிந்திருந்த உடை பற்றிய பேச்சுக்கள் இணையத்தை கலக்கி வருகிறது. அத்துடன், நடிகை திரிஷா வாக்கு அளித்த பிறகு எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
விஜய் டிரஸ் கோட்... த.வெ.க-வுக்கு ஓட்டு போட்டா தற்குறியா? விட்டு விளாசிய ஃபரீனா ஆசாத்
சினிமா

விஜய் டிரஸ் கோட்... த.வெ.க-வுக்கு ஓட்டு போட்டா தற்குறியா? விட்டு விளாசிய ஃபரீனா ஆசாத்

தமழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி 2026 சட்டசபை தேர்தலை சந்தித்த விஜய், கட்சி தொடங்கியது முதலே பல சிக்கல்களை சந்தித்திருந்தாலும் வாக்குப்பதிவு நாளில் அவருக்கான ஆதருவு அதிகமாக இருந்த நிலையில், தற்போது சீரியல் நடிகை ஃபரீனா ஆசாத் விஜய்க்கு ஆதரவாக வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த ஒரு மாதம காலமாக நடைபெற்று வந்த தமிழக சட்டசபை தேர்தல் திருவிழா நேற்றுடன் முடிவடைந்த நிலையில், 234 தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. சுந்திரம் பெற்றது முதல் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு, 85 சதவீத வாக்குகள் பதிவாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. எப்போதும் இல்லாத வகையில் இந்த தேர்தலில் இளைஞர்கள் பலரும் அதிகளவில் தங்கள் வாக்குகளை செலுத்தினர். இந்த தேர்தலில் புதுமுகமாக களமிறங்கி பிரச்சாரங்களில் தாக்கத்தை ஏற்படுத்திய நடிகர் விஜய், தேர்தல் பிரச்சாரம் தொடங்கியதில் இருந்து காக்கி பேண்ட், வெள்ளை சட்டை அணிந்துகொண்டு தான் பல இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரின் ட்ரெஸ் கோட் இணையத்தில் அதிகமாக ட்ரெண்ட் ஆன நிலையில், வாக்களிக்க செல்லும்போது த.வெ.க தொண்டர்கள் இதேபோன்று ட்ரெஸ் கோட்டில் செல்ல வேண்டும் என்று கேட்க்கொண்டிருந்தார். அவரின் பேச்சை கேட்டுக்கொண்ட த.வெ.க தொண்டர்கள் பலரும் காக்கி பேண்ட், வெள்ளை சட்டை அணிந்து, தேர்தலில் வாக்களித்தனர். குறிப்பாக சினிமா துறையில், நடிகர் சிபிராஜ் நடிகர் விக்ரம், சிம்பு, ஜெய், இயக்குனர் பா.ரஞ்சித், மூத்த நடிகர் விஜயகுமார் உள்ளிட்ட பலரும் விஜயின் ஸ்டைலில் வந்து வாக்களித்தார். இதில் வாக்களித்து விட்டு வெளியில் வந்த நடிகரும் தயாரிப்பாளருமான வி.டி.வி கணேஷ், தான் டி.வி.கே.வுக்கு தான் வாக்களித்தேன். விஜய் தான் சமூகத்தின் மாற்றத்திற்கு சரியாக ஆள். த.வெ.க நிச்சயமாக ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறினார். அந்த வகையில் தற்போது பிரபல சின்னத்திரை நடிகை ஃப்ரீனா ஆசாத், விஜயின் ட்ரெஸ் கோட் அணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், விமர்சனங்களையும் பெற்றது. ஆனால் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஃபரீனா ஆசாத் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், என்னை டி.ம்.-லும் அன்ஃபாலோ-வும் செய்பவர்களுக்கு... நான் விரும்புகிறதற்கு வாக்களிப்பதால் நான் (தற்குறி) "கல்வியறிவில்லாதவள்" ஆகிவிட மாட்டேன். மற்றவர்களின் தேர்வை விமர்சிப்பதால் நீங்கள் "கல்வியுள்ளவர்" ஆகிவிட மாட்டீர்கள். View this post on Instagram A post shared by farina azad (@farina_azad_official) எல்லோரும் பிறந்தபோதே முதல்வர் (CM) அல்ல. ஒருவருக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பதில் தவறில்லை. அரசியல் பாதை என்னவென்று கேட்கிறவர்களுக்கு சொல்றேன். இது புதிய அரசியல், இளைஞர்களின் அரசியல். நீங்கள் புரிந்துகொள்வீர்கள். இனிமே இதுதான் அரசியல் என தரமான பதிலடி கொடுத்துள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் டிரெண்டாகி பலரும் பரீனாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
இனியாவது ஜன நாயகன் வெளியாகுமா?
சினிமா

இனியாவது ஜன நாயகன் வெளியாகுமா?

ஜன நாயகன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகுமா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்