நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >💻 தொழில்நுட்பம்
  3. >ஏன் மீண்டும் மனிதர்கள் நிலவுக்கு செல்லவில்லை?... நாசாவின் 'ஆர்டெமிஸ்' திட்டம் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?
💻 தொழில்நுட்பம்

ஏன் மீண்டும் மனிதர்கள் நிலவுக்கு செல்லவில்லை?... நாசாவின் 'ஆர்டெமிஸ்' திட்டம் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

வியாழன், ஏப்ரல் ௨, ௨௦௨௬|17 மணி நேரம் முன்|meenakshi sundaram s|The Indian Express
ஏன் மீண்டும் மனிதர்கள் நிலவுக்கு செல்லவில்லை?... நாசாவின் 'ஆர்டெமிஸ்' திட்டம் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

1969-ல் அப்பல்லோ விண்கலம் மூலம் நிலவில் மனிதன் கால்பதித்த அந்த வரலாற்றுச் சாதனைக்குப் பிறகு, 50 ஆண்டுகளைக் கடந்தும் நாம் ஏன் இன்னும் அங்கு மீண்டும் செல்லவில்லை என்ற கேள்வி பலருக்கும் எழலாம். நாசாவின் நவீன நிலவுப் பயணத் திட்டமான 'ஆர்டெமிஸ்', மெதுவாகவும் பல தாமதங்களுடனும் நகர்வது பொதுமக்களிடையே ஒருவித சலிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதற்குப் பின்னால் உள்ள உண்மையான காரணங்கள் தொழில்நுட்ப ரீதியானவை. 1969 ஜூலை மாதம் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால்பதித்த போது, அது "மனிதனின் சிறிய அடி, மனிதகுலத்தின் மிகப்பெரிய பாய்ச்சல்" என்று போற்றப்பட்டது. ஆனால், அத்திட்டம் எவ்வளவு ஆபத்தானது என்பதைப் பலர் மறந்துவிடுகிறார்கள். பனிப்போர் காலத்தின் கட்டாயத்தினால் மிகக் குறுகிய காலத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இன்றைய காலக்கட்டத்துடன் ஒப்பிடும்போது, அன்று விண்வெளி வீரர்கள் ஏற்றுக் கொண்ட ஆபத்துகள் மிக அதிகம். அப்பல்லோ 11 தரையிறங்கும்போது கணினியில் எச்சரிக்கைகள் வந்தும், மிஷன் கன்ட்ரோல் "தொடருங்க" என்று கூறியது ஒரு மிகப்பெரிய துணிச்சலான முடிவு. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க ஆர்டெமிஸ் திட்டம் என்பது நிலவில் வெறும் கொடியை நடுவதற்காக மட்டும் உருவாக்கப்படவில்லை. நிலவின் தென்பகுதியில், குறிப்பாக பனிக்கட்டிகள் உள்ள இடங்களில் மனிதர்கள் தங்கி ஆய்வு செய்யக்கூடிய ஒரு நிலையான உள்கட்டமைப்பை உருவாக்குவதே இதன் நோக்கம். இதற்காக அப்பல்லோ எதிர்கொள்ளாத புதிய சவால்களை ஆர்டெமிஸ் தீர்க்க வேண்டியுள்ளது. நீண்ட கால உயிர் காக்கும் அமைப்புகள் (Life support systems), மீண்டும் பயன்படுத்தக்கூடிய மற்றும் பாதுகாப்பான லேண்டர்கள், ஆழமான விண்வெளித் தொடர்பு வசதிகள் போன்றவற்றை தீர்க்க வேண்டும். நிலவுக்கு மனிதர்களைத் தரை இறக்குவதற்குப் பல புதிய தொழில் நுட்பங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதில் ஏற்படும் சிறு பிழையும் ஒட்டுமொத்தத் திட்டத்தையும் பாதிக்கும். ஹைட்ரஜன் எரிபொருள் கசிவு, ஹீலியம் அழுத்தம் தொடர்பான சிக்கல்கள், ஓரியன் விண்கலத்தின் வெப்பத் தடுப்புக் கவசம் குறித்த கவலைகள் திட்டத்தைத் தாமதப்படுத்துகின்றன. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலவு லேண்டர் இன்னும் உருவாக்க நிலையில் இருப்பதால், 2024-இல் நடக்க வேண்டிய பயணம் தற்போது 2028-க்குத் தள்ளப்பட்டுள்ளது. அப்பல்லோ 13 பயணத்தின் போது ஆக்சிஜன் டேங்க் வெடித்து, வீரர்கள் நூலிழையில் உயிர் தப்பிய நிகழ்வு நாசாவின் கலாச்சாரத்தையே மாற்றியது. விண்வெளியில் தோல்விகள் மன்னிக்கப்பட மாட்டாது என்பதை உணர்ந்த நாசா, தற்போது ஆர்டெமிஸ் திட்டத்தில் வேகத்தை விடப் பாதுகாப்பிற்கே முக்கியத்துவம் அளிக்கிறது. தாமதங்கள் இருந்தாலும், ஆர்டெமிஸ் பல வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்டுள்ளது. நிலவில் கால்பதிக்கும் முதல் பெண்மணி மற்றும் முதல் கறுப்பினத்தவர் (First person of color) ஆர்டெமிஸ் திட்டத்தின் மூலமே அங்கு செல்லவுள்ளனர். ஸ்பேஸ் எக்ஸ், ப்ளூ ஆரிஜின் போன்ற தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நாசா செயல்படுவது ஒரு புதிய மாற்றமாகும். நிலவில் நிரந்தரத் தளங்களை அமைப்பதன் மூலம், எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்திற்குச் செல்வதற்கான ஒரு பயிற்சித் தளமாக நிலவைப் பயன்படுத்தத் திட்டம் உள்ளது. நிலவு என்பது இனி 'ஃபினிஷிங் லைன்' அல்ல; அது மனித குலத்தின் அடுத்த கட்டப் பயணத்திற்கான ஒரு 'தொடக்கப் புள்ளி'. இந்த முறை நாம் நிலவுக்குத் திரும்புவது வெறும் வருகைக்காக அல்ல, அங்கு நிரந்தரமாகத் தங்குவதற்காக. இதனால்தான் இந்தத் தாமதங்களும், கூடுதல் சோதனைகளும் தவிர்க்க முடியாததாகின்றன.

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

The Indian Express இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

1,900° செல்சியஸ் வெப்பம், லாவா பந்து... ஜேம்ஸ் வெப் கண்டுபிடித்த விசித்தர கோள்!
தொழில்நுட்பம்

1,900° செல்சியஸ் வெப்பம், லாவா பந்து... ஜேம்ஸ் வெப் கண்டுபிடித்த விசித்தர கோள்!

விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இதுவரை நம்பி வந்த அடிப்படை விதியை, TOI-561 b என்ற விசித்திரமான கோள் சுக்குநூறாக உடைத்தெறிந்து உள்ளது. நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அனுப்பியுள்ள தரவுகள், ஒட்டுமொத்த அறிவியல் உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வழக்கமாக, ஒரு நட்சத்திரத்திற்கு மிக மிக அருகில் இருக்கும் சிறிய பாறைக்கோள்கள், அந்த நட்சத்திரத்தின் கடும் வெப்பத்தால் தனது வளிமண்டலத்தை இழந்து வெறும் மொட்டைப் பாறையாகவே இருக்கும் என்பதுதான் இதுவரை இருந்த கணக்கு. ஆனால், TOI-561 b அந்த கணக்கை தப்பு என்று நிரூபித்துள்ளது. இந்த கோள் தனது நட்சத்திரத்தை வெறும் 10 மணி நேரத்தில் சுற்றி முடித்துவிடுகிறது. (நமது பூமியில் ஒருநாள் முடிவதற்குள் அங்கே 2 வருடங்கள் முடிந்துவிடும்.) நமது சூரியனை விட 2 மடங்கு அதிக வயது கொண்ட நட்சத்திரத்தை இது சுற்றி வருகிறது. இந்தக் கோளைப் பற்றி ஆய்வாளர்கள் கூறும் தகவல்கள் இன்னும் சுவாரசியமானவை. இது வெறும் பாறையாக இருந்திருந்தால் அதன் வெப்ப நிலை 2,700 டிகிரி செல்சியஸாக இருந்திருக்க வேண்டும். ஆனால், ஜேம்ஸ் வெப் அளவிட்ட போது அது 1,800 டிகிரியாக மட்டுமே இருந்தது. இந்த 1,000 டிகிரி குறைவிற்குக் காரணம், அங்கே இருக்கும் தடிமனான வளிமண்டலம் தான். இந்தக் கோளின் உட்புறம் உருகிய குழம்பாக (Magma) உள்ளது. இதிலிருந்து வாயுக்கள் வெளியேறி வளிமண்டலத்தை நிரப்புகின்றன, அதே சமயம் வளிமண்டல வாயுக்களை அடியில் உள்ள மேக்மா மீண்டும் உறிஞ்சிக் கொள்கிறது. இந்த ஒரு 'ரீசைக்கிள்' முறையால்தான் வளிமண்டலம் அழியாமல் நீடிக்கிறது. அங்கே சிலிக்கேட் துகள்களால் ஆன பிரகாசமான மேகங்கள் இருக்கலாம், அவை நட்சத்திர ஒளியைப் பிரதிபலித்துக் கோளைக் குளிர்விக்க உதவுகின்றன. இவ்வளவு சிறிய மற்றும் வெப்பமான ஒரு கோள் இவ்வளவு காலம் வளிமண்டலத்தைத் தக்கவைத்திருப்பது சாத்தியமே இல்லை என்றுதான் நாங்கள் கணித்திருந்தோம் என்கிறார் ஆய்வாளர் நிகோல் வாலக். இதுவரை விண்வெளியில் வளிமண்டலம் உள்ள கோள்களையும், இல்லாத கோள்களையும் பிரிக்கப் பயன்படுத்தப்பட்ட 'காஸ்மிக் ஷோர்லைன்' (Cosmic Shoreline) என்ற எல்லையையே இந்தக் கண்டுபிடிப்பு இப்போது கேள்விக்குறியாக்கியுள்ளது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி சுமார் 37 மணி நேரம் தொடர்ந்து கண்காணித்து இந்தத் தரவுகளை வழங்கியுள்ளது. நமது கற்பனைக்கும் எட்டாத பல அதிசயங்கள் பிரபஞ்சத்தின் மூலைகளில் ஒளிந்து கிடக்கின்றன என்பதற்கு இந்த 'ஈரமான லாவா பந்து' ஒரு மிகச்சிறந்த உதாரணம். இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
ரூ.5,000 வரை இனி யு.பி.ஐ பின் தேவையில்லை... பிங்கர் பிரிண்ட் மூலம் பணம் அனுப்பும் வசதி!
தொழில்நுட்பம்

ரூ.5,000 வரை இனி யு.பி.ஐ பின் தேவையில்லை... பிங்கர் பிரிண்ட் மூலம் பணம் அனுப்பும் வசதி!

இந்தியாவின் முன்னணி ஃபின்டெக் (Fintech) நிறுவனமான கிரெட் (CRED) தனது பயனர்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எளிதாக்கும் வகையில் புரட்சிகரமான புதியவசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி யு.பி.ஐ மூலம் பணம் அனுப்பும் போது 4 அல்லது 6 இலக்க பின் நம்பரை டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை; உங்க ஸ்மார்ட்போனில் உள்ள பயோமெட்ரிக் (Biometric) வசதிகளைக் கொண்டே நொடியில் பணப் பரிமாற்றம் செய்ய முடியும். தேசிய கொடுப்பனவு கழகத்துடன் (NPCI) இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய முறையில், பயனர்கள் தங்கள் மொபைலில் உள்ள பிங்கர் பிரிண்ட் (Fingerprint) பேஸ் அன்லாக் (Face Unlock) வசதியை பயன்படுத்தி பாதுகாப்பாக பணத்தை அனுப்பலாம். இது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் முன்பை விட வேகமாகவும், எளிமையாகவும் மாற்றுகிறது. பொது இடங்களில் பணப்பரிமாற்றம் செய்யும்போது, மற்றவர்கள் உங்க பின் நம்பரை பார்த்துவிடுவார்களோ என்ற அச்சம் இனி தேவையில்லை. அவசரத்தில் தவறான பின் நம்பரை உள்ளிடுவதால் பரிவர்த்தனை தோல்வி அடைவதைத் தடுத்து, தடையற்ற சேவையை இது உறுதி செய்கிறது. கிரெட் செயலியின் கீழ் வரும் அனைத்து முக்கிய சேவைகளுக்கும் இந்த பயோமெட்ரிக் முறை பொருந்தும். கிரெடிட் கார்டு பில் செலுத்துதல், மின்சாரம், தண்ணீர் போன்ற பயன்பாட்டுக் கட்டணங்கள் (Utility Bills), கடைகளில் உள்ள QR கோடை ஸ்கேன் செய்து பணம் செலுத்துதல் (Scan & Pay), தனிநபர்களுக்குப் பணம் அனுப்புதல், வங்கி இருப்புச் சரிபார்த்தல் (Balance Check). தற்போதைய முதற்கட்டமாக, ரூ. 5,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த பயோமெட்ரிக் முறையைப் பயன்படுத்த முடியும். இது ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ் ஆகிய இரு இயங்குதளங்களிலும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்க மொபைலில் ஏற்கனவே உள்ள பாதுகாப்பு சென்சார்கள் மூலமே இது செயல்படுவதால் கூடுதல் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பணப் பரிவர்த்தனைகளை மேம்படுத்த என்.பி.சி.ஐ எடுத்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக கிரெட் நிறுவனத்திற்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுமார் 1.5 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ள கிரெட், இந்த மாற்றத்தின் மூலம் இந்திய டிஜிட்டல் பேமெண்ட் உலகில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்
AC Remote | ரிமோட் இல்லாமலேயே ஏசியை ஆன் பண்ணலாம்.. எப்படி தெரியுமா? - பலருக்கும் தெரியாத டெக்னிக்!
தொழில்நுட்பம்

AC Remote | ரிமோட் இல்லாமலேயே ஏசியை ஆன் பண்ணலாம்.. எப்படி தெரியுமா? - பலருக்கும் தெரியாத டெக்னிக்!

ரிமோட் இல்லாமல் அல்லது ரிமோட் தொலைந்துவிட்டால் உங்கள் வீட்டு ஏசியை எப்படி ஆன் செய்யலாம் என்பது குறித்து இந்த செய்திகுறிப்பில் விரிவாக பார்க்கலாம். இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

16 மணி நேரம் முன்