நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >💻 தொழில்நுட்பம்
  3. >நிலைகுலைந்த கிரீஸ்: சஹாரா புழுதி புயலால் ரத்தச் சிவப்பாக மாறிய வானம்!
💻 தொழில்நுட்பம்

நிலைகுலைந்த கிரீஸ்: சஹாரா புழுதி புயலால் ரத்தச் சிவப்பாக மாறிய வானம்!

வியாழன், ஏப்ரல் ௨, ௨௦௨௬|19 மணி நேரம் முன்|meenakshi sundaram s|The Indian Express
நிலைகுலைந்த கிரீஸ்: சஹாரா புழுதி புயலால் ரத்தச் சிவப்பாக மாறிய வானம்!

ஏப்ரல் 1, 2026 அன்று கிரேக்கத்தில் விடிந்த காலை, அங்கிருந்த மக்களுக்கு ஒரு பேரதிர்ச்சியைத் தந்தது. வானம் வழக்கமான நீல நிறத்திற்குப் பதிலாக, ரத்தச் சிவப்பாகவும், அடர் ஆரஞ்சு நிறத்திலும் காட்சியளித்தது. ஏதோ சயின்ஸ்-பிக்‌ஷன் (Sci-fi) படத்தில் வருவது போலவும், உலகம் அழியப்போகும் 'அபோகலிப்டிக்' (Apocalyptic) சூழல் போன்றும் அந்தப் பிரதேசம் மாறியிருந்தது. இந்த விசித்திர நிகழ்வுக்கு காரணம், ஆப்ரிக்காவின் சஹாரா பாலைவனத்தில் இருந்து கிளம்பிய மாபெரும் புழுதி புயல்தான். சஹாரா மணலில் உள்ள 'இரும்பு ஆக்சைடு' (Iron Oxides) எனப்படும் நுண் துகள்கள், வளிமண்டலத்தில் சூரிய ஒளியைச் சிதறடிக்கும்போது வானம் சிவப்பாக மாறுகிறது. எர்மினியோ புயலால் உருவான மணிக்கு 120 கி.மீ வேகத்திலான தெற்கு காற்றானது, ஆப்ரிக்க மணலை நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் கடந்து கிரீஸ் மற்றும் லிபியாவிற்கு வாரி அள்ளி வந்து கொட்டியது. புழுதி மூட்டம் காரணமாக 1,000 மீ. தூரத்திற்கு அப்பால் இருப்பவை கண்ணுக்குத் தெரியாத நிலை ஏற்பட்டது. More footage from Greece: https://t.co/sAJFq6uKiQ pic.twitter.com/YXZkOrEmvw — Suppressed News. (@SuppressedNws1) April 1, 2026 இது ஒரு வழக்கமான வசந்த கால நிகழ்வுதான் என்றாலும், இம்முறை அதன் தாக்கம் மிகக் கடுமையாக இருந்தது. ரத்தச் சிவப்பு வானத்தால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. லண்டனிலிருந்து வந்த விமானங்கள் அதென்ஸ் மற்றும் கோர்ஃபு நகரங்களுக்குத் திருப்பி விடப்பட்டன. படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, ஈஸ்டர் விடுமுறைப் பயணங்கள் முடங்கின. கிரீட்டின் பச்சியா அம்மோஸ் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் ஒரு லாரி தலைகீழாகக் கவிழ்ந்தது. முன்னெச்சரிக்கையாகப் பள்ளிகள் மூடப்பட்டன மற்றும் பொதுமக்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. Rare Red Sandstorm Sweeps through Crete Greece and Libya. The Sandstorm is expected to start hitting Egypt and other areas in the upcoming hours. Videos are from Greece and Libya today. No filters, this is how it looks like: pic.twitter.com/TLoKvC0biD — Suppressed News. (@SuppressedNws1) April 1, 2026 இந்த அழகிய நிறத்திற்குப் பின்னால் ஒரு உடல்நல அபாயமும் மறைந்திருந்தது. நுண்ணிய புழுதித் துகள்களைச் சுவாசிப்பது நுரையீரலில் எரிச்சலை ஏற்படுத்தும். ஆஸ்துமா மற்றும் இதயப் பாதிப்பு உள்ளவர்கள் வெளியே வர வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரித்தனர். இந்தப் புழுதியுடன் பாக்டீரியாக்களும் கலந்து வர வாய்ப்புள்ளதால், பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இந்த விசித்திரமான புழுதி மேகம் தற்போது எகிப்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. ஒரு கண்டத்தில் உள்ள பாலைவன மணல், கடல் கடந்து வந்து மற்றொரு கண்டத்தின் வானத்தையே மாற்றியமைப்பது, இந்த உலகம் எவ்வளவு நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது என்பதை நமக்கு மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது.

இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

The Indian Express இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

1,900° செல்சியஸ் வெப்பம், லாவா பந்து... ஜேம்ஸ் வெப் கண்டுபிடித்த விசித்தர கோள்!
தொழில்நுட்பம்

1,900° செல்சியஸ் வெப்பம், லாவா பந்து... ஜேம்ஸ் வெப் கண்டுபிடித்த விசித்தர கோள்!

விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இதுவரை நம்பி வந்த அடிப்படை விதியை, TOI-561 b என்ற விசித்திரமான கோள் சுக்குநூறாக உடைத்தெறிந்து உள்ளது. நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அனுப்பியுள்ள தரவுகள், ஒட்டுமொத்த அறிவியல் உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வழக்கமாக, ஒரு நட்சத்திரத்திற்கு மிக மிக அருகில் இருக்கும் சிறிய பாறைக்கோள்கள், அந்த நட்சத்திரத்தின் கடும் வெப்பத்தால் தனது வளிமண்டலத்தை இழந்து வெறும் மொட்டைப் பாறையாகவே இருக்கும் என்பதுதான் இதுவரை இருந்த கணக்கு. ஆனால், TOI-561 b அந்த கணக்கை தப்பு என்று நிரூபித்துள்ளது. இந்த கோள் தனது நட்சத்திரத்தை வெறும் 10 மணி நேரத்தில் சுற்றி முடித்துவிடுகிறது. (நமது பூமியில் ஒருநாள் முடிவதற்குள் அங்கே 2 வருடங்கள் முடிந்துவிடும்.) நமது சூரியனை விட 2 மடங்கு அதிக வயது கொண்ட நட்சத்திரத்தை இது சுற்றி வருகிறது. இந்தக் கோளைப் பற்றி ஆய்வாளர்கள் கூறும் தகவல்கள் இன்னும் சுவாரசியமானவை. இது வெறும் பாறையாக இருந்திருந்தால் அதன் வெப்ப நிலை 2,700 டிகிரி செல்சியஸாக இருந்திருக்க வேண்டும். ஆனால், ஜேம்ஸ் வெப் அளவிட்ட போது அது 1,800 டிகிரியாக மட்டுமே இருந்தது. இந்த 1,000 டிகிரி குறைவிற்குக் காரணம், அங்கே இருக்கும் தடிமனான வளிமண்டலம் தான். இந்தக் கோளின் உட்புறம் உருகிய குழம்பாக (Magma) உள்ளது. இதிலிருந்து வாயுக்கள் வெளியேறி வளிமண்டலத்தை நிரப்புகின்றன, அதே சமயம் வளிமண்டல வாயுக்களை அடியில் உள்ள மேக்மா மீண்டும் உறிஞ்சிக் கொள்கிறது. இந்த ஒரு 'ரீசைக்கிள்' முறையால்தான் வளிமண்டலம் அழியாமல் நீடிக்கிறது. அங்கே சிலிக்கேட் துகள்களால் ஆன பிரகாசமான மேகங்கள் இருக்கலாம், அவை நட்சத்திர ஒளியைப் பிரதிபலித்துக் கோளைக் குளிர்விக்க உதவுகின்றன. இவ்வளவு சிறிய மற்றும் வெப்பமான ஒரு கோள் இவ்வளவு காலம் வளிமண்டலத்தைத் தக்கவைத்திருப்பது சாத்தியமே இல்லை என்றுதான் நாங்கள் கணித்திருந்தோம் என்கிறார் ஆய்வாளர் நிகோல் வாலக். இதுவரை விண்வெளியில் வளிமண்டலம் உள்ள கோள்களையும், இல்லாத கோள்களையும் பிரிக்கப் பயன்படுத்தப்பட்ட 'காஸ்மிக் ஷோர்லைன்' (Cosmic Shoreline) என்ற எல்லையையே இந்தக் கண்டுபிடிப்பு இப்போது கேள்விக்குறியாக்கியுள்ளது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி சுமார் 37 மணி நேரம் தொடர்ந்து கண்காணித்து இந்தத் தரவுகளை வழங்கியுள்ளது. நமது கற்பனைக்கும் எட்டாத பல அதிசயங்கள் பிரபஞ்சத்தின் மூலைகளில் ஒளிந்து கிடக்கின்றன என்பதற்கு இந்த 'ஈரமான லாவா பந்து' ஒரு மிகச்சிறந்த உதாரணம். இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
ரூ.5,000 வரை இனி யு.பி.ஐ பின் தேவையில்லை... பிங்கர் பிரிண்ட் மூலம் பணம் அனுப்பும் வசதி!
தொழில்நுட்பம்

ரூ.5,000 வரை இனி யு.பி.ஐ பின் தேவையில்லை... பிங்கர் பிரிண்ட் மூலம் பணம் அனுப்பும் வசதி!

இந்தியாவின் முன்னணி ஃபின்டெக் (Fintech) நிறுவனமான கிரெட் (CRED) தனது பயனர்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எளிதாக்கும் வகையில் புரட்சிகரமான புதியவசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி யு.பி.ஐ மூலம் பணம் அனுப்பும் போது 4 அல்லது 6 இலக்க பின் நம்பரை டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை; உங்க ஸ்மார்ட்போனில் உள்ள பயோமெட்ரிக் (Biometric) வசதிகளைக் கொண்டே நொடியில் பணப் பரிமாற்றம் செய்ய முடியும். தேசிய கொடுப்பனவு கழகத்துடன் (NPCI) இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய முறையில், பயனர்கள் தங்கள் மொபைலில் உள்ள பிங்கர் பிரிண்ட் (Fingerprint) பேஸ் அன்லாக் (Face Unlock) வசதியை பயன்படுத்தி பாதுகாப்பாக பணத்தை அனுப்பலாம். இது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் முன்பை விட வேகமாகவும், எளிமையாகவும் மாற்றுகிறது. பொது இடங்களில் பணப்பரிமாற்றம் செய்யும்போது, மற்றவர்கள் உங்க பின் நம்பரை பார்த்துவிடுவார்களோ என்ற அச்சம் இனி தேவையில்லை. அவசரத்தில் தவறான பின் நம்பரை உள்ளிடுவதால் பரிவர்த்தனை தோல்வி அடைவதைத் தடுத்து, தடையற்ற சேவையை இது உறுதி செய்கிறது. கிரெட் செயலியின் கீழ் வரும் அனைத்து முக்கிய சேவைகளுக்கும் இந்த பயோமெட்ரிக் முறை பொருந்தும். கிரெடிட் கார்டு பில் செலுத்துதல், மின்சாரம், தண்ணீர் போன்ற பயன்பாட்டுக் கட்டணங்கள் (Utility Bills), கடைகளில் உள்ள QR கோடை ஸ்கேன் செய்து பணம் செலுத்துதல் (Scan & Pay), தனிநபர்களுக்குப் பணம் அனுப்புதல், வங்கி இருப்புச் சரிபார்த்தல் (Balance Check). தற்போதைய முதற்கட்டமாக, ரூ. 5,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்த பயோமெட்ரிக் முறையைப் பயன்படுத்த முடியும். இது ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ் ஆகிய இரு இயங்குதளங்களிலும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்க மொபைலில் ஏற்கனவே உள்ள பாதுகாப்பு சென்சார்கள் மூலமே இது செயல்படுவதால் கூடுதல் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் பணப் பரிவர்த்தனைகளை மேம்படுத்த என்.பி.சி.ஐ எடுத்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக கிரெட் நிறுவனத்திற்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுமார் 1.5 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ள கிரெட், இந்த மாற்றத்தின் மூலம் இந்திய டிஜிட்டல் பேமெண்ட் உலகில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்
AC Remote | ரிமோட் இல்லாமலேயே ஏசியை ஆன் பண்ணலாம்.. எப்படி தெரியுமா? - பலருக்கும் தெரியாத டெக்னிக்!
தொழில்நுட்பம்

AC Remote | ரிமோட் இல்லாமலேயே ஏசியை ஆன் பண்ணலாம்.. எப்படி தெரியுமா? - பலருக்கும் தெரியாத டெக்னிக்!

ரிமோட் இல்லாமல் அல்லது ரிமோட் தொலைந்துவிட்டால் உங்கள் வீட்டு ஏசியை எப்படி ஆன் செய்யலாம் என்பது குறித்து இந்த செய்திகுறிப்பில் விரிவாக பார்க்கலாம். இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

16 மணி நேரம் முன்